Published:Updated:

பத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்!

பத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
பத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்!

பத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்!

பத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்!

பத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்!

Published:Updated:
பத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
பத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்!

ஜாதகத்தில் லக்னத்துக்கு 10-ம் இடம் தொழில் ஸ்தானம். இந்த இடத்தில் அமைந்திருக்கும் கிரக நிலைகளின்படியே நம்முடைய தொழில் மற்றும் பணிகள் அமையும். அவ்வகையில், ஜாதகத்தில் 10-ம் இடத்தில் என்னென்ன கிரகம் இருந்தால், என்னென்ன தொழில் மற்றும் பணி வாய்ப்புகள் அமையும் என்பதைத் தெரிந்துகொள்வோமா!

சூரியன்: 10-ம் இடத்தில் சூரியன் இருந்தால், அரசாங்க நன்மை கிடைக்கும். அரசியல், மருத்துவம், சமூக சேவை, மின்னணுத் துறை ஆகியவை தொடர்பான பணி அல்லது தொழில் அமையும்.

சந்திரன்: உணவு, திரவப்பொருள்கள் விற்பனை செய்தல், கடல் கடந்து செல்வது, வியாபாரம், வேளாண்மை, மக்களுக்கு உபதேசம் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி, பூமி, வீடு போன்றவற்றைச் சார்ந்த தொழில் யோகம் கிடைக்கும்.

பத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்!

செவ்வாய்: விவசாயம், ரியல் எஸ்டேட், நவீன பொறியியல் துறை, இரும்பு, நெருப்பு, தொல்பொருள் ஆய்வு, அரசு வேலை, காவல், ராணுவம், தீயணைப்புத் துறை, மருத்துவம் சார்ந்த தொழில் அல்லது பணி அமையும்.

புதன்: பல்கலை வித்தகர், கணக்கர், தணிக்கை, எழுத்து, மளிகை, சில்லறை வர்த்தகம், தரகு, புலனாய்வு, செய்தி மற்றும் தகவல்தொடர்பு, விண்வெளி, கல்வி, பதிப்பகம், கணிதம், சட்டம், பொறியியல், ஆலோசனை மையங்கள் நடத்துவது போன்றவை தொழிலாக அமையும்.

குரு: கல்வித் துறை, ஆன்மிகம், நீதி, நிதி, சட்டம், தர்ம ஸ்தாபனம், அறநிலையத் துறை, தூதரகம், வங்கி, மத போதனை, கடற்படை, மரபியல், யோகா, ஜோதிடம், பொருளாதாரத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றைச் சார்ந்து உங்களின் தொழில் அல்லது உத்தியோகம் அமையும்.

சுக்கிரன்: பொன், வெள்ளி மற்றும் ரத்தின விற்பனை, அழகுப் பொருள்கள், சொகுசுப் பொருள்கள் விற்பனை, வங்கி, வட்டி, ஆயுள் காப்பீடு, நிதி, நீதித் துறை, கலைத்தொழில், தங்கும் விடுதி, இனிப்பு, சுவையான உணவு சார்ந்த தொழிலகங்கள், கருவூலங்கள் ஆகியவை சார்ந்த தொழில் அல்லது பணி அமையும்.

சனி: பொறியியல், தொல்பொருள் ஆய்வு, சுரங்கப் பாதை, வெடிகுண்டு தயாரிப்பு, சுங்க இலாகா, உளவுத் துறை, கால்நடை, கட்டடப் பணி, பழைய பொருள் வியாபாரம், ஆராய்ச்சி, ஆலோசனை, விமானத் துறை, உணவு விடுதி, உரம் மற்றும் தோல் தொடர்பான கடின வேலைகள் அமையும்.

ராகு: ரசாயனப் பொருள்கள் விற்பனை, தொழுநோய் மருத்துவம், மாந்திரீகம் செய்தல், ராணுவம், காவல் துறை, புலனாய்வுத் துறை, வாகன ஓட்டுநர், சினிமா, பழைய பொருள்கள் விற்பனை, சட்டத்துக்குப் புறம்பான தொழில் ஆகியவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேது: ஜோதிடம், மருத்துவம், ஆன்மிகம், சட்டத்துறை, தையல் கடை, மின் கம்பிகள் சம்பந்தமான தொழில், நூற்பாலை பணி, மதபோதகர், துறவறம், மந்திர சக்தியால் சிகிச்சை அளித்தல் போன்ற தொழில்கள் அமையும்.

- காந்தி முருகேஷ்வர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism