Published:Updated:

துலாம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

துலாம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
துலாம்

ர்மம் தவறாதவர் நீங்கள். 17.5.12 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் சென்று மறைகிறார். குரு 8-ல் நின்றால் வீண்பழி, அவமானம் வருமே... என அச்சப்படாதீர்கள். குரு உங்களின் பிரபல யோகாதிபதியான சந்திரனின் நட்சத்திரத் திலேயே அதிக நாட்கள் செல்வதால், அதாவது 30.6.12 முதல் 27.4.13 வரை சாதக மாக சஞ்சரிப்பதால் நல்லதே நடக்கும்.  

சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு கடன், சத்துரு, அலைச்சலைத் தரக்கூடிய 6-ஆம் வீட்டுக்கு அதிபதியான குரு 8-ல் சென்று மறைவது ஒரு வகையில் நல்லதே.ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். சுற்றியுள்ளவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். கோபம் குறையும். தம்பதிக்கு இடையே பனிப்போர் விலகும். யதார்த்தமாக முடிவுகள் எடுப்பீர்கள். நட்பு வேறு, பணம் வேறு என்பதை உணர்வீர்கள். சேமிக்கும் எண்ணம் எழும். வழக்கு சாதகமாகும். பகைமை பாராட்டியவர்களும் வலிய வந்து உறவாடுவர். குரு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பேச்சில் தடுமாற்றம் நீங்கும். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். மனைவி வழி சொந்தங்களால் எழுந்த சங்கடங்கள் தீரும். வேலைகள் பூர்த்தியாகும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் சோர்வு, அலைச்சல், டென்ஷன் விலகும். அம்மா வழிச் சொத்து கைக்கு வரும். சிலர் வீடு மாறுவீர்கள். குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பதவி வந்து சேரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்:

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் பாதகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கும், சேமிப்புகள் கரையும். வீண் பழி, மூத்த சகோதரர் வகையில் மனவருத்தம் எழலாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் ஜீவனாதிபதி சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. வீண்பழி விலகும். வீடு- மனை அமையும். விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்குத் திருமணம் முடியும்.

துலாம்

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவ தால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுப்பதோ, ஜாமீன் போடுவதோ வேண்டாம். பண வரவு அதிகரிக்கும்.

28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் தன-சப்தமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனைவி வழியில் அலைச்சல் இருக்கும். புது சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களால் உதவியுண்டு. வீடு மாறுவீர்கள்.

வியாபாரத்தில், பற்று - வரவு உயரும். விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்குச் செலுத்த வேண்டி யவற்றை முறையே செலுத்திவிடுங்கள். பங்குதாரர்களுடன் குழப்பங்கள் நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில், திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கம் ஆவீர்கள். புது வேலைக்கு மாறும்போது யோசித்துச் செயல்படுங்கள். கணினித் துறை யினருக்கு, புது சலுகைகள் கிடைக்கும். கன்னிப்பெண்கள் மேற்கல்வியில் கவனம் செலுத்தவும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டில் வெற்றியுண்டு. கலைஞர்களுக்கு ஒரு புறம் விமர்சனம் குவிந்தாலும் மறுபுறம் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி திட்டமிடுதலாலும், யதார்த்தமான முடிவுகளாலும் முன்னேற்றம் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism