Published:Updated:

ராசிபலன்கள்

மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்கள்

மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:

 வேண்டாமே முன்கோபம்!

ராசிபலன்கள்
##~##

மேஷம்: மாறுபட்ட அணுகுமுறை கொண்டவர்களே! சுக்கிரன் சாதக   மாக இருப்பதால் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 9-ம் தேதி மாலை 3 மணி முதல் 10-ம் தேதி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால், முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குருவும், சூரியனும் சரியில்லாததால்... திடீர் பயணங்கள், வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.  

 அழகு... இளமை... அற்புதம்!

ராசிபலன்கள்

ரிஷபம்: பேச்சைக் குறைத்து, செயலில் வேகம் காட்டுபவர்களே! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். 29-ம் தேதி முதல் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால்.. அழகு, இளமை கூடும். ராகு, கேது மற்றும் குருவின் சஞ்சாரம் சரியில்லாததால்... வீண் விரயம், ஏமாற்றம், தர்மசங்கடமான சூழல்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் சலுகை திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.  

இனியது... இனியது... இல்லறம்!

ராசிபலன்கள்

மிதுனம்: வாழ்க்கைப் பாதையில் தடம் மாறாமல் பயணிப்பவர்களே! சூரியன் 10-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத்தன்மையை பாராட்டுவர். பூர்விகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். வியாபாரத் தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு ஆதரவு பெருகும்.

அலட்சியம் தவிர்ப்பது அவசியம்!  

ராசிபலன்கள்

கடகம்: தவறுகளை தயங்காமல் தட்டிக் கேட்பவர்களே! சனி பகவான் 3-ல் அமர்ந்திருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். வெள்ளியிலான பொருட்கள் வாங்குவீர்கள். செவ்வாய் 2-ல் நிற்பதால், கறாராகப் பேசாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது கூடுதல் கவனம் தேவை.        

சிக்கல் தீரும் நேரம்!

ராசிபலன்கள்

சிம்மம்: முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். பூர்விகச் சொத்தால் வருமானம் வரும். பழைய சிக்கல்களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சமையலறை சாதனங் களை புதிதாக வாங்குவீர்கள்.சூரியன் 8-ம் வீட்டிலும், சனி 2-ம் வீட்டிலும் தொடர் வதால்... உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வரும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத் தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.  

 கனத்த மனசு லேசாகும்!

ராசிபலன்கள்

கன்னி: வளைந்து கொடுத்து செல்பவர் களே! சுக்கிரன் 29-ம் தேதி முதல்  9-ல் அமர்வதால், கனத்த மனசு லேசாகும். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வர். ராசிக்கு 12-ல் செவ்வாயும், 7-ல் சூரியனும் தொடர்வதால்... முன்கோபம், வீண் டென்ஷன், சொத்துப் பிரச்னை வந்து செல்லும். உறவினர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். ஜென்மச்சனி தொடர்வதால், யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுங்கள். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

புகழ், கௌரவம், புதிய நகை!

ராசிபலன்கள்

துலாம்: பட்டறிவும், பகுத்தறிவும் உள்ளவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சனி, ராசியை விட்டு விலகி நிற்பதால்... உடல் ஆரோக்கியம் சீராகும். 28-ம் தேதி முதல் 29-ம் தேதி மதியம் 1.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால்... கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோ கத்தில் உங்களுக்கு எதிராக இருந்த அதிகாரி மாற்றப்படுவார்.  

 சோர்வு நீங்கி, செல்வச் செழிப்பு!

ராசிபலன்கள்

விருச்சிகம்: எல்லோரையும் எளிதில் நம்புபவர்களே! 6-ல் மறைந்து அவஸ்தைப்படுத்தும் சுக்கிரன், 29-ம் தேதி முதல் 7-ல் அமர்வதால், சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சனி வக்ரத்தில் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், ஷேர் மூலம் பணம் வரும். சூரியன் 5-ல் நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். 29-ம் தேதி மதியம் மணி 1.45 முதல் 31-ம் தேதி வரை சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்    தில் உயரதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.      

பிள்ளைச் செல்வங்களுக்கு பேரானந்தம்!

ராசிபலன்கள்

தனுசு: 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதை உணர்ந்தவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால்... வீடு, மனை அமையும். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகனுக்கு நல்ல குடும்பத்தி    லிருந்து பெண் அமைவார். 29-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் நுழைவதால்... வீண் செலவு, கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். 1, 2 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும்... பதவி உயரும்.

 புதிய முயற்சி... பெரிய வெற்றி!

ராசிபலன்கள்

மகரம்: 'சுத்தம் சோறு போடும்’ என்பதை நன்கறிந்தவர்களே! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.  பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஆடை, ஆபரணம் சேரும். 3-ம் தேதி முதல் 5-ம் தேதி காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக் கும். செவ்வாயும், குருவும் சரி இல்லாததால்... வீண் பழி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  

அன்பான கணவர்... ஆருயிர் தோழி!

ராசிபலன்கள்

கும்பம்: மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதுத்தெம்பு பிறக்கும். கணவர் கனிவாக நடந்து கொள்வார். தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சனி வக்ரமாகி, அஷ்டமத்துச் சனியானதால்... எதிலும் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 5-ம் தேதி காலை 9.30 மணி  7-ம் தேதி மதியம் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், அநாவசியப் பேச்சை தவிருங்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.  

 விரும்பியது வசப்படும்!

ராசிபலன்கள்

மீனம்: நன்றி மறவாதவர்களே! குருவும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவருடன் கலந்தாலோசித்து செலவு களைக் குறைப்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். வக்ரத்தில் சனி 7-ம் வீட்டிலும், ராசிக்குள் சூரியனும் நிற்பதால் கணவருக்கு உடல் உபாதை, மன இறுக்கம் வந்து நீங்கும். 7-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 9-ம் தேதி மாலை 3 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால், வேலைச் சுமையால் சோர்வடைவீர்கள். வியாபா ரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத் தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை கேட்டுமுக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.