Published:Updated:

மேஷம் ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்?#Astrology

எஸ்.கதிரேசன்
மேஷம் ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்?#Astrology
மேஷம் ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்?#Astrology

12 ராசிக்காரர்களில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறுவிதமான குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 12 ராசிக்காரர்களின் குணநலன்கள் பற்றி ஜோதிடக் கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.  முதலில் மேஷம் ராசிக்காரர்களின் குணங்கள் பற்றி இங்கே விவரிக்கிறார்.

மேஷ ராசிக்காரர்கள் நீதிமான்களாக இருப்பார்கள். 12 ராசிகளில் முதல் ராசியாக வருவதால் எதிலும் முதன்மைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், இயல்பிலேயே இவர்களுக்கு இருக்கும். பெரும்பாலும் இவர்கள் கோபக்காரர்களாக, அநீதியைக் கண்டு பொங்குபவர்களாக இருப்பார்கள். எதிலும் எவரையும் சார்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், கூட்டமாக நண்பர்கள் உறவினர்களோடிருப்பதை விரும்புவார்கள். 

மேஷம் ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்?#Astrology

எந்தச் செயலிலும் துடிப்பும் வேகமும் மிக்கவர்களாக இருப்பார்கள். எவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். ஆனால், அந்த நம்பிக்கைக்கு அவர்கள் தப்பித்தவறி துரோகம் இழைத்துவிட்டால், அதன் பிறகு அவர்களிருக்கும் பக்கம் திரும்பிகூடப் பார்க்க மாட்டார்கள். மேஷ ராசிக்காரர்களின் பலவீனம் என்று பார்த்தால் இவர்களின் கோபம்தான். தவற்றை உணர்ந்துவிட்டால் வயதில் சிறியவராக இருந்தாலும் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டார்கள். 

எதிலும் தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். அப்படி முடிவெடுத்துவிட்டால், யார் வந்து சொன்னாலும் மாற மாட்டார்கள். அதன் விளைவுகளைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கும். 

வாழ்க்கையில் 28 வயதுக்குமேல் படிப்படியாக முன்னுக்கு வருவார்கள். இவர்களின் மத்திய வயதுக்குமேல் அதாவது 45 வயதுக்குமேல் பெரும் சாதனைகளைச் செய்வார்கள். முன்கோபம்தான் இவர்களது பலவீனம். ஆனாலும், இவர்களின் கோபத்தில் உள்ள நியாயத்தை இவருடனிருப்பவர்கள் புரிந்துகொண்டு மீண்டும் நல்லவிதமாகப் பழகுவார்கள். 

மேஷம் ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்?#Astrology


மேஷ ராசிக்காரர்களின் இன்னொரு முக்கிய குணாம்சம், இவர்கள் தேனீயைப்போல் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பார்கள். ஒரு மணி நேரம்கூட இவர்களால் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியாது. இவர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் 'எதுவும் செய்யாமல் கொஞ்ச நேரம் சும்மா இரு' என்றாலே போதும். இவர்களிடம் பொதுநல சிந்தனைகள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும். தானும் நன்றாக இருந்து, தன்னைச் சேர்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பார்கள்.

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், சிவப்பு நிறம் தொடர்பான பொருள்களை இவர்கள் வைத்துக்கொள்வது நல்லது. சிவப்பு தொடர்பான பணிகள் இவர்களுக்கு நல்லவிதமாக கை கொடுக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு மருத்துவம், விளையாட்டு, அதிகாரம் ஆகிய துறைகள் சிறப்பானவை. மலை, மலை சார்ந்த இடங்களில் பணியாற்ற ஏற்ற இடங்களாகும். ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில் ஆகியவை இவர்களுக்குப் புகழ் சேர்க்கும்விதமாக அமைந்திடும்.  

மேஷராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்று பார்த்தால், முருகன்தான். முருகனை வணங்கி வந்தால் வாழ்க்கையில் எல்லாவளங்களையும் பெறுவார்கள். முருகனே இவர்களுக்குக் கண்கண்ட தெய்வம். 

Vikatan