பிரீமியம் ஸ்டோரி
கன்னி

வாழ்க்கை வாழ்வதற்கே என நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. நீங்கள், பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களின் திருமணத் தடை நீங்கும்.

வருடம் பிறக்கும்போது குரு 8-ல் நிற்பதால் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். கடனை நினைத்துக் கவலைப்படுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங் களில் கொடுத்த பணம் திரும்பி வரும். மகள்  கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனை உயர்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவீர்கள். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 12-ஆம் வீட்டில் தொடர்வதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரும். சொத்து விவகாரங்களில் ஏமாற்றம் வந்து நீங்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

##~##
17.5.12 முதல் குரு 9-ல் அமர்வதால் எதிர்பாராத பண வரவு, பெரிய பதவிகள், சொத்துச் சேர்க்கை யாவும் உண்டு. சேமிக்கத் துவங்குவீர்கள். ஆடி, புரட்டாசி மாதங்களில் சிறு சிறு விபத்து, காய்ச்சல், சளித்தொந்தரவு வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். அரசியல்வாதிகள், சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவார்கள். அண்டை வீட்டாருடனான சச்சரவுகள் நீங்கும்.

13.4.12 முதல் 11.9.12 வரை ஜென்மச் சனியாக இருப்பதால் சோர்வு, ஏமாற்றம் வந்து நீங்கும். 12.9.12 முதல் பாதச்சனியாக தொடர்வதால் திடீர் பயணங்களும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். காலில் அடிபட வாய்ப்பு உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பொங்குசனி நடைபெறுபவர்களுக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 2.12.12 முதல் ராகு உங்கள் 2-ஆம் வீட்டுக்கு வருவதால் பேச்சில் கவனம் தேவை. அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். எவரை நம்பியும் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். ராசிக்கு 8-ஆம் வீட்டுக்கு கேது வருவதால் வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். இரவு நேர பயணங்கள் வேண்டாமே. சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று, சில முக்கியஸ்தர் களைச் சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், ஸ்டேஷனரி மற்றும் கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில், உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். வருடத்தின் முற்பகுதியில் பதவி உயர்வு கிட்டும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்பு வரும். உங்கள் மீதான பொய் வழக்கு தள்ளுபடியாகும். அயல் நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலைவாய்ப்பும் தேடி வரும்.

கன்னி

கலைஞர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். எனினும் உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவர். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

ஏழரைச் சனி தொடர்வதால், கன்னிப் பெண்கள் எதிலும் கவனமுடன் செயல்படவும். கல்யாணத் தடை விலகும். தடைப்பட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் சமயோசிதமாகச் செயல்படுவது நல்லது. கவிதை- கட்டுரைப் போட்டி களில் பரிசு வெல்வீர்கள். உயர்கல்வியிலும் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தருவதாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு