Published:Updated:

ராசி பலன்கள்

ஜோதிட ரதனா கே.பி.வித்யாதரன்

பிப்ரவரி 29-ம் தேதி முதல் மார்ச் 13-ம் தேதி வரை

 திருப்திகரமான பணவரவு!

ராசி பலன்கள்
##~##

மேஷம்: பழமையில் புதுமையைப் புகுத்துபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால், சமயோஜிதமாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். ஜென்ம குருவால் வீண் பழி, வேலைச்சுமை வந்து செல்லும். 13-ம் தேதி சந்திராஷ்டமம் தொடங்குவதால், கவனமுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.  

உறவினர்களால் ஆதாயம்!

ராசி பலன்கள்

ரிஷபம்: ரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே! சூரியன் வலுவாக இருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சமையலறையை நவீனமயமாக்கு வீர்கள். 12-ம் தேதி முதல் புதன் வக்ரமடைவதால், உடல் உபாதை ஏற்படலாம். ராகுவும், கேதுவும் சரியில்லாததால்... முன்கோபம், மன இறுக்கம் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி கனிவாக நடந்து கொள்வார்.

நினைத்தது நிறைவேறும் நேரம்!  

ராசி பலன்கள்

மிதுனம்: எதையும் முகத் துக்கு நேராக பேசும் குணமுடையவர்களே! குரு லாப வீட்டில் வலுவாக இருப்பதால், நினைத்தது முடியும். பணபலம் உயரும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். குலதெய்வக் கோயிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் அனு சரணை அதிகரிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள்.    

பேச்சில் காரம் வேண்டாம்!

ராசி பலன்கள்

கடகம்: ஏமாற்றங்கள், அவ மானங்களைக் கண்டு   அஞ்சாதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எடுத்த பணிகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தோழியிடமிருந்து எதிர்பார்த்த பண உதவிகள் கிட்டும். செவ்வாய் 2-ல் நிற்பதால், பேச்சில் காரம் வேண்டாம். கணவருடன் வாக்குவாதம் வந்து விலகும். சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மன அமைதி குறையும்.

புத்தம் புதிய வீடு!

ராசி பலன்கள்

சிம்மம்: ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்ப்பவர்களே! சனி வலுவாக இருப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்கு வீர்கள். உங்களை தாழ்த் திப் பேசியவர்கள் திருந்துவார்கள். செவ்வாயின் போக்கு சரியில்லாததால்... வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து போகும். வியாபாரத் தில் லாபம் அதிகரிக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் தொந்தரவு தந்த அதிகாரி மாற்றப்படுவார்.  

உதவிக் கரங்கள் உங்களுக்காக நீளும்!

ராசி பலன்கள்

கன்னி: பணத்துக்காக மனசாட்சியை அடகு வைக்காதவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். உங்கள் ராசியை செவ்வாயும், சனியும் சூழ்ந்து கொண்டு நிற்ப தால்... உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுங்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளை விமர்சனம் செய்யாதீர்கள்.

உள்ளத்தை அள்ளித் தரும் கணவர்!

ராசி பலன்கள்

துலாம்: கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்பவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சிறுக சிறுக சேமித்து வைத்து, வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். 1-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் அமர்வதால், கணவர் மனம் விட்டு பேசுவார். ராகுவும், கேதுவும் சரியில்லாததால், சில விஷயங்களில் முன்யோசனையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்.            

பொறுமை தேவை!

ராசி பலன்கள்

விருச்சிகம்: புரட்சிகரமான சிந்தனையுடையவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர், தோழிகள் தேடி வந்து பேசுவார்கள். 1-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனப் பழுது ஏற்படலாம். ராகுவும், கேதுவும் சரியில்லாததால், சிலர் உங்களைப் பற்றி கடுமையாக விமர்சிப்பார்கள். 2-ம் தேதி முதல் 4-ம் தேதி மாலை 3 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது. உத்யோகத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம்.  

வாழ்க்கை கலை வசப்படும் நேரம்!

ராசி பலன்கள்

தனுசு: துன்பம் வரும் நேரத்திலும் அடுத்தவர் உதவியை நாடாதவர்களே! கேதுவால், வாழ்வின் சூட்சமத்தை அறிவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கணவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்கு பதிலடி தருவீர்கள். 4-ம் தேதி மாலை 3 மணி முதல் 6-ம் தேதி வரை சில காரி யங்களை போராடி முடிப்பீர் கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள்.  

உற்சாகம் பொங்கும் காலம்!

ராசி பலன்கள்

மகரம்: விட்டுக் கொடுக்கும் குணமுடையவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், மனதுக்கு இத மான செய்திகள் வந்து சேரும். ஓரளவு பணவரவு உண்டு. உறவினர், தோழிகளின் வருகையால் வீட்டில் உற் சாகம் பொங்கும். செவ்வாய், சூரியனின் போக்கு சரியில் லாததால்... வீண் செலவு, டென்ஷன் வந்து போகும். 7, 8 ஆகிய தேதிகளில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட் களால் இழப்பு வரக் கூடும். உத்யோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க நேரிடும்.    

சகோதர வகையில் நன்மை!

ராசி பலன்கள்

கும்பம்: நல்லது, கெட்டது தெரிந்தவர்களே! யோகாதி பதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் செவ்வாய் சென்று கொண்டிருப்பதால், உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூர்விக சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. ராசிக்குள் சூரியன் நிற்பதால், உடல் நலக் கோளாறு, மனக்குழப்பம் வந்து நீங்கும். 9, 10 ஆகிய தேதிகளில் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, அதற் கேற்ப செயல்படுவீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.

செயல் வேகம் சூப்பர்!

ராசி பலன்கள்

மீனம்: சொன்ன சொல் தவறாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், செயல் வேகம் கூடும். வீடு கட்டும் பணி விரைந்து முடியும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மாமனார், மாமியாரின் ஆதரவு கிடைக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்களால் அனுகூலம் உண்டு. 11, 12 ஆகிய தேதிகளில் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணம், உடல் உபாதை ஏற்படலாம். வியாபாரத்தில் புதுத் தொடர்பால் ஆதாயம் அதிகரிக்கும். உத்யோகத்தில், சக ஊழியர்கள் மதிப்பார்கள்.