Published:Updated:

கன்னி

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

கன்னி

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
கன்னி

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்தவர் நீங்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ஆம் வீட்டில் அமர்வதால், வாழ்வில் உற்சாகம் கூடும். இனி எல்லாம் நலமே. எதிபார்த்த தொகை கைக்கு வரும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். சாந்தமாகப் பேசி சாதிப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். அடகில் இருந்த பத்திரத்தை மீட்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தந்தை வழியிலிருந்த மனக் கசப்புகள் நீங்கும். நிம்மதியான உறக்கம் வாய்க்கும்.

குரு 5-ஆம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், துவண்டிருந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். கையில் நாலுகாசு தங்கும். சேமிக்கத் துவங்குவீர்கள்.  குடும்பத்தில் கலகலப்பு கூடும். வட்டிக் கடனையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பீர்கள். எடுத்த காரியங்களில், முதல் முயற்சியே வெற்றிதான். வாகன வசதி பெருகும். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். உங்களால் பயனடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவுவார்கள். அரசியல்வாதிகள், வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். தலைமையுடன் நெருக்கம் ஆவீர்கள். மகான்களின் சந்திப்பு உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்:

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் விரயாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு மாறுவீர்கள். பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பிள்ளைகளை அவர்கள் விருப்பப் பட்ட பாடப்பிரிவில்- நிறுவனத்தில் சேர்ப்பீர்கள்.

30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் லாபாதிபதி சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பண வரவு உண்டு. மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விசேஷங்களால் வீடு களைகட்டும். வீட்டு லோன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்குகள் சாதகமாகும்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடை வதால் அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு சளித்தொந்தரவு, தொண்டை வலி, சிறு விபத்துகள் வந்து நீங்கும். செலவுகள் அதிகரிக்கும். மூத்த சகோதரரால் அலைச்சல் உண்டு. பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.

கன்னி

28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் திருதிய அட்டமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், அடுத்தடுத்த பயணங்களால் அலைச்சல் இருக்கும்.  இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக் காரர்களுக்கு உஷ்ணத்தால் உடல்நலக் குறைவும், சிறு விபத்தும் வந்து நீங்கும். சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பெரிய முதலீடுகளால் போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதியவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், உணவு, எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரிப் பாகங்களால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் கருத்துமோதல்கள்  நீங்கும். சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி உங்களின் திறமையை அங்கீகரிப்பார். பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினர்களுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். புது சலுகைகள் கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்ட திருமணம் கூடிவரும். தகுந்த வேலையும் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் பரிசு- பதக்கம் உண்டு. அதிக மதிப்பெண்களுடன் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். கலைஞர்களுக்கு, பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி வாழ்வில் வசந்தத்தை வாரி வழங்குவதுடன், நீண்டகால ஆசைகளை நிறைவேற்றுவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism