Published:Updated:

ராசிபலன்

ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 1 -ம் தேதி வரை

ராசிபலன்

ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 1 -ம் தேதி வரை

Published:Updated:

ஜோதிடம் 'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்:  சுய மரியாதைக்குச் சொந்தக்காரர்களே!

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10-ல் சூரியனும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. கணவரின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வீடு கட்டும் பணியைத் தொடங்கு வீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குரு 12-ல் மறைந்திருப்பதால், சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். 28-ம் தேதி முதல், 30-ம் தேதி காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் காலமிது.

ரிஷபம்: அநியாயத்தை எதிர்க்கத் தயங்காதவர்களே!

ராசிபலன்

செவ்வாய் சாதகமாக இருப்பதால், சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். குரு வலுவாக இருப்பதால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். 26-ம் தேதி முதல் புதன், ராகுவை விட்டு விலகுவதால்...  உறவினர்கள் உதவுவார்கள். ராசிநாதன் சுக்கிரன் 30-ம் தேதி முதல் 8-ல் நிற்கும் ராகுவுடன் இணைவதால், வீண் டென்ஷன் ஏற்படலாம் 30-ம் தேதி காலை 10.30 மணி முதல் 1-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் உயரதிகாரி உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்.

உழைப்பால் உயரும் நேரமிது.

மிதுனம்: அமைதியை விரும்புபவர்களே!

ராசிபலன்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தோழிகளால் ஆதாயம் உண்டு. 29-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். கணவர் கொஞ்சம் அலுத்துக் கொள்வார். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும்.

இடைவிடாமல் போராடி இலக்கை எட்டும் தருணமிது.

கடகம்: மண்ணில் பாயும் வேரைப் போல பிறர் மனதை எளிதில் கவர்பவர்களே!

ராசிபலன்

குரு பகவான் வலுவாக இருப்பதால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள்.  சூரியன் 7-ல் நிற்பதால்... கணவருக்கு அலைச்சல், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 29-ம் தேதி வரை சுக்கிரன் 5-ல் நிற்பதால், பழுதான வீட்டு உபயோக பொருட்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார்.

மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் காலமிது.

சிம்மம்: வெற்றி, தோல்விகளுக்கு கவலைப்படாத விடாமுயற்சியாளர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால், குடும்ப வருமானம் உயரும்.   பூர்விக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். 8-ல் குரு மறைந்திருப்பதால்... திடீர் பயணம், வீண் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது. என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

திடீர் நன்மைகள் சூழும் தருணமிது.

கன்னி: விவேகத்துடன் செயல்படுபவர்களே!

ராசிபலன்

யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு திருப்தி தரும். சிலர் வீடு மாறுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். 5-ல் சூரியனும், செவ்வாயும் நிற்பதால்... உடல் உபாதை, உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் வேளையிது.    

துலாம்: எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். 3-ல் மறைந்திருக்கும் பாக்யாதிபதி புதன், 26-ம் தேதி முதல் 4-ம் வீட்டுக்கு வருவதால், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பூர்விக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். 4-ல் செவ்வாயும், சூரியனும் நிற்பதால்... வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

தன்னடக்கத்தால் தடைகளைத் தாண்டும் நேரமிது.

விருச்சிகம்: விருப்பு, வெறுப்பு இல்லாமல் பழகுபவர்களே!

ராசிபலன்

செவ்வாய் உச்சம் பெற்று நிற்பதால், பணம் வரும். வீடு, மனை சேரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. கணவர் உங்களை முழுமையாக நம்புவார். பிள்ளைகளின் வேலை, கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் கூடும். உத்யோகத்தில் உயர்வு உண்டு.

அதிரடி வளர்ச்சி காணும் காலமிது.

தனுசு: தனித்தன்மையுடன் செயல்படுபவர்களே!

ராசிபலன்

சுக்கிரன் சாகதமாக இருப்பதால், அடுக்கடுக்கான செலவுகளை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். ஷேர் மூலம் ஓரளவு பணம் வரும். கணவருக்கு உடல் உபாதை  வந்து நீங்கும். 19-ம் தேதி மாலை 6 மணி முதல் 21-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். உறவினர்களுடன் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

பலவீனத்தைத் திருத்திக் கொள்ள வேண்டிய வேளையிது 

மகரம்: மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் சனி வலுவாக இருப்பதால், இங்கிதமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். ராசிக்குள் நெருப்பு கிரகங்கள் நிற்பதால், மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள்.  தடைப்பட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடர்வீர்கள். 21-ம் தேதி இரவு 9 மணி முதல் 23-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். புது வேலைக்கும் முயற்சிக்கலாம்.

திடீர் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

கும்பம்: கலயுணர்வு கொண்டவர்களே!

ராசிபலன்

யோகாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால், எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். யாரை நம்புவது என்பதில் தடுமாற்றம் வரும். குரு வலுவாக இருப்பதால், கணவர் ஆதரவாக இருப்பார். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். 24, 25 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூல் செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

கோபத்தை அடக்குவதால் முன்னேறும் வேளையிது.

மீனம்: இலக்கை எட்டும் வரை போராடத் தயங்காதவர்களே!

ராசிபலன்

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  சொத்து வாங்க கடன் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. 26, 27 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. 7-ல் சனி தொடர்வதால்... தூக்கமின்மை, மன இறுக்கம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.  உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.

புதிய முயற்சிகளில் வெற்றி காணும் தருணமிது.