பிரீமியம் ஸ்டோரி
மேஷம்

நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர வகையில் மனக்கசப்புகள் விலகும். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலம் உண்டு. 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஆனி, ஆவணி மாதங்களில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிட்டும். சுற்றியுள்ளவர்களில் நல்லவர்-கெட்டவர்களை அடையாளம் காண்பீர்கள்

##~##
கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள உறவினர்- நண்பர்களால் திருப்பங்கள் ஏற்படும். சொத்துப் பிரச்னைகள் சாதகமாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 6-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவுவர். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஆனால் 12.9.12 முதல் வருடம் முடியும் வரை 7-ல் கண்டகச் சனியாக அமர்வதால் சிறு சிறு விபத்துகள், பண இழப்புகள் வந்து போகும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

17.10.12 முதல் 15.11.12 வரை சூரியன் சனியுடன் சேர்ந்து இருப்பதால், அந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கவனம் தேவை. 2.12.12 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் கேது நிற்பதால் தலைச்சுற்றல், முன்கோபம், ஒருவித சலிப்பு வந்து நீங்கும். 2.12.12 முதல் 7-ல் ராகுவும் நுழைவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு, மன உளைச்சல் வந்து போகும்.

வியாபாரத்தில்... வைகாசி, ஆனி மாதங்களில் பற்று- வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவர். புது சலுகைகளால் போட்டியாளர்களைத் திகைக்க வைப்பீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். சங்கத்தில் உங்களுக்கென்று தனியிடம் உண்டு. மருந்து, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. வருட ஆரம்பம் முதல் 11.9.12 வரை 6-ல் சனி நீடிப்பதால் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பி-களும் வாடிக்கையாளர் ஆவார்கள். 12.9.12 முதல் சனி 7-ல் அமர்வதால் பங்குதாரர்களுடன் அவ்வப்போது கருத்து மோதல்கள் வரக்கூடும். கடன் தர வேண்டாம்.    

உத்தியோகத்தில் மேலதிகாரியுடனான மனக்கசப்புகள் விலகும். 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் வேலைப்பளு குறையும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் புதிய பொறுப்புகள் சேரும். சம்பளம் உயரும்.

எனினும் 12.9.12 முதல் சனி 7-ல் அமர்வதால் அலுவலகம் மற்றும் மூத்த அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்குமுன் யோசிப்பது நல்லது.

மேஷம்

கலைஞர்களின் படைப்புகளுக்கு மதிப்பு கூடும்.

அரசு கவுரவிக்கும். வீண் வதந்திகள் விலகும். கன்னிப் பெண்களின் கனவு நனவாகும். கல்யாணம் நடக்கும். வேலை கிடைக்கும். உயர்கல்வி அயல்நாட்டில் உண்டு. மாணவ- மாணவியருக்கு நினைவாற்றல் பெருகும்; கெட்ட நண்பர்களிடமிருந்தும் விடுபடுவதுடன், அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

மொத்தத்தில் நந்தன புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும், வசதி, வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு