பிரீமியம் ஸ்டோரி
தனுசு

னதுக்கு சரியெனப்பட்டதை தயங்காமல் செயல் படுத்துபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நேரத்தில், நந்தன வருடம் பிறக்கிறது. எதிர்ப்புகள் யாவும் அடங்கும். நீங்களும் வி.ஐ.பி ஆவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பண வரவு அதிகரிக்கும்.

எனினும், உங்கள் ராசியிலேயே நந்தன வருடம் பிறப்பதால், வேலை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம்

வரும். தடைப்பட்ட காரியங்கள் பூர்த்தியாகும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கடனை அடைக்கும் வகையில் வருமானம் உயரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் மேல் இருந்த கோபதாபங்கள் விலகும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அம்மாவின் உடல்நலன் மேம்படும்.

##~##
13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 9-ஆம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்துமோதல்கள் வந்து போகும். 17.5.12 முதல் உங்கள் ராசிநாதனான குரு பகவான் 6-ஆம் வீட்டில் நுழைவதால், செலவுகள் துரத்தும். குடும்பத்தில் எதைப் பேசினாலும் சண்டையில் போய் முடியும். கையிருப்பு கரையும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. ஆனி, ஆடி மாதங்களில் சிறு சிறு விபத்துகள் வந்து நீங்கும். வழக்குகளில் இழுபறி நிலை உருவாகும். எவரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். முன்கோபத்தைத் தவிருங்கள்.

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வருங்கால நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாரிசு இல்லையே என வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணத்துக்காக காத்திருப்போருக்கு சுபவேளை கூடிவரும். மார்கழியில் சற்றே உடல்நலக்குறைவும் அலைச்சலும் ஏற்படலாம். பணம் கேட்டு நச்சரிக்கும் உறவுகளிடம் உங்கள் நிலையை நயமாக எடுத்துச் சொல்லுங்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 10-ல் அமர்ந்திருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். 12.9.12 முதல் 11-ஆம் வீட்டுக்கு சனி நுழைவதால், உத்தியோகத்தில் பிரச்னைகள் நீங்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். 2.12.12 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியே கிட்டும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். கேது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வர். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும்.

வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. மக்கள் அதிகம் கூடும் இடத்தில் உங்களின் புதிய கடை அமையும். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, பெட்ரோகெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். மாசி, பங்குனி மாதங்களில் புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். அரசாங்க கெடுபிடிகள் தளரும்.

தனுசு

உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். வைகாசி மாதம் புது வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் சாதகமான சூழல் உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும்.  

கலைத் துறையினரின் கனவு நனவாகும்; படைப் புகள் பாராட்டப்படும். அரசு கௌரவிக்கும். மூத்த கலைஞர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களுக்குக் கண்ணுக்கழகான கணவர் அமை வார். தடைப்பட்ட படிப்பைத் தொடர்வீர்கள். மாணவர் களுக்குப் பரிசு-பாராட்டு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அதிகச் செலவு, கடின உழைப்புக்கு உங்களை ஆட்படுத்தினாலும், வெற்றியையும் பெரும் புகழையும் பெற்றுத் தருவ தாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு