Published:Updated:

பொறுமையும் நிதானமும் மிக்க கும்ப ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?#Astrology

எஸ்.கதிரேசன்
பொறுமையும் நிதானமும் மிக்க கும்ப ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?#Astrology
பொறுமையும் நிதானமும் மிக்க கும்ப ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?#Astrology

12 ராசிக்காரர்களில், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான குணங்கள் இருக்கும். ஆகவே, 12 ராசிக்காரர்களின் குணநலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். கும்பம் ராசிக்காரர்களின் குணங்கள் பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

பொறுமையும் நிதானமும் மிக்க கும்ப ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?#Astrology



கும்ப ராசிக்காரர்கள் அளவு கடந்த பொறுமையும் நிதானமும் உள்ளவர்கள். இவர்கள் ஓவியம், சிற்பம் போன்று மிகுந்த பொறுமையுடன் செய்யும் வேலைகளை விரும்பிச் செய்வார்கள். ஆட்டோமொபைல் சாதனங்கள், கனரக எந்திரங்கள் போன்றவற்றைப் பிரித்துப் போட்டு சரிசெய்துவிட்டு மீண்டும் அசம்பிள் செய்துவிடுவார்கள். பெரிய நிறுவனங்களில் எலெக்ட்ரிகல் வேலைகளை சர்வசாதாரணமாகக் கையாளுவார்கள்.


கும்ப ராசி சனியின் காரகத்துவம் பெற்ற ராசி என்பதால், உடையில் ஏற்படும் கறை, அழுக்கு பற்றியெல்லாம் கவலைப்படாமல் உழைப்பார்கள். இவர்களின் மிகப்பெரிய பலமே கடினஉழைப்புதான். எப்படியும் உழைத்து முன்னுக்கு வந்துவிடுவார்கள். ஆனால், எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், மனத்துக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இவர்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். 

பொறுமையும் நிதானமும் மிக்க கும்ப ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?#Astrology

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கென்னடி ஒருமுறை 'ஜனாதிபதியாயிட்டேன். இதுக்குமேல என்ன செய்யப் போறேன்னு தெரியலை'என்று சொன்னார். அப்படித்தான் மகர ராசிக்காரர்களும் சலித்துக் கொள்வார்கள். இவர்கள் எதையும் தீர ஆலோசித்துத்தான் செய்வார்கள். அப்படிச் செய்யத் தொடங்கிவிட்டால் எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டார்கள். 

தங்களின் 31 வயதிலிருந்து முன்னேறத் தொடங்குவார்கள். 40 வயதுக்குமேல் வேகமாக முன்னேறி தங்களின் வாழ்க்கை இலக்கை 50 வயதுக்குள் அடைந்துவிடுவார்கள். ஓய்வுபெற்ற பின் வாழும் வாழ்க்கை இவர்களுக்கு மிகவும் அமைதியானதாக இருக்கும். இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் அய்யனார், அய்யப்பன், அர்த்தநாரீஸ்வரர். ஆஞ்சநேயரை வழிபட்டால் இவர்களின் வாழ்க்கை மேலும் சிறப்பாக அமையும்'' என்கிறார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.    

Vikatan