பிரீமியம் ஸ்டோரி
மிதுனம்

தையும் இலவசமாக ஏற்க விரும்பாதவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 7-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. திறமைகள் வெளிப்படும்; வேலை கிடைக்கும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். உங்கள் ராசியை சந்திரன் பார்க்கும்போது புத்தாண்டு பிறப்பதால், மன இறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். செலவுகள் குறையும்.

கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு கூடும்.மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய சித்திரை மாதத்தில் வழி பிறக்கும். சகோதரர்கள் உதவுவர்.

##~##
17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள், திடீர் செலவுகளால் திணறுவீர்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். வேலை அதிகரிக்கும். புகழ், கௌரவம் வளரும். சவாலான வேலைகளையும் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 3-ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகளும், இதர வழக்குகளும் சாதகமாகும். சனி பகவான், 13.4.12 முதல் 11.9.12 வரை அர்த்தாஷ்டம சனியாக அமர்வதால், தாயின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வீண் பழிகளும் ஏற்படும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. கூடா நட்புகளைத் தவிர்க்கவும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண் டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

12.9.12 முதல் சனி 5-ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரது சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள். 2.12.12 முதல் கேது லாப வீட்டுக்கு வருவதால் ஷேர் லாபம் தரும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார். ராகு

5-ஆம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். உங்களின் கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். சிலர் தங்களது பிள்ளைகளை உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டி வரும். 2.12.12 முதல் வருடம் முடியும் வரை 5-ஆம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் கர்ப்பிணிகள்... கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை மெடிஸ்கேன் மூலம் கண்காணிப்பது நல்லது கனமான பொருட்களை கவனமாகக் கையாளுங்கள் ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பண வரவு, திடீர் யோகம் உண்டு.

வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். ஆவணியில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள்- உறவினர்கள் உதவியால், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் உண்டு. போட்டிகள் அதிகமாகும். பங்குதாரர்கள் உதவுவார்கள்.

மிதுனம்

உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனையை ஏற்பர். ஆவணி, கார்த்திகை மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வெளி நாட்டு நிறுவனங்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பங்குனியில் பதவி உயர்வு உண்டு!

கலைஞர்களுக்குப் புகழ் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. கன்னிப் பெண்களுக்கு, எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு விடா முயற்சி யாலும், தன்னம்பிக்கையாலும் உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு