Published:Updated:

இந்த வார ராசிபலன் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை!

இந்த வார ராசிபலன் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை!
இந்த வார ராசிபலன் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை!

இந்த வார ராசிபலன் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை


'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

மேஷராசி அன்பர்களே!

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டு இருந்த  கருத்து வேறுபாடுகள் நீங்கி, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவீர்கள்.  பிள்ளை கள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தை வழி உறவினர்கள் மூலம் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்குச் சாதகமான  பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமை யாகப் பாடுபடவேண்டி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி எதுவும் இப்போது வேண்டாம். கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். ஆனாலும், கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். 

மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம்  கிடைக்கும். தேர்வுக்காகக் காத்திருக்கும் முதுகலை மாணவர்கள் சற்று சிரத்தை எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமுமான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்ரல் 29, 30, மே 4, 5

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்


பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

ரிஷபராசி அன்பர்களே!

பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று பக்குவமாக நடந்துகொள்ளவும். அதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு, அகலக் கால் வைக்கவேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவர்கள் மேற்படிப்பில் சேருவதற்குச் சிலரின் சிபாரிசு தேவைப்படும். பெற்றோர் தங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கல்விக் கடன் கிடைப்பதில் தடை எதுவும் இருக்காது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு, உறவினர்கள் வருகையால் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்ரல் 29, 30. மே 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.


சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே

மிதுனராசி அன்பர்களே!

வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வார பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் உறவினர்களிடையே உங்கள் கௌரவம் உயரும்.
அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் ஆதரவாக  இருப்பார்கள். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்குச் சில சலுகைகள் கிடைக்கும்.

 வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சனம் செய்வதைத் தவிர்க்கவும்.

மாணவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறவும், அதன் காரணமாக, விரும்பிய பாடப்பிரிவில் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரவும் வாய்ப்பு உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். ஆனால், கணவர் மற்றும் பிள்ளைகளின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு  அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்: மே: 1, 2, 4, 5

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7, 9

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்

கந்தா, கதிர் வேலவனே, உமையாள்

மைந்தா, குமரா, மறை நாயகனே.

கடகராசி அன்பர்களே!

அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.
 அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். 

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான உறவு ஏற்படும். 

கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும். 
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே: 4, 5

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 9

 சந்திராஷ்டம நாள்கள்: ஏப்: 29, 30

வழிபட வேண்டிய தெய்வம்: வெங்கடேசப் பெருமாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.


ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்

தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!

சிம்மராசி அன்பர்களே!

வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உடனே சரியாகி விடும். குடும்பம் தொடர்பான. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். தங்கள் பொறுப்பை உணர்ந்துகொண்டு நடப்பது மகிழ்ச்சி தரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டினாலும் பொறுமை காப்பது நல்லது.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ  நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கலைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். ஆனாலும், வருமானம் எதிர்பார்த்தபடி இருப்பது மகிழ்ச்சி தரும்.

மாணவர்களுக்கு மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பதில் சற்று குழப்பம் ஏற்படும். ஆசிரியரின் ஆலோசனை கேட்டு அதன்படி செயல்படவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக் கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 29, 30

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6

சந்திராஷ்டம நாள்கள்: மே 1, 2, 3

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்

ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து

அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திக்கவும், அவர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. நிர்வாகத்தினரின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். 

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்க வேண்டாம். அவசியம் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.

கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. மூத்த கலைஞர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

மாணவர்கள் மேற்படிப்பில் சேருவதற்கு சற்றுக் கடினமாக முயற்சி செய்ய வேண்டி வரும். படிப்புக்குத் தேவையான கடனுதவி கிடைப்பதில் தடை எதுவும் இல்லை. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு  சந்தோஷமும் நிம்மதியும் தரும்  வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்ரல் 29, 30. மே: 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6

சந்திராஷ்டம நாள்: மே: 4, 5

வழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.  


வடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்

கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்

இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்

பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

துலாராசி அன்பர்களே!

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும்.

உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு முடியும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.
மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், சிறப்பான முறையில் தேர்ச்சி பெறவும் முடியும். சிலருக்கு மேற்கல்விக்கான உதவித் தொகை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே: 1, 2, 3, 5

அதிர்ஷ்ட எண்கள்: 1,3,7

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்,

சகட சக்கரத் தாமரை நாயகன்,

அகட சக்கர இன்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள். பணியாளர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பார்கள்.

கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும். சக கலைஞர்கள் உதவி செய்வார்கள்.

மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.ஆசிரியர்களும் பெற்றோரும் ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும்.


அதிர்ஷ்ட நாள்கள்: மே: 4, 5

அதிர்ஷ்ட எண்கள்: 1,2,4

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து  உமையோடும் வெள்ளை விடைமேன்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி  திசை தெய்வ மானபலவும்

அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல  அடியா ரவர்க்கு மிகவே.    


தனுசுராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உடனே நிவாரணம் கிடைத்துவிடும். கணவன் - மனைவிக் கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பத்தில் மூன்றாவது நபர்கள் தலையிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது.  வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெறக் கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவர்கள் மேற்படிப்புக்கான முயற்சிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்தபடியே மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கனிந்து வரும்.  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். பிள்ளைகள் அன்பு பாராட்டுவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.


அதிர்ஷ்ட நாள்கள்: 29, 30

அதிர்ஷ்ட எண்கள்: 1,4,5

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.


அன்னை கை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து

இன்னெடும் கடலை நீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன

உன்னத நெடியமாலாய் உயர்ந் தெழுந் தடங்கி நின்று

மன்னுதாய் ஆசிபெற்ற மாருதி பாதம் போற்றி

மகரராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தமுடியாது. சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும்.

பயணங்களின்போது கொண்டு செல்லும் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். 

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மூத்த கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவர்கள் மேற்படிப்புக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும். படிப்புக்காக வங்கிக் கடனுதவி கிடைப்பதில் சில தடைகள் ஏற்பட்டாலும், கிடைத்துவிடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே: 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 1,2,7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.


திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும் 

சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை, 

மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 

கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்றவாறே

கும்பராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.

வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை வழியில் சில ஆதாயங்கள் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பாக சிலர் வெளியூர் அல்லது வெளி மாநிலப் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும்.

அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைத்தாலும் அதனால் நன்மையே உண்டாகும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும். சக கலைஞர்களும் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவர்களுக்கு மேற்படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.படிப்பு சம்பந்தமான செலவுகளுக்குத் தேவையான கடனுதவி கிடைக்கும்.
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 30, மே: 4, 5

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அவருடன் சுமுகமான உறவு ஏற்படும்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். 

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். 

மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். சக மாணவர்கள் சொல்லும் யோசனைகளைக் குறித்து நீங்களாக முடிவெடுக்காமல், ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே: 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன் 

புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள் 

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் 

செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.