Published:Updated:

மேஷம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
மேஷம்

பாரம்பரியத்தை மதிப்பவர் நீங்கள். இதுவரை உங்களுக்கு ஜென்ம குருவாக இருந்து பலன் தந்த குரு பகவான், 17.5.12 அன்று உங்கள் ராசியை விட்டு வெளியேறுகிறார்; 28.5.13 வரை தன வீடான 2-ஆம் வீட்டில் அமர்ந்து யோகப் பலன்களை தரப் போகிறார். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மனப் போராட்டங்கள் விலகும். வீண் சந்தேகத்தால் பிரிந்தவர்களும் ஒன்றுசேர்வர். பணபலம் கூடும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும். தள்ளிப்போன திருமணம் கூடிவரும். விசேஷங்களால் வீடு களைகட்டும். கடன்பட்டாவது சொந்த வீடு வாங்க நினைப்பீர்கள். உங்களின் கனவு நனவாகும். தேக ஆரோக்கியம் மேம்படும். உடன் பிறந்தவர்களுடன் மோதல்கள் விலகும். வங்கியில் அடமானம் வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். குரு உங்களின் 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். மருத்துவச் செலவுகள் குறையும். குரு 8-வது வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணம் வந்து சேரும். திட்டமிட்டபடி அயல் நாட்டு பயணங்கள் கூடிவரும். 10-வது வீட்டையும் பார்ப்பதால் புது வேலை அமையும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள், தலைமையுடன் நெருக்கமாவர். பதவி கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்...

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிக்கிறார். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். பிள்ளைகளை, அவர்கள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும்.

30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்கள் சுகாதிபதி சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்கிறார். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால், சிறு சிறு விபத்துகள் நேரிடலாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலை அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

மேஷம்

28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவியுண்டு. சகோதரிக்கு திருமணம் முடியும். வீட்டு மனை வாங்குவீர்கள். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் வந்துபோகும்.

வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கெமிக்கல், கமிஷன், உணவு விடுதி, ஃபைனான்ஸ் வகைகளால் லாபம் உண்டு. விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவர். உத்தியோகத்தில், குறை கூறிக் கொண்டிருந்த மேலதிகாரி, இனி தணிந்து போவார்; அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்களுக்கும் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயரும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவர்.

கன்னிப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, தோலில் அலர்ஜி ஆகியன நீங்கும். தடைப்பட்ட கல்யாணம் முடியும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பார்கள். விளையாட்டுப் போட்டியில் பதக்கம் உண்டு. சிலர், உயர்கல்விக்காக அயல்நாடு செல்வார்கள். கலைஞர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அரசு உங்களைக் கௌரவிக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, தன்னம்பிக்கையால் உங்களைச் சாதிக்க வைப்பதுடன், பணம்- அந்தஸ்தை அள்ளித் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism