Published:Updated:

சீருடைப் பணியில் சிறந்து விளங்கும் விருச்சிக ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

சீருடைப் பணியில் சிறந்து விளங்கும் விருச்சிக ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
சீருடைப் பணியில் சிறந்து விளங்கும் விருச்சிக ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?


பன்னிரண்டு ராசிக்காரர்களில், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான குணங்கள் இருக்கும். ஆகவே, பன்னிரண்டு ராசிக்காரர்களின் குணநலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். விருச்சிக ராசிக்காரர்களின் குணங்கள்பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

சீருடைப் பணியில் சிறந்து விளங்கும் விருச்சிக ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

விருச்சிக ராசிக்காரர்கள், செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். தங்களுக்கு கிடைக்கும் பொருளோ, பணமோ  இரண்டையும் ஒன்றைப் பத்தாக்கும் திறமை வாய்ந்தவர்கள்.  மார்க்கெட்டிங், சேமிப்பு, இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் இறங்கி கலக்குவார்கள். புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு  தொழிலையோ நிறுவனத்தையோ பெரிய அளவில் கொண்டுபோய் நிலைநிறுத்துவார்கள். 
மேஷ ராசிக்கும் விருச்சிக ராசிக்கும் செவ்வாய்தான் அதிபதி. கோபக்காரர்கள்தான் என்றாலும், தங்களுடைய கோபத்தை எப்போது, எப்படிக் காட்ட வேண்டும் எனத் தெரிந்துவைத்திருப்பார்கள். சாதுர்யமாகப் பேசி எதையும் சாதித்துக்காட்டுவார்கள். கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதற்குரிய உதாரண புருஷர்கள்.

சீருடைப் பணியில் சிறந்து விளங்கும் விருச்சிக ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

விருச்சிக ராசியின் அடையாளம், தேள். கோபத்தில் தேளைப்போன்று வார்த்தைகளைக் கொட்டிவிடுவார்கள். பிறகு, அவர்களே அதை உணர்ந்து மன்னிப்பும் கேட்பார்கள். பிறகு, நல்ல விதமாகப் பேசுவார்கள். ஆனாலும், அவ்வப்போது கோபம் வெளிப்படத்தான்செய்யும். எந்த ஒரு செயலையும் ரகசியமாகவே செய்வார்கள். காரியம் வெற்றிபெறும் வரை மறைத்தே செய்வார்கள். முதலில், நான் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். நான் நன்றாக இருந்தால்தான் தன்னைச் சார்ந்தவர்களை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்று நினைப்பார்கள்.

ஒருவரை தனக்குப் பிடித்துவிட்டால், அவர்களை மேல்நிலைக்குக் கொண்டுவரப் போராடுவார்கள். அவர்களை மேல்நிலைக்குக் கொண்டுவர கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். குறைகளை முகத்துக்கு நேராக பளிச்சென்று சுட்டிக்காட்டுவார்கள். 'மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்னே கசந்து, பின்னே இனிக்கும்' என்பதற்கேற்ப வெற்றிபெற்ற பிறகே அவர்களது அருமையை மற்றவர்கள் உணர்வார்கள்.  

விருச்சிக ராசிக்காரகள், யூனிஃபார்ம் அணிந்து பணிபுரியும் தொழில்களான காவல்துறை, ராணுவம், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். மலையில் விளையும் பொருள்களான காபி, டீ போன்றவற்றில் இவர்கள் நல்ல லாபம் ஈட்டுவார்கள். இவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள்... வீரபத்திரசுவாமி, நரசிம்மர்.. இளமையின் தொடக்கத்தில் இவர்களது முன்னேற்றத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டு, 35 வயதுக்கு மேல் நல்ல நிலைக்கு வருவார்கள்'' என்கிறார், ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.  

Vikatan