பிரீமியம் ஸ்டோரி
மகரம்

ன்னிப்பதில் மகத்தானவர் நீங்கள். உங்களின்  பிரபல யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில், நந்தன வருடம் பிறக்கிறது. குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பிரிந்த தம்பதியும் ஒன்றுசேர்வர். வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலை மாறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய மனிதர்கள் உதவுவார்கள்.

எனினும் உங்களின் 12-வது ராசியில் நந்தன வருடம் பிறப்பதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களிடம் பணம் அதிகமாக இருப்பதாகக் கருதி, பலரும் தொந்தரவு செய்வார்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தையில், வைகாசி மாதம் முன்னேற்றம் உண்டாகும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு- மனை வாங்குவது, விற்பதில் இழுபறி நிலை மாறும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். வரவே வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 8-ஆம் வீட்டில் தொடர்வதால், சகோதரர்களுடன் சச்சரவு ஏற்படும். செலவுகளும், சொத்துப் பிரச்னைகளும், சிறு சிறு விபத்துகளும், விலையுயர்ந்த பொருட்களின் இழப்பும் வந்து போகும்.

##~##
17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 5-ல் நுழைவதால் தாயாருடனான மனத்தாங்கல் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலையில் அமர்வீர்கள். வருமானம் உயரும். பழைய வீட்டை விற்று, புது வீடு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் விருப்பம் அறிந்து, செயல்படுவீர்கள். சகோதரர்களுடன் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். அம்மாவின் நெடுநாள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.

ஆனி மாதத்தின் பிற்பகுதியில் திடீர் பண வரவு உண்டு. வீடு- மனை சேரும். ஆடி மாதத்தில் வீண் செலவு, அலைச் சல், மனைவிக்கு உடல்நலக்குறைவு வந்து போகும்.

உடன் இருந்துகொண்டு உபத்திரவம் கொடுப்பவர்களை விலக்குவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அக்கம்பக்கத்தாரிடம் அந்தரங்க விஷயங் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

13.4.12 முதல் 11.9.12 வரை சனி 9-ஆம் வீட்டுக்குள் நிற்பதால், கோர்ட் வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். 12.9.12 முதல் 10-ஆம் வீட்டுக்குள் சனி நுழைவதால், தந்தையின் உடல்நிலை சீராகும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டுக்குச் செல்வதால், உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.மறைமுக அவமானங்களும் வந்து போகும். ஆனாலும் பதவி, சம்பள உயர்வு உண்டு. 4-ஆம் வீட்டுக்கு கேது வருவதால் முன்கோபமும், சலிப்பும் மேலோங்கும். சில விஷயங்களை பலமுறை முயற்சித்து முடிப்பீர்கள்.

மகரம்

வியாபாரத்தில், தெளிவான முடிவெடுப்பீர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப செயல்படுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக் கும். கடையை சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதிக்காமல் செலுத்துவீர்கள். மூலிகை, அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி மற்றும் கட்டட வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், வைகாசி அல்லது ஆனி மாதத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. வேலை தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கலைத் துறையினர், புகழ் அடைவார்கள்.அரசு விருது உண்டு. பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்து பேசும். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து வேலையிலும் சேர்வீர்கள். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் வெற்றியுண்டு. அதிக மதிப்பெண்கள் எடுப்பீர்கள்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு பண வரவும், வாழ்வில் புதிய சகாப்தத்தை படைக்கும் வல்லமையை யும் தருவதாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு