Published:Updated:

மேஷம் ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?#Astrology

மேஷம் ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?#Astrology
மேஷம் ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?#Astrology

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். எந்த ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

மேஷம் ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?#Astrology


''ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால் நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத்துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் துணையுடன் தேடுவது நல்லது. இப்போது நாம் மேஷ ராசிக்காரர்கள் எந்த ராசியில் பிறந்தவர்களை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

மேஷம்தான் 12 ராசிகளில் முதல் ராசி. இது சர ராசி. இதில் பிறந்தவர்கள் வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படுவார்கள். மேஷராசிக்காரர்கள், வீர, தீர பராக்கிரமம் கொண்டவர்கள். எதிலும் துணிச்சலும், தான் நினைத்த காரியத்தை முடிக்கிற தீவிரமும் கொண்டவர்கள். 'தான் நினைக்கும்படி பிறர் நடக்க வேண்டும்' என்ற எண்ணம், இவர்களிடம் மேலோங்கியிருக்கும். பிறரையும் பிறரின் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுத்து, எதிலும் அவசரத்தை நீக்கி, நிதானத்தைக் கடைப்பிடித்தால், இவர்கள் வாழ்க்கையில், அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

மேஷம் ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?#Astrology

மேஷ ராசிக்காரர்களுக்கு, பாக்யாதிபதிகள் என்று கூறப்படும் ஒன்பது, பத்துக்குடைய ராசிகளான தனுசு, மகரம் ஆகிய இரண்டு ராசிகளும் மிகவும் பொருத்தமானவை. இவற்றைப்போல் பஞ்சமம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் வீட்டுக்குடைய ராசியான சிம்மராசியைச் சேர்ந்தவர்களுக்கும் மணமுடித்து வைக்கலாம். இப்படிப்பட்டவர்கள் இணைந்தால் அவர்களின் இல்லற வாழ்வு சிறக்கும். வாழும் வரை அவர்கள் இணைபிரியா தம்பதிகளாக இருப்பார்கள்'' என்று கூறினார். 
 

Vikatan