பிரீமியம் ஸ்டோரி
சிம்மம்

தையும் ஆழமாக அலசி ஆராய்பவர் நீங்கள். புத்தாண்டு பிறக்கும்போது, குரு உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால், பண வரவு திருப்தியாக இருக்கும். உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. பழைய பிரச்னைகள், கடன்கள், வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.

குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதிக்கு அழகான வாரிசு உருவாகும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவாள். குழப்பங்கள், டென்ஷன் விலகும். சச்சரவுகள் குறையும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுபகாரியங்கள் கூடிவரும். 17.5.12 முதல் குரு ராசிக்கு 10-ல் நுழைவதால், எடுத்த வேலையை கடுமையான முயற்சிக்குப் பிறகே முடிக்க முடியும். வீண் பழி, ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டி வரும். எவரை நம்பியும் எந்தப் பணியையும் ஒப்படைக்காதீர்கள். திடீர் பயணம், வீண் செலவுகள், காய்ச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ஆனி, தை மாதங்களில் புது வாகனம் வாங்குவீர்கள்.

##~##
13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் ராசிக்குள் அமர்ந் திருப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சகோதரர்களை நினைத்து சங்கடப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. சனி பகவான் 11.9.12 வரை பாதச் சனியாக 2-ல் அமர்ந்திருப்பதால், பேச்சில் நிதானம்; கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. எவரிடமும் வாக்குறுதி அளிக்காதீர்கள். 12.9.12 முதல் சனி 3-ஆம் வீட்டுக்குள் நுழைவதால், புது சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மூத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயம் உண்டு; அவ்வப்போது மனஸ்தாபமும் எழும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி, சரியாகப் பராமரியுங்கள்.

2.12.12 முதல் ராகு 3-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கேது 9-ல் நுழைவதால் தந்தையாருடன் கருத்துவேறுபாடுகள் வெடிக்கும். இரவு நேர - நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும்.

ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். தாய்மாமன், அத்தை வழியில் சங்கடங்கள் வரும். மார்கழி யில் அரசு விவகாரங்களில் இழுபறி ஏற்படும். தை, மாசி மாதங்களில் திடீர் பண வரவு, புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் திருமணம் கூடி வரும். அரசியல்வாதிகள், தலைமையைப் பகைக்க வேண்டாம்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும்  இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். புது போட்டியாளர்கள் வருவர். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டு. தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.  

சிம்மம்

17.5.12 முதல் குரு 10-ல் அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச் சுமை உண்டு. சின்ன சின்ன அவமானங்களால் வேலையை விட்டுவிடலாமா என்ற ஆதங்கம் வந்து போகும். விருப்பம் இல்லாத இடத்துக்கு மாற்றப் படுவீர்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். கணினித் துறையினர் புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.

கலைஞர்கள், சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள். கன்னிப் பெண்கள், புதிய நண்பர்களிடம் கவனமுடன் இருக்கவும். வருட முற்பகுதியில் நல்ல வரன் அமையும். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேருவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு திடீர் வளர்ச்சி மற்றும் பிள்ளைகளால் நிம்மதி ஆகியவற்றைத் தருவதாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு