Published:Updated:

சிம்மம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
சிம்மம்

ன் கையே தனக்குதவி என்பதில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை 10-வது வீட்டில் நின்று பலன் தரப்போகிறார். குரு உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், பேச்சில் தெளிவு பிறக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். பணம் வரும். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக முடியும். உங்களின் சுக வீடான 4-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், தாயாரின் உடல்நிலை நலமுறும். அவர் வழி உறவினரால் ஆதாயம் உண்டு. வீட்டு லோன் கிடைக்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குரு உங்களின் 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும். வழக்கு சாதகமாகும்.

உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் ஒரு வருடம் முழுக்க குரு தொடர்வதால், பதவியைத் தக்கவைக்க போராட வேண்டும். எவரை நம்புவது என்று தெரியாமல் தடுமாறுவீர்கள். வழக்கை நினைத்து நிம்மதி இழப்பீர்கள். பிள்ளைகளின் உயர் கல்விக்காக அதிகம் போராட வேண்டியிருக்கும். கல்யாணமும் இழுபறியாகி முடியும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்கும் வேலையில் இறங்குவீர்கள். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ஜாமீன் கையெழுத்திடுவதையும் தவிர்க்கவும். அயல்நாட்டில் இருக்கும் உறவினர்-நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு சின்னச் சின்ன குழப்பங்கள் வந்து போகும்; சேமிப்புகளைக் கரைக்காதீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்...

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் செல்வாக்கு உயரும். பண வரவு அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். வீடு மனை வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். நிர்வாகத்திறன் கூடும்.

30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் விரய ஸ்தானாதிபதியான சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடிக்கடி பதற்றப்படுவீர்கள். கோபம், சந்தேகத்தைத் தவிர்க்கவும். செலவுகள் அதிகரிக்கும்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால் தடைப்பட்ட வேலைகள் பூர்த்தியாகும். ஓரளவு பண வரவு உண்டு. விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவர். வேலை கிடைக்கும்.

28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் மிருக சீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். சொத்து வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வர்.

சிம்மம்

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து சரக்குகளைக் கொள்முதல் செய்வது நல்லது. பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டியது வரும். கடையை விரிவு படுத்துவீர்கள். ரியல் எஸ்டேட், கெமிக்கல், கமிஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர் வளைந்துகொடுப்பார். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பாராத லாபமும் கிடைக்கும். 10-ல் குரு அமர்வதால் உத்தி யோகத்தில் வேலை அதிகரிக்கும். யூனியன் விஷயங்களில் அதிக ஈடுபாடு வேண்டாம். முன்பிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் செய்த தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரிடும். அநாவசிய லீவு, அலுவலக விஷயங்களை வெளியில் பேசுவது வேண்டாம். இடமாற்றம் வரும். கணினித் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும்.

கன்னிப் பெண்களுக்கு அயல்நாடு சென்று உயர்கல்வி பெற வாய்ப்பு உண்டு. அப்பாவுடன் மனஸ்தாபம் வந்து போகும். கல்யாணம் கைகூடும். மாணவர்கள், நல்ல நட்பு சூழலை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. கலைஞர்கள், விமர்சனத்தையும் தாண்டி முன்னேறுவர்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வாழ்வின் நெளிவுசுளிவுகளை கற்றுத் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism