Published:Updated:

நற்பலன்களை அள்ளித் தருமா நந்தன வருடம்?!

'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி
நற்பலன்களை அள்ளித் தருமா நந்தன வருடம்?!
##~##
ர வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான நந்தன வருடம் பிறக்கிறது.

13.4.12 வெள்ளிக்கிழமை மாலை 5:37 மணிக்கு கிருஷ்ண பட்சம் அஷ்டமி திதி, உத்திராட நட்சத்திரம் முதல் பாதம்,  தனுசு ராசி, கன்னியா லக்னம் 4-ஆம் பாதத்தில், நவாம்சத்தில் சிம்ம லக்னம் தனுசு ராசியில், சித்தி நாமயோகத்தில், கௌலவம் நாமகரணத்தில், சித்த யோகம், நேத்திரம், ஜீவனம் கூடிய நன்னாளில்...

பஞ்ச பட்சியில், பகல் கடைசி சாமத்தில் கோழி பலம் இழந்த நேரத்தில், சூரிய தசையில், சந்திர புக்தியில், சனி அந்தரத்தில், குரு ஓரையில் நந்தன வருடம் சிறப்பாகப் பிறக்கிறது.

இந்த வருடம் இப்படித்தான்!

நந்தனத்தில் மாரியாறு நாடெங்கும் பஞ்சமிகும்
நந்துமூயிர் நோயா னலியுமே - அந்தரத்தின்
மீனு திருந் தூமமெழு மிக்க கெடுதியுண்டாம்
கோன் மடிவா னென்றே நீ கூறு.

மேற்கண்ட வெண்பாவின்படி, உலகெங்கும் அதிக மழைப் பொழிவால் ஆறுகள் பெருக்கெடுத்து, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும்; உணவுப் பற்றாக்குறை ஏற்படும். புதிய நோய்கள் அதிகரிக்கும். ஆகாயத்தில் நட்சத்திரக் கூட்டங்கள் இடம் மாறும்; அல்லது  நட்சத்திரங்களில் காந்தப் புயல் வீசக்கூடும். வால் நட்சத்திரம் அல்லது புதிய நட்சத்திரம் வானத்தில் தெரியும். அதனால் கெடுதல் உண்டாகும் என்றெல்லாம் சூசகமாகக் கூறியுள்ளார் சித்தர் பெருமான் இடைக்காடர்.

நற்பலன்களை அள்ளித் தருமா நந்தன வருடம்?!
நற்பலன்களை அள்ளித் தருமா நந்தன வருடம்?!

இந்த வருடத்தின் ராஜாவாக சுக்கிரன் வருவதால், ஜனநாயகம் தழைக்கும். பல துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிப்பார்கள். மக்கள் ஆடம்பர வாழ்வை விரும்புவர். நவீன குடியிருப்புகள், வர்த்தக மையங்கள், அதிக உயரம் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாகும். பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய நலத்திட்டங்கள் ஆட்சியாளர்களால் கொண்டுவரப்படும். வரதட்சணைக் கொடுமை, விவாகரத்துகள் படிப்படியாகக் குறையும். அதிவேகப் பேருந்துகள், ரயில்கள், வாகனங்கள் அறிமுகமாகும். இரும்பு, கம்பி, ஜல்லி, சிமென்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். வீட்டின் விலையும் அதிகரிக்கும். டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும்.

மந்திரியாகவும் சுக்கிரன் வருவதால், இரண்டாம் கட்ட அதிகார மையங்கள் மற்றும் நிழலுலக தாதாக்களின் கை ஓங்கும். சாமானியர்களும் பெரிய பதவியில் அமர்வார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க புது சட்டம் வரும்.

அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதால் ஆடை, பொன் ஆபரணங்கள் மற்றும் வெள்ளியின் விலை உயரும். மொத்த வியாபாரம் செய்பவர்கள் பாதிப்படைவார்கள். உணவுப் பதுக்கலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் வரும்.

நற்பலன்களை அள்ளித் தருமா நந்தன வருடம்?!

சஷ்யாதிபதியாக சந்திரன் வருவதால், தட்பவெப்ப நிலை அடிக்கடி மாறும். வெயில், மழை, குளிர் எதுவாக இருந்தாலும் அதிகமாகக் காணப்படும். சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால், தீவிரவாதிகளை ஒடுக்க கடும் சட்டம் வரும். ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். நவீன ஆயுதங்கள், ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் புதிய செயற்கைக் கோள்கள் ஏவப்படும். சுனாமி, நிலநடுக்கம் ஆகியவற்றை முன்னரே அறிய செயற்கைக் கோள்கள் துணைபுரியும்.

மேகாதிபதியாக சுக்கிரன் வருவதால் உலகெங்கும் கனமழை பொழியும். நிலப்பரப்புகள்- பல குடியிருப்புகள் நீரால் சூழப்படும். தானியாதிபதியாக சூரியன் வருவதால் வெள்ளை நிற தானியங்கள் அதிகம் விளையும். என்றாலும், வெள்ளப் பெருக்கால் அரிசி விலை உயரும்.

நந்தன வருடம் வெள்ளிக்கிழமையில் பிறப்பதாலும் ஆடி மாதம் 5-ஆம் தேதியும் வெள்ளிக்கிழமையில் வருவதாலும் உலகெங்கும் உள்ள அணைகள் நிரம்பும். காடுகள் செழிக்கும். வங்கிகளில் வாராக் கடனை வசூலிக்க, கடுமையான சட்டங்கள் வரும். கல்வித் துறையில் 12.9.12 முதல் குழப்பங்கள் தீரும். ஆனால், ஆசிரியர் நியமனத்தில் பிரச்னைகள் வெடிக்கும்.

நற்பலன்களை அள்ளித் தருமா நந்தன வருடம்?!

உள்நாட்டு வியாபாரங்கள் வெகுவாகப் பாதிக்கும். அயல்நாட்டில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாடு திரும்பும் சூழல் உருவாகும். வாகன விபத்துகள் அதிகரிக்கும்.    

23.6.12 முதல் 14.8.12; 12.9.12 முதல் 27.9.12 வரை சனியும், செவ்வாயும் சேர்ந்திருப்பதாலும், 28.9.12 முதல் 6.12.12 வரை செவ்வாயும் ராகுவும் சேர்ந்திருப்பதாலும், 17.10.12 முதல் 15.11.12 வரை சூரியனும் சனியும் சேர்ந்திருப்பதாலும், 2.12.12 முதல் 13.4.13 வரை சனியும் ராகுவும் சேர்ந்திருப்பதாலும்... இந்தக் காலகட்டத்தில் கலவரம், சாலை விபத்துகள், நிலநடுக்கம், கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள், புது நோய்கள் உருவாதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

பொதுவில் இந்த நந்தன வருடம், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் செயற்கை விபத்துகளால் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தினாலும், ஆன்மிகப் பலத்தால் எங்கும், எதிலும் மகிழ்ச்சியை தங்கவைப்பதாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு