Published:Updated:

ரிஷபம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

ரிஷபம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
ரிஷபம்

விடாமுயற்சியால் வெற்றி பெறுபவர் நீங்கள். 17.5.12 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிக்குள் நுழைகிறார் குரு பகவான். 'ஜென்ம குருவாயிற்றே!’ எனும் அச்சம் தேவையில்லை. எனினும் பொறுப்புகளும் வேலைச் சுமையும் கூடத்தான் செய்யும். எவருக்கும் வாக்குறுதி கொடுப்பதோ, பணம்-நகை இரவல் தருவதோ வேண்டாம். சிலநேரம் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்துபோகும். அசைவ, கார உணவுகளைக் குறையுங்கள். வீண் செலவுகளையும் தவிர்க்கவும்.

குரு உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்ட நிலை மாறும். குழந்தை பிறக்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். குரு உங்களின் 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தம்பதிக்கு இடையே ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். அயல்நாட்டில் இருக்கும் உறவினர் - நண்பர்களின் உதவி கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். உங்களின் பாக்கிய வீடான 9-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், ஓரளவு வருமானம் உயரும். வட்டிக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். பயணங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். புதிய பதவிகளும் கிடைக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்...

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிக்கிறார். வீடு- மனை அமையும். அரசு வேலைகள் சாதக மாகும். எனினும் இந்த காலகட்டத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காய்ச்சல், சளித் தொந்தரவு, ஏமாற்றங்கள், சிறு சிறு விபத்துகள் வந்து நீங்கும்.

30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஆடை- ஆபரணம் சேரும். இளைய சகோதர வகையில் நல்லது நடக்கும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். முக்கியப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால் ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு ஆரோக்கியக் குறைவு, சிறு விபத்து, செலவுகள், தம்பதிக்கு இடையே பிரிவு வந்து போகும்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால் குடும்பத்தில் குழப்பம், மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். முன்கோபத்தால் நல்ல நட்பை இழக்க நேரிடலாம்.

ரிஷபம்

28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் சப்தம-விரயாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், மனைவி வழி உறவுகளுடன் மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் பள்ளி-கல்லூரி சேர்க்கை நல்லவிதமாக முடியும். எனினும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் செயல்படவும்.

வியாபாரத்தில், சந்தை நுணுக்கங்களை அறிந்து பெரிய முதலீடு செய்வீர்கள். பற்று-வரவு உயரும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். அக்கம்பக்கத்துக் கடைக்காரர்களைப் பகைக்க வேண்டாம். மருந்து, ஹோட்டல், துணி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களுடனான மனஸ்தாபம் நீங்கும். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரி ஆதரவாக இருப்பார். பதவி உயர்வுக்காக தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். சம்பளம் கூடும். ஆனாலும் மறைமுக எதிர்ப்பும் இடமாற்றமும் உண்டு. கணினித் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைப்படி செயல்படுங்கள். வருட மத்தியில் திருமணம் கூடிவரும். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தவும். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள். கலைஞர்களுக்கு, அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, எதிர்நீச்சல் போடும் வல்லமையைத் தருவதுடன், சகிப்புத் தன்மையால் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism