பிரீமியம் ஸ்டோரி
விருச்சிகம்

ந்த வேலையையும் உடனே செய்து முடிக்க நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு தன வீடான 2-ஆம் வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. தன்னம் பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பி-களின் நட்பால் காரியம் சாதிப்பீர்கள்.

கற்பனையில் மூழ்காமல் களத்தில் இறங்கு வீர்கள். சித்திரை மாதம் செலவுகள் இருந்தாலும், அரசு காரியம் முடியும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள். குழந்தை இல்லாத தம்பதிய ருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பதவிகள் தேடி வரும்.

##~##
17.5.12 முதல் குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதலிடம் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு குறையும். அரசு பதவி கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அரைகுறையாக நின்றுபோன கட்டட வேலைகளையும் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். புது வாகனம் வாங்குவீர்கள்.

13.4.12 முதல் 11.9.12 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் உண்டு. வருமானம் உயரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவர். 12.9.12 முதல் ஏழரைச் சனி தொடர்வதால் டென்ஷன் அதிகரிக்கும். தம்பதிக்கு இடையே சந்தேகங்கள் வரக்கூடும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். ஆவணி, தை, மாசி மாதங்களில் திடீர் பண வரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எனினும், வீண் செலவுகள் வேண்டாம். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். மன உளைச்சல், ரத்த அழுத்தம் வந்துபோகும்.

2.12.12 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகுவதால், நெருக்கடிகள் குறையும். பெரிய நோய் இருப்பது போன்ற வீண் பயம் விலகும். கேது 6-ல் நுழைவதால் வழக்கு வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும்.

வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். விளம்பர யுக்திகளால், லாபத்தை பெருக்குவீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். யாருக்கும் அதிக முன்பணம் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வருட மத்தியில் கடையை விரிவுபடுத்துவீர்கள். தை, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது பங்கு தாரர்களைச் சேர்ப்பீர்கள்.

உத்தியோகத்தில், உங்களை எதிரியாக நினைத்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்கள் கை ஓங்கும். வழக்கில் வெற்றி பெற்று, நீங்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். பதவி உயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்

கலைத்துறையினரை, அலட்சியப்படுத்திய நிறுவனமே மீண்டும் அழைத்துப் பேசும். வதந்திகள் விலகும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப் பெண்களுக்கு தோஷங்களால் தடைப் பட்ட கல்யாணம், நல்லவிதத்தில் முடியும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் நினைத்ததைச் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள், விளையாட்டை குறைத்து கணிதம், அறிவியல் பாடங்களில் அதிகக் கவனம் செலுத்துங்கள். தேர்வில் மதிப்பெண் கூடும்.

மொத்தத்தில் இந்த நந்தன வருடம் முடங்கிக்கிடந்த உங்களை முதலிடத்துக்கு அழைத்துச் செல்வதுடன்  புது வசதி-வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு