Published:Updated:

ராசி பலன்கள்

மார்ச் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

உறவு... நட்பு... உற்சாகம்!

ராசி பலன்கள்

மேஷம்: சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படுபவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வேலைகளை உடனே முடிக்க பாடு   படுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். செவ்வாய் 5-ல் வக்ரகதியில் தொடர்வதால்... மன இறுக்கம், சலிப்பு வந்து செல்லும். 14-ம் தேதி முதல் 15-ம் தேதி காலை 9.30 மணி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில், கமிஷன் வகை லாபம் தரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 கை நிறைய காசு!  

ராசி பலன்கள்

ரிஷபம்: தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்களே! புதனும், சூரியனும் சாதகமாக இருப்பதால், எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால், சுபச் செலவுகள், திடீர் பயணங்கள் ஏற்படும். 15-ம் தேதி காலை 9.30 மணி முதல் 17-ம் தேதி மதியம் 1.30 மணி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

ஆடை, ஆபரண யோகம்!

ராசி பலன்கள்

மிதுனம்: தடைகளைக் கண்டு தளராதவர்களே! செவ்வாய் வலுவாக 3-ல் அமர்ந்திருப்பதால், சவால்களில் வெற்றி அடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். மாமியார் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார். புதிய ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 17-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 19-ம் தேதி இரவு 8.30 மணி வரை வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சம்பளப் பாக்கி கைக்கு வரும். தொல்லை தந்த அதிகாரி இடம் மாறுவார்.  

வீடெங்கும் தோரணம்!

ராசி பலன்கள்

கடகம்: ஈர மனசு கொண்டவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்விக சொத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமண விஷயத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். 19-ம் தேதி இரவு 8.30 மணி  21-ம் தேதி வரை திட்டமிட்டவை தாமதமாக முடியும். செவ்வாய் ராசிக்கு 2-ல் வக்ரமடைந்திருப்பதால், உறவினர் வகையில் மனத்தாங்கல் வரலாம். சமைக்கும்போது ஜாக்கிரதை தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுமை அவசியம்.

தியாகத்துக்கு மரியாதை!

ராசி பலன்கள்

சிம்மம்: சவால்களுக்கு அஞ்சாதவர்களே! குரு வலுவாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் உங்களின் தியாக உணர்வைப் புரிந்து கொள்வார்கள். ராசிநாதன் சூரியன் 8-ல் மறைந்தாலும் குரு வீட்டில் அமர்ந்திருப்பதால், கோபம் தணியும். ஆனால்... திடீர் பயணங்கள், உடல் உபாதை ஏற்படலாம். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி மாலை 3 மணி வரை அநாவசியப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு பாராட்டு  குவியும்.     

 எச்சரிக்கை தேவைப்படும் நேரம்!

ராசி பலன்கள்

கன்னி: எங்கும், எதிலும் வெற்றியை விரும்புபவர்களே! ராகு 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், பிரச்னைகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். பணவரவு திருப்தி தரும். சூரியன், புதனின் போக்கு சரியில்லாததால்... மன இறுக்கம், முன்கோபம் வந்து செல்லும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 24-ம் தேதி மாலை 3 மணி 26-ம் தேதி வரை விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம், நகைகளை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

ராஜ கிரகங்கள் உயர்த்தி வைக்கும்!

ராசி பலன்கள்

துலாம்: நிர்வாகத் திறமை அதிகம் உள்ளவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்த்த வர்கள் நண்பர்களாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. 27-ம் தேதி சந்திராஷ்டமம் தொடங்குவதால், எச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள். இரண்டு ராஜ கிரகங்கள் உங்கள் ராசியை பார்ப்பதால், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சகோதரருக்கு திருமணம் கூடி வரும். ஏழரைச்சனி தொடர்வதால், உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் சம்பளம் உயர வாய்ப்பிருக்கிறது.

 சமயோஜித புத்தியால் சாதனை!

ராசி பலன்கள்

விருச்சிகம்: சமூக சீர்திருத்தவாதிகளே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ரமானாலும் பத்தில் வலுவாக இருப்பதால், சவால்களை எளிதாக எதிர்கொள்வீர்கள். வெளியாட்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் முக்கியமான நேரத்தில் உதவுவார்கள். திடீர் பயணங்களால் பணப்பற்றாக்குறையும், சோர்வும் வந்து நீங்கும். சந்திரனும், புதனும் சாதகமாக இருப்பதால், சமயோஜித புத்தியால் சாதித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.

கெட்டி மேளம் கொட்டும் நேரம்!

ராசி பலன்கள்

தனுசு: எல்லோருக்கும் நல்லதே நினைப்பவர்களே! புதன் சாதகமாக இருப்பதால்... தடுமாற்றம் நீங்கி, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஒரு சொத்தை விற்று, மறு சொத்து வாங்குவீர்கள். கணவர் உங்களுக்கு அனுசரணை யாக இருப்பார். செவ்வாய் சாதகமாக இருப்பதால், உடன்பிறந்தோர் உதவி அதிகரிக்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் நடக்கும். சூரியன் வலுவாக இருப்பதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். குருவால் ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களைப் புகழ்வார்கள்.  

  திறமை அரங்கேறும் வேளை!

ராசி பலன்கள்

மகரம்: கடின உழைப்பால் உயர்ந்த நிலையை அடைபவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், உற்சாகமாக பல்வேறு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால், பூர்விக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். செவ்வாயால் உடன்பிறந்தவர்கள் வகையில் அலைச்சல் இருக்கும். சூரியன் சாதகமாக இருப்பதால், அரசு விவகாரங்களில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆனால், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.  

பிள்ளைச் செல்வம் பெருமை தரும்!

ராசி பலன்கள்

கும்பம்: பிரச்னைகளை சமாளிப்பதில் வல்லவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வர வேண்டிய பணம் விரைவில் கைக்கு வரும்.  பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுக்கிரன் வலுவாக இருப்பதால், வீட்டு உபயோக சாதனங்களை வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள். வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தொந்தரவு தந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார்.  

 குடும்ப நிம்மதிக்கு குறைவில்லை!

ராசி பலன்கள்

மீனம்: ஆரவாரமின்றி அமைதியாக சாதிப்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பழைய பிரச்னைகள் ஓயும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். குரு வலுவாக இருப்பதால், குடும்பத்தில் நிம்மதி தங்கும். சூரியன் ராசிக்குள் நிற்பதால், மன உளைச்சல், முன்கோபம் அதிகரிக்கும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், வெள்ளியிலான பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். உத்யோகத்தில் மன அமைதி குறையும். அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம்.