Published:Updated:

பெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி!

குருப்பெயர்ச்சி பலன்கள்

பெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி!

குருப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
பெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி!
##~##
நி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழும் நந்தன வருடம் வைகாசி மாதம் 4-ஆம் தேதி (17.5.12), வியாழக்கிழமை கிருஷ்ணபட்சத்து துவாதசி திதியில், ரேவதி நட்சத்திரம் ஆயுஷ்மான் நாமயோகம், கரசை நாமகரணம் ஜீவனுள்ள சித்த யோகத்தில், சந்திரன் ஹோரையில்- பஞ்சபட்சியில், மயில் வலுவிழந்த நேரத்தில், சூரிய உதயம் பெயர்ச்சி நாழிகை 31.1-க்கு, மாலை 6:18-மணிக்கு சர வீடான மேஷத்தில் இருந்து ஸ்திர வீடான ரிஷபத்தில் நுழைகிறார் குரு பகவான். கல்வி, ஞானம், யோகம், தன்னடக்கம், ஒழுக்கம் மற்றும் பல உயரிய குணங்களுக்கெல்லாம் உரிய கிரகமான குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை ரிஷப ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார்.

கலைகள், கட்டடங்கள், சுகபோகங்கள் மற்றும் வாகனங்களுக்கு அதிபதியான சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் குரு அமர்வதால், மக்கள் சின்னச் சின்ன ஆசைகளுக்கு அடிமையாவார்கள். சொந்த வீடு, வாகனம் வாங்குவதை வாழ்வின் குறிக்கோளாக நினைப்பார்கள். பாரம்பரிய பண்பாடு கலாசாரங்களில் இருந்து பலரும் நழுவிச் செல்வார்கள். சினிமா, சின்னத்திரை துறைகளில் அடிக்கடி குழப்பங்களும், வேலை நிறுத்தங்களும், புகழ்பெற்ற கலைஞர்களுக்கு பாதிப்பும் உண்டாகும்.

மழைப்பொழிவு சீராக இல்லாமல் போகும். தென்மேற்குப் பருவக் காற்றால் குறைவான மழையும், வடகிழக்கு பருவக் காற்றால் அதிக மழையும் பெய்யும். ஒருபுறம் வறட்சி, மறுபுறம் வெள்ளப் பெருக்கு என ஏற்படும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதிப்பார்கள்.

வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும்; சில வங்கிகள் மூடப்படும்! தனக்கு எதிர் கிரகமான சுக்கிரனின் வீட்டில் குரு அமர்வதால், கட்டடத் துறை பாதிப்படையும். பில்டர்ஸ், பிரமோட்டர்ஸ் கடன் வாங்கி பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சும். அதேநேரம் மணல், சிமென்ட், இரும்பு, கம்பி ஆகியவற்றின் விலை குறையாது. வாகன விபத்துகள் அதிகரிக்கும்.

பெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி!

குரு பகவான் ரோஹிணி நட்சத்திரத்திலேயே ஏறக்குறைய 10 மாதங்கள் செல்வதால் பியூட்டி பார்லர், மசாஜ் மற்றும் பல் தொடர்பான தொழில்கள் சூடு பிடிக்கும். தண்ணீரால் புதிய நோய்கள் வரும். கண் நோய், தோல் நோய், யூரினரி இன்ஃபெக்ஷன் போன்றவற்றால் அதிகமானோர் பாதிப்பு அடைவார்கள். பறவைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் மீண்டும் வர வாய்ப்பு உண்டு.

குரு பகவான் புதன் வீடான கன்னியைப் பார்ப்ப தால், புத்தகம் வாசிக்கும் குணம் மக்களிடையே அதிகரிக்கும். சர்ச்சைக்குரிய புத்தகங்கள் வெளியாகி பிரபலமாகும். மாணவர்களிடையே ஆழமாகப் படிக்கும் போக்கு குறையும். பள்ளி, கல்லூரிகள் கட்டடங்களால் நவீனமாகும். தேர்வு முறை எளிதாகும். அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். சிவில், மெக்கானிக், கேட்டரிங் பாடப் பிரிவுகளில் அதிக மாணவர்கள் சேர்வார்கள். பள்ளி அங்கீகாரம் பெறுவதில் புதிய சட்டங்கள் அமலாகும். திருநங்கைகளுக்கு அதிக நன்மை உண்டாகும்.

பெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி!

செவ்வாயின் விருச்சிக வீட்டை குரு பார்ப்பதால் போலி மருந்துகள் அழிக்கப்படும். போலி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு, மூடப்படும். போலி மருத்துவர்களும் பிடிபடுவார்கள்.

நிலத்தின் விலை நகரங்களில் அதிகமாகும்; புறநகர்ப் பகுதிகளில் குறையும். கேன்சர், எய்ட்ஸ் முதலான நோய்களைக் குணப்படுத்த புதிய மருந்துகள் கண்டறியப் படும். பாரம்பரிய கூட்டுக் குடும்பங்களின் சொத்துகள் கைமாறும். பாகப் பிரிவினை, சொத்துப் பிரச்னை வழக்குகள் அதிகமாகும். வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் ஆர்வம் காட்டுவார்கள். பாலியல் பலாத்காரங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாகும். காவல் துறையினர் கை ஓங்கும். ராணுவத்தில் இருக்கும் குளறுபடிகள் சரியாகும். ராணுவம் நவீனமாகும். ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மின்சார சாதனங்களின் விலை குறையும்.

குரு பகவான் சனியின் மகர வீட்டைப் பார்ப்பதால் தொழிற்சாலைகள் அதிகரிக்கும். வாகனங்கள் அதிக விற்பனையாகும். கண்ணாடித் தொழில் சூடுபிடிக்கும். ஹோட்டல், தங்கும் விடுதி முதலான தொழில்கள் அதிக லாபம் தரும். சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதும். சாலைகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும். எலெக்ட்ரானிக் சாதனங்களின் விலை குறையும். பெட்ரோல், டீசல் படுகைகள் கண்டறியப்படும். கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க புதுச் சட்டங்கள் வரும். முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும். மக்களின் அன்றாட அத்தியாவசியச் செலவுகள் கூடும். விலையேற்றத்தால் மக்கள் மன உளைச்சலுக்குள்ளாவார்கள். அரசியலில் கட்சித் தாவல் அதிகரிக்கும். கூட்டணிகள் மாறும்.

பெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி!

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி, மக்களின் மனதில் ஆசை களை  அதிகப்படுத்துவதாகவும், சுக போகங்களை அனுபவிக்கத் தூண்டுவ தாகவும், அமையும். அதேநேரம் இந்த குருப்பெயர்ச்சி காலத்தின் பிற்பகுதி, மக்களிடையே ஆன்மிக நாட்டத்தை அதிகரிப்பதாக அமையும்.

குரு பகவான் கலை, இலக்கியம், இசை, ரசனைக்குரிய கிரகமான சுக்கிரனின் வீட்டில் அமர்வதால், பிள்ளைகளின் படிப்பில் மட்டும் அல்லாது அவர்களிடம் மறைந்து கிடக்கும் விளையாட்டு மற்றும் இசை ஆர்வத் துக்கும் அதிக முக்கியத்துவம்  தருவது நல்லது.

பரிகாரம்: இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் சகல நலன்களையும் அடைய தெய்வப் பிரார்த்தனை வழிசெய்யும். நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவுவதும். முடிந்தால் கண் தானம் செய்வதும் சிறப்பு; குருவின் திருவருள் உங்கள் இல்லம் தேடி வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism