பிரீமியம் ஸ்டோரி
கும்பம்

ற்றவர்கள் உரிமையில் தலையிடாத பண்பாளர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. சோம்பல் நீங்கும். உள்ளமும் உடலும் மலர்ச்சியாகும். கடந்த வருட பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் நல்ல தீர்வுகள் உண்டு!

தம்பதிக்கு இடையே பாசப்பிணைப்பு அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்கள் செயலில் கவனம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

##~##
23.6.12 முதல் 14.8.2012 வரை செவ்வாய் 8-ல் அமர்ந் திருப்பதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை வரக்கூடும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். 17.5.12 முதல் குரு 4-ஆம் வீட்டில் நுழைவதால் வேலைச்சுமை, ஏமாற்றம், மன உளைச்சல், ரத்த அழுத்தம், தாயார் மற்றும் உறவினர் பகை வரக்கூடும். குடும்ப வருமானத்தை உயர்த்தப் போராடுவீர்கள். வாகன விபத்து ஏற்படலாம். வெளிநாடு செல்வதற்கான தடைகள் நீங்கும். 13.4.12 முதல் 11.9.12 வரை ராசிநாதன் சனி பகவான் அஷ்டமத்துச் சனியாக வருவதால், எவரையும் விமர்சிக்க வேண்டாம். பண இழப்பு, காரியத் தடைகள், ஏமாற்றங்கள் வந்து போகும்.

12.9.12 முதல் 9-ஆம் வீட்டுக்கு சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால், தந்தையின் உடல்நிலை பாதிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். அரசியல்வாதிகள், மற்றவரை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். சொத்து விஷயங்களில் நிதானம் தேவை. பாதியில் நின்றுபோன கட்டட வேலைகளைப் பூர்த்தி செய்து, புது வீட்டில் குடிபுகுவீர்கள்.

2.12.12 முதல் ராகு உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டுக்குச் செல்வதால், தந்தையுடன் கருத்து வேறுபாடு வந்து போகும். கேது, ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வருவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய கடன் தீரும். தாம்பத்யம் இனிக்கும்.நவீன ஆபரணங்கள் சேரும்.

வியாபாரத்தில், அதிரடி மாற்றங்களால் போட்டியாளர் களை திகைக்கச் செய்வீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள். பங்குதாரர் களிடம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பது நல்லது. இரும்பு, உணவு வகைகள், கட்டுமானப் பொருட்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், பிடிப்பு ஏற்படும். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும்; சலுகைகளும் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளி நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

கலைஞர்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்கள் மீது மதிப்பு கூடும். கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் சிறப்பாக முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்தவிதமான முடிவும் எடுக்க வேண்டாம்.

மாணவ-மாணவியரின் நினைவாற்றல் கூடும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். நல்ல நண்பர்களும் அறிமுகம் ஆவார்கள். விரும்பிய பாடப் பிரிவில் சேர்வார்கள்.

மொத்தத்தில் இந்த நந்தன வருடம்... பிரச்னைகள் மற்றும் செலவுகளில் உங்களைச் சிக்க வைப்பதாகத் தோன்றினாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு