Published:Updated:

இந்த வார ராசிபலன்: மார்ச் - 25 முதல் 31 வரை

இந்த வார ராசிபலன்: மார்ச் - 25 முதல் 31 வரை
இந்த வார ராசிபலன்: மார்ச் - 25 முதல் 31 வரை

மேஷராசி அன்பர்களே!

தேவையான அளவுக்குப் பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலருக்குச் சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வார முற்பகுதியில் தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.

வியாபாரத்தில்  விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அறிவுரை மனதுக்கு ஆறுதல் தரும்.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரித்தாலும் போதிய பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை. எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 30, 31
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,6
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 25, 26, 27

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

ரிஷபராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் உதவி உண்டு. பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும்.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.
மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சி யான வாரம். எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 26, 27
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,9
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 28, 29

வழிபடவேண்டிய தெய்வம்: வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


மிதுனராசி அன்பர்களே!

வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாரப் பிற்பகுதியில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது.
மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 27, 28, 29
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 30, 31

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

கடகராசி அன்பர்களே!

பண வரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட  இப்போது கடன் வாங்கு வதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடையக் கூடுதலான முயற்சியும் உழைப்பும்  தேவை.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.

மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28, 29, 30, 31
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1, 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

சிம்மராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட லாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 30, 31
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  2,4  

வழிபடவேண்டிய தெய்வம்:   சூரியன்

பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும் 
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை, 
மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்றவாறே! .


கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் -மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்தாலும் உடனே நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காததுடன், கிடைத்த வாய்ப்பு களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 26, 27
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1, 3, 6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையுமிடம் ஆலந்துறை யதுவே.

துலாராசி அன்பர்களே!

வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசிய செலவுகளாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ எதிர்பார்க்க முடியாது.

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பெற்றோர் அன்பு பாராட்டுவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28, 29
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  2, 5

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

கொண்டல் வ‌ண்ணனைக்  கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்  என்உள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி  அரங்கன்  என் அமுதினைக்-
கண்ட கண்கள்  மற்றுஒன்றினைக்  காணாவே.

விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். அதே நேரம் செலவுகளும் குறைவாகவே இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.

சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் ஏற்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகவும் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.தேவையான பணம் கையில் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 26, 27, 30, 31
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, 
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் 
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து 
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

தனுசுராசி அன்பர்களே!

பண வரவுக்குக் குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. நீதிமன்ற வழக்குகளில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.  கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். மாதாந்திரத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28, 29
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே


மகரராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு  வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகளில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீர்ந்து திருமணம் கூடி வரும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தி தருவதாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடை பெறும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 26, 27, 30
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம்தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

கும்பராசி அன்பர்களே!  

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்த வர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கலைத்துறையினருக்குத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைவதற்கான சாத்தியம் உள்ளது. சக நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திடீர் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 27, 28
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண் செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கம் துயரம் இல்லையே

மீனராசி அன்பர்களே!

பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டுவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் முன்னேற்றம் சாதகமான திருப்பம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.

அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்பட் டாலும் பிற்காலத்துக்கு நன்மை தருவதாகவே இருக்கும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.

கலைத்துறையினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மாணவர்களுக்கு அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். படிப்பில் கவனம் செலுத்த முடியாது. போட்டிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28, 29, 30, 31
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5 

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே
நைவனாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம் முன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே