பிரீமியம் ஸ்டோரி
கடகம்

சுற்றியிருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. எதையும் சாதிக்கும் வல்லமை பெறுவீர்கள். அலட்சியம் விலகும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். வழக்குகளில் தேக்க நிலை மாறும். வருட முற்பகுதி சாதிக்க வைப்பதாகவும், பிற்பகுதி சிக்கனத்தை உணர்த்துவதாகவும் அமையும்.

செவ்வாய் 2-ஆம் வீட்டில் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பேச்சில் கடுமை வேண்டாம்.

சேமிப்பு கரையும். ஆனாலும் புது வீடு- மனை வாங்கும் அளவுக்கு பணமும் சேரும்.  உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. தம்பதிக்கு இடையே சின்ன

பிரச்னைகளைப் பெரிதுப்படுத்த வேண்டாம். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சொந்த வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

##~##
17.5.12 முதல் வருடம் முடியும் வரை குரு லாப வீட்டில் அமர்வதால், உங்கள் கை ஓங்கும். ஷேர், ஸ்பெகுலேஷன் மூலம் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். வங்கியில் கடனுதவி கிடைக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. தம்பதிக்கு இடையே  இருந்த வீண் சந்தேகங்கள், வாக்குவாதங்கள் நீங்கும். வருடத்தின் முற்பகுதியில் புது வாகனம் வாங்குவீர்கள். பாதியில் நின்றுபோன பணிகள்... வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் முடிவடையும். வெளிநாட்டில் உள்ள உறவினர்-நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

11.9.12 வரை சனி 3-ல் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 12.9.12 முதல் சனி 4-ல் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி வந்து போகும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க நேரிடும். அரசாங்க வரிகளை உடனுக்குடன் செலுத்திவிடுங்கள். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகள் ஆதாரம் இல்லாமல் எவரையும் விமர்சிக்க வேண்டாம். தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். 2.12.12 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 10-ல் கேது நீடிப்பதால் நெருக்கமான ஒருவரை இழக்க நேரிடும். உத்தியோகத்தில் போராடி முன்னேறு வீர்கள். 2.12.12 முதல் ராகு 4-ஆம் வீட்டுக்கு வருவதால் தூக்கமின்மை வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில், போட்டியாளர்களைத் திணறடிக்கும் வகையில் உங்களின் அணுகுமுறை மாறும். புரட்டாசி மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளில் இழந்த பணத்தை மீட்பீர்கள். அரசாங்கத்தால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள்.  

கடகம்

உத்தியோகத்தில், உங்களின் பணியை எல்லோரும் மதிப்பார்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். 17.5.12 முதல் 10-ஆம் வீட்டை விட்டு குரு விலகுவதால், கேட்ட இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளைத் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு, சம்பள பாக்கி வந்து சேரும். பெரிய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகளும் தேடி வரும். வருடத்தின் பிற்பகுதியில் அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்; தை மாதம் கல்யாணம் நடக்கும். மாணவர்கள், எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர்வார்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த நந்தன வருடம், உங்களின் பண பலத்தை உயர்த்துவதாகவும், பழைய பிரச்னை களுக்கு நல்ல தீர்வு தருவதாகவும் அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு