ரெகுலர்
ஸ்பெஷல் 2
Published:Updated:

ராசி பலன்கள்

பிப்ரவரி 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

அறிவுக்கூர்மை அரங்கேறும் வேளை!

ராசி பலன்கள்

மேஷம்: செயல்திறன் மிக்கவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய சொத்தை விற்று, உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். கணவருக்கு வருமானம் கூடும். அவரின் புதிய முயற்சிகள் வெற்றியடையும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். ராகு, கேது, குருவின் போக்கு சரியில்லாததால்... வீண் விரயம், ஏமாற்றம், அசதி, சோர்வு வந்து விலகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில், பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.    

துணிவே துணை!

ராசி பலன்கள்

ரிஷபம்: பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே! செவ்வாய் வலுவாக நிற்பதால், துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைப்பார். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும்என்று நினைத்த உறவினர், தோழிகளை சந்திப்பீர்கள். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... ஏமாற்றம், வீண் செலவு வந்து போகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும்.

புகழ், கௌரவம் உயரும் நேரம்!

ராசி பலன்கள்

மிதுனம்: சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே! குரு வலுவாக அமர்ந்திருப்பதால் புகழ், கௌரவம் உயரும். வீடு கட்டும் பணி முழுமையடைய, லோன் கிடைக்கும். கணவர் முழுமையாக நேசிப்பார். சொந்த பந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷ யங்கள் சாதகமாக அமையும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்  யோகத்தில் மேலதிகாரி உங்களை  நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

சொந்த பந்தம் கைகொடுக்கும்!

ராசி பலன்கள்

கடகம்: சபை நாகரிகம் அறிந்தவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உயர்கல்வி, உத்யோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். குருவும், சனியும் சரியில்லாததால்... மறைமுக விமர்சனம், தாழ்வுமனப்பான்மை, தாயாருக்கு உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். உத்யோகத்தில் பேச்சைக் குறைக்கவும்.

போட்ட திட்டம் பலிக்கும்!

ராசி பலன்கள்

சிம்மம்: தன் சொந்த முயற்சியால் முன்னேறுபவர்களே! சனிபகவான் வலுவாக 3-ல் அமர்ந்திருப்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். பணபலம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவீர் கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில், புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

எதிலும் மகிழ்ச்சி...கை நிறைய பணம்!

ராசி பலன்கள்

கன்னி: கூடிவாழும் குணமுடையவர்களே! 6-ல் மறைந்து ஏகப்பட்ட செலவு, தந்த சுக்கிரன், 4-ம் தேதி முதல் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க இருப்பதால், எதிலும் மகிழ்ச்சி, நிறைய பணவரவு உண்டு. புதன், 4-ம் தேதி முதல் 6-ல் மறைவதால்... வேலைச்சுமை, உடல் உபாதை வந்து நீங்கும். உறவினர்களின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். 1-ம் தேதி நண்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால், கவனத்துடன் செயல்படப் பாருங்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.  

சொன்னதை செய்யும் தருணம்!

ராசி பலன்கள்

துலாம்: கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்களே! செவ்வாய் லாப வீட்டில் வலுவாக இருப்பதால், வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். 4-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவதால், வேலைச்சுமை, திடீர் பயணங்கள் ஏற்படலாம். ஜென்மச் சனி தொடர்வதால், யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள்.

கேட்ட பணம் கிடைக்கும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: புதுமை விரும்பிகளே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். சனியும், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும் சரியில்லாததால்... வீண் விரயம், இனந்தெரியாத கவலை வந்து போகும். 4, 5 ஆகிய தேதிகளில் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.  

நல்லதொரு குடும்பம்!

ராசி பலன்கள்

தனுசு: வேதாந்தம், சித்தாந்தம் பேசுபவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். வீடு வாங்குவது, கட்டுவதற்கு லோன் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் நேசம் அதிகரிக்கும். சூரியன் 2-ல் நிற்பதால் வீண் செலவு ஏற்படலாம். அரசு காரியங்களை அலைந்து முடிப்பீர்கள். 6-ம் தேதி முதல் 8-ம் தேதி மதியம்  1 மணி வரை வேலைச்சுமை அதிகரிக் கும். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து கொள் வீர்கள். உத்யோகத்தில், அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும்.    

அழகு அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

மகரம்: சாதிக்கப் பிறந்தவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், சவாலான விஷயங்களையும் மாறுபட்ட அணுகுமுறையால் விரைந்து முடிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். ராசிக்குள் சூரியன் நிற்பதால் உடல் உபாதை வந்து நீங்கும். 8-ல் செவ்வாய் தொடர்வதால், கோபத்தால் சிரமம் ஏற்படலாம்.  8-ம் தேதி மதியம் 1 மணி முதல் 10-ம் தேதி மாலை 5.30 மணி வரை அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.    

பிள்ளைச் செல்வம் பெருமை தரும்!

ராசி பலன்கள்

கும்பம்: ஒழுக்கம் தவறாதவர்களே! ராசிநாதன் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். கொடுத்த கடன் தொகை கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நட்பு வட்டம் விரியும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால்... தூக்கமின்மை, டென்ஷன் வந்து நீங்கும். 10-ம் தேதி மாலை 5.30 மணி முதல் 12-ம் தேதி வரை அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.    

மேள தாளம் கேட்கும் காலம்!

ராசி பலன்கள்

மீனம்: புகழ்ச்சிக்கு மயங்காதவர்களே! சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். பூர்விக சொத்து கைக்கு வரும். உறவினர்கள், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 13, 14 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.