Published:Updated:

மிதுனம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

மிதுனம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
மிதுனம்

தீவிரமான யோசனையும் மிதமான செயல்பாடும் உங்கள் பலம். 17.5.12 முதல் 28.5.13 வரை விரய வீட்டுக்குள் சென்று பலன் தரப் போகிறார் குரு. உங்களின் ராசிக்கு பாதகாதிபதியாக குரு வருவதால்... 12-ல் மறைந்தாலும் அதிக பாதிப்புகள் தராமல் நல்லதையே செய்வார். உங்கள் யோகாதிபதி சுக்கிரனின் வீட்டில் குரு அமர்வதால், உங்களின் வளர்ச்சி பெரிதாக தடைபடாது. எனினும் சிக்கனம் அவசியம்.

பெரிய விஷயங்களில் பெரியவர்களைக் கலந்து முடிவெடுக்கவும். சில காரியங்கள் இழுபறியாகி முடியும். எல்லா விஷயங்களிலும் உங்களின் நேரடிக் கவனம் தேவை. அந்நியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடன் கிட்டும். குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், தாயாருடன் மனஸ்தாபம் நீங்கும். அவர் வழி சொத்துகள் வந்துசேரும். புறநகர் மனையை விற்றுவிட்டு, வேறு நல்ல இடத்தில் வீடு வாங்குவீர்கள். உங்களின் கூடா பழக்கவழக்கம் குறையும். குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிரிகளை இனம் காண்பீர்கள். சிலநேரம் எதிரிகளாலும் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் சாதகமாகும். கை - கால், இடுப்பு வலி நீங்கும். வழக்கு சாதகமாகும். குரு 8-ஆம் வீட்டைப் பார்ப்பதால், வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். வெளி மாநிலத்தினர், வெளிநாட்டினரால் உதவியுண்டு. எனினும் புதியவர் களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். தள்ளிப்போன அரசு காரியங்கள் உடனே முடியும். அரசியல்வாதிகள், தலைமையைப் பகைக்க வேண்டாம். புது பதவிக்கு தாமதமாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்...

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்கள் தைரிய ஸ்தானாதிபதி சூரியனின் கார்த் திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால், அதிரடி முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரருக்கு திருமணம் கூடி வரும். பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் அவர்களைச் சேர்ப்பீர்கள்.

30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் தனாதிபதி சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிட்டும். இனிய பேச்சால் சாதிப்பீர்கள்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால் கண், காது வலி வந்துபோகும். தம்பதிக்குள் விவாதம் எழும். பணம் கொடுக்கல்-வாங்கலில் குறுக்கே நிற்க வேண்டாம். புனர்பூச நட்சத்திரக்காரர்கள் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

மிதுனம்

28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் சகோதர வகையிலும், வீடு பராமரிப்புக் காகவும் செலவுகள் ஏற்படலாம். புறநகரில் மனை அமையும்.  

வியாபாரத்தில், புது யுக்திகளால் லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன், ஏஜென்ஸி மூலம் பணம் வரும். மற்றவர்களது பேச்சைக் கேட்டு புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். புது ஏஜென்ஸிகளை எடுப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். இரும்பு, கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களைப் பகைக்காதீர்கள்.  உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம் பகையும் வேண்டாம். இடமாற்றம் உண்டு. பதவி உயர்வுக்கு உங்களின் பெயர் பரிசீலிக்கப்படும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் கவனம் தேவை. கணினித் துறையினருக்கு வேலைப் பளு அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் வேலை, படிப்பு காரணமாக பெற்றோரைப் பிரிய நேரிடும். மாணவர்கள் அலட்சியத்தைத் தவிர்க்கவும். கலைஞர்களின் படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கடின உழைப்பையும் புதிய அனுபவங்களைப் பெற்றுத் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism