Published:Updated:

கடகம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

கடகம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
கடகம்

திரடி முடிவுகளால் சுற்றத்தாரை அசத்துவீர்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை, உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் நீடிப்பதால், வெளிச்சத்துக்கு வருவீர்கள். வரவேண்டிய பணம் தக்க நேரத்தில் வந்து சேரும். பழைய கடனை பைசல் செய்ய வழி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். இளைய சகோதரியின் தடைப்பட்ட திருமணம் சிறப்பாக முடியும். வி.ஐ.பி-களுடன் நெருக்கம் ஆவீர்கள். லோன் மூலம் புது வாகனம் வாங்குவீர்கள். முன்பணம் கொடுத்து வைத்திருந்த சொத்துக்கு, மீதிப் பணத்தையும் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். மூத்த சகோதரர் உற்ற துணையாக இருப்பார். ஷேர் மூலம் பணம் வரும்.

உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் சோர்வு, விரக்தி விலகும். கடின வேலைகளையும் எளிதில் முடிப்பீர்கள். ஆபரணம் சேரும். வீட்டுப் பணி நிறைவு பெற, வங்கிக் கடன் கிடைக்கும். மதிப்பு கூடும். உங்களின் 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், இளைய சகோதர வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். குரு 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெகுநாட்களாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்...

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பண வரவு உண்டு. பிரபலங்கள் உதவுவர். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். அயல்நாடு செல்வீர்கள். பெரிய பதவி மற்றும் வீடு- மனை அமையும்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சிப்பர். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடலாம். திருமணம் கூடி வரும். வருமானம் உயரும்.

கடகம்

28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் தொட்டது துலங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்துப் பிரச்னை சுமுகமாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் புகழடைவீர்கள்.

வியாபாரத்தில் தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய முதலீடுகளால் கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பாக்கி வசூலாகும். உணவு, இரும்பு, துணி, வாகனம், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர் களிடையே கருத்துவேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில், உங்களுக்கு எதிரான மேலதிகாரி மாற்றப்படுவார். பதவி- சம்பள உயர்வு உண்டு. வேலை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங் களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும்.

கன்னிப் பெண்களுக்கு கல்யாணம் கூடிவரும்; மனதுக்கேற்ற மணாளன் அமைவார். மாணவர்களுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர் கல்வியைத் தொடர இடம் கிடைக்கும். கலைஞர்களுக்கு, புது வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பண வரவு, வெற்றி, பதவிகள் மூலம் உங்களைத் தலைநிமிர வைப்பதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism