பிரீமியம் ஸ்டோரி
ரிஷபம்

டந்த கால நினைவுகளில் மூழ்கித் திளைப்பவர் நீங்கள். உங்களின் சுகாதிபதியின் நட்சத்திரத்தில் நந்தன வருடம் பிறக்கிறது. புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். ஆனால், புத்தாண்டு 8-வது ராசியில் பிறப்பதால் அலைச்சல், உடல்நலக் குறை மற்றும் சிறுசிறு விபத்துகள் வந்து போகும்.

வீண் செலவுகளைத் தவிர்க்கவும். ஆனி, ஆடி மாதங்களில் திடீர் யோகம் உண்டு. அதிகார பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் கூடிவரும். 17.5.12 முதல் ஜென்ம குருவாக வருவதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும்.  வேலைச் சுமை அதிகரிக்கும். உழைத்தும் பயனில்லையே எனும் ஏக்கம் வாட்டும். முக்கிய முடிவுகளைப் பலமுறை யோசித்து செயல்படுத்துங்கள். முன்கோபத்தால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க நேரிடலாம்.

##~##
30.6.12 முதல் வருடம் முடியும் வரை ரோஹிணி நட்சத் திரத்திலேயே குரு செல்வதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம், யோகா போன்றவற்றில் நாட்டம் செலுத்துங்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்; மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனை அடைக்க வழி கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆடி, ஆவணி மாதங்களில் வாரிசு உருவாகும்.  வரவேண்டிய பணமும் தக்க நேரத்தில் வந்து சேரும். அரைகுறையாக நின்ற கட்டட வேலைகளையும் விரைந்து முடிப்பீர்கள்.

23.6.12 முதல் 14.8.12 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தலை தூக்கும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். வருடத்தின் பிற் பகுதியில் வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். சகோதர-சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போவீர்கள். 11.9.12 வரை சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டாதீர்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து சாப்பிடுவதை, தொலைதூர பயணங்களைத் தவிர்க்கவும்.

12.9.12 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ஆம் வீட்டி லேயே தொடர்வதால், வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். 2.12.12 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால், முன்கோபம் நீங்கும். ஆனால் கேது 12-ல் நுழைவதால் வீண் செலவுகள் வேண்டாம். 2.12.12 முதல் 6-ஆம் வீட்டுக்கு ராகு வருவதால் வி.ஐ.பி-கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். அரசு விஷயங்கள் உடனே முடியும். சனியுடன் ராகு 2.12.12 முதல் 13.4.13 வரை நீடிப்பதால், எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி அதிரடி முடிவுகள் எடுக்காதீர்கள். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, தலைமையிடம் மதிப்பு கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப் படும். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில், உங்களது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு.

கலைத்துறையினர், அரசால் கௌரவிக்கப் படுவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.  கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றியுண்டு. கல்யாணம் கைகூடும். மாணவ - மாணவியருக்கு மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வார்கள். அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த நந்தன வருடம் வேலைச் சுமையையும் அலைச்சலையும் தந்தாலும் பண வரவையும், புகழையும் தருவதாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு