பிரீமியம் ஸ்டோரி
துலாம்

னிவான பேச்சால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் நந்தன ஆண்டு பிறப்பதால், முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. நிர்வாகத்திறன் கூடும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும்.

சித்திரை, வைகாசி மாதங்களில் அலைச்சல் இருந்தாலும் வளர்ச்சியும் உண்டு. வீடு கட்டுதல், நண்பர்-உறவினர் வீட்டு விசேஷங்களால் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போதும் கவனம் தேவை. சகோதரர்களுக்கு இடையே சச்சரவுகள் வந்து விலகும். ஆவணியில் சுப நிகழ்வுகள் கூடிவரும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. சொந்த ஊரில் மதிப்பு கூடும். தாம்பத்தியம் இனிக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து விலகும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருட மத்தியில் சொத்துப் பிரச்னை தீரும்.

##~##
13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புது சொத்து வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். பழைய பிரச்னைகள் விலகும்.

17.5.12 முதல் குரு 8-ல் அமர்வதால் அரசு விவகாரங்கள், வழக்குகளில் அலட்சியப் போக்கு கூடாது. வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். சிலரது சதியால் சொத்தை இழக்க நேரிடும். எதிலும் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். ஆவணி யில் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். மாசி மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், அவர்களுடன் கருத்து வேறுபாடும் வந்து போகும். பங்குனி மாதத்தில் அரசால் ஆதாயம் உண்டு. ஆனால், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவதால், வழக்கு விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிறுசிறு விபத்துகள், மனைவிக்கு உடல்நலக்குறை ஏற்படும். வருட மையப் பகுதியில் வீடு மாறுவீர்கள். வருட ஆரம்ப முதல் 11.9.12 வரை விரயச் சனி நடைபெறுவதால், தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்து போகவும். செலவுகளும் உண்டாகும். 12.9.12 முதல் வருடம் முடியும் வரை ஜென்மச்சனி. எனவே, பெரிய நோய் இருப்பதாக எண்ணுவீர்கள். நடைபயிற்சி அவசியம். கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும். கூழ், கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகள் மிக நல்லது. 2.12.12 முதல் கேது 7-ல் அமர்வதால், மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியது வரும். ராகு உங்கள் ராசிக்குள் நுழைவதால் தலைச்சுற்றல், முன்கோபம் வந்துபோகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். ஆடி, ஆவணியில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.

துலாம்

உத்தியோகத்தில் நெருக்கடிகள் நீங்கும். சக ஊழியர் களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சில நேரம் தன்மானத்தை விட்டுக்கொடுக்கவும் நேரிடலாம். ஆவணி, மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும்.

கலைஞர்கள், கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவது சிறப்பு. மூத்த கலைஞர்களைப் பகைக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களுக்கு, கல்யாணத் தடை நீங்கும். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் அவசியம்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்கள் வளர்ச்சியை தங்குதடையின்றி தொடர வைப்பதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு