பிரீமியம் ஸ்டோரி
மீனம்

டுத்தவரை வெற்றி பெற வைத்து அகமகிழ்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங் களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

வருங்காலத்துக்காகச் சேமிக்கும் எண்ணம் வரும். புது வேலைக்கான முயற்சிக்குப் பலன் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். ஆடி மாதத்தில் பிள்ளை களின் உடல்நலனில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். மகளின் கல்யாணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். மகன் பொறுப்பாக நடந்துகொள்வார்; உயர்கல்வியில் ஆர்வம் காட்டுவார். ஆவணி மாதம் அரசு காரியங்கள் முடியும். அதிகார பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும்.

##~##
வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அப்ரூவல் ஆகும். சகோதர- சகோதரிகள் பாசமழை பொழிவர்.

வர வேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்று கடனை அடைப்பீர்கள். நீண்டநாள் நிலுவையில் இருந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற தருணம் வாய்க்கும்.

13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 6-ஆம் வீட்டில் நீடிப்பதால்... உங்களின் மாறுபட்ட அணுகுமுறை மற்றும் விட்டுக்கொடுக்கும் போக்கால், பழைய பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். புறநகர் பகுதியிலாவது வீட்டுமனை வாங்கிவிடலாம் என்று முயற்சிப்பீர்கள்.

17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 3-ல் அமர்வதால் சில விஷயங்கள் இரண்டாவது முயற்சியில்தான் முடியும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். பழைய நண்பர்கள், உறவினர்களிடம் பகை ஏற்படலாம். வீட்டுக் கடன் தவணையை கட்டுவதில் சிரமம் ஏற்படலாம். அனுபவ அறிவு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை 7-ல் சனி தொடர்வதால் முன்கோபம், வீண் கவலைகள் வந்து போகும்.

மனைவியின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். 12.9.12 முதல் அஷ்டமத்துச் சனியாக வருவதால் எதிலும் போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்வி மனப்பான்மை, வீண் பழி, பணப் பற்றாக்குறை, தம்பதிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். சாட்சி கையெழுத்திட வேண்டாம். காசோலை தரும்போது, வங்கிக் கணக்கைச் சரிபார்ப்பது நலம். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். சில நேரம், பெரிய நோய் இருப்பது போல் தோன்றும். எனினும் பதற்றம் வேண்டாம்.

2.12.12 முதல் கேது ராசிக்கு 2-ஆம் வீட்டுக்கு வருவதால், எவரையும் விமர்சிக்க வேண்டாம். ராகு 8-ஆம் வீட்டுக்கு வருவதால் திடீர்ப் பயணங்கள் அதிகமாகும். தந்தையின் உடல் நிலை மேம்படும்.

மீனம்

வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.சனியின் போக்கு சரியில்லாததால், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகள் வேண்டாம். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ஆவணி மாதம் தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். மார்கழி, தை மாதங்களில் புது வாய்ப்பு தேடி வரும். கலைஞர்களுக்கு, திறமைகள் வெளிப்படும்; கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

கன்னிப் பெண்களுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பயில வாய்ப்பு கிடைக்கும். கல்யாணம் கூடிவரும். சிலருக்கு, வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவர்களுக்கு, கல்வியில் அலட்சியம் கூடாது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசு-பதக்கம் கிடைக்கும். விரும்பிய கல்வி பிரிவில் போராடி இடம் பிடிப்பார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைத் திட்டமிட்டு செயல்பட வைப்பதுடன், சிக்கனத்தின் அவசியத்தை உணர வைப்பதாகவும் அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு