Published:Updated:

விருச்சிகம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

விருச்சிகம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
விருச்சிகம்

ந்த வேலையும் உடனே முடிக்க ஆசைப்படுபவர் நீங்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் நீடிப்பதால், வசதிகள் பெருகும். தன பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான் வலுவடைவதால் வருமானம் உயரும். நிம்மதி நிலைக்கும்; பேச்சில் கனிவு கூடும். வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும். தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். நாடாளுவோரும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களும் தாமாக முன்வந்து உதவுவார்கள். கௌரவம் கூடும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவர். திருமணம் முடியும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் அமர்வீர்கள். பிரிந்து போன உங்கள் பிள்ளைகள் திரும்பி வருவார்கள்.

குரு பகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால், முகமும் அகமும் மலரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும்.  உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், பதவி - பட்டம் பெறுவீர்கள். ஏமாற்றம், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களால் பயன் அடைந்தவர்கள், உங்களுக்கு உதவ முன்வருவர். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்டது துலங்கும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களுடன் மனத்தாங்கல் நீங்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்:

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சாதித்துக் காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். திருமணம் கூடி வரும். வீடு, மனை வாங்க உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பி-களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் பாக்யாதிபதி சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பண வரவு அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். நிரந்தர வருமானத்துக்கு வழி தேடுவீர்கள்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவ தால் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலை பாதிக்கும். சொந்த வாகனத்தில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். முயற்சிகள் பலிதமாகும்.

விருச்சிகம்

28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். சொத்து வாங்குவீர்கள். ராஜ தந்திரத்தால் வெற்றியடைவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புது வாடிக்கையாளர் அதிகரிப்பார்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன், கல்வி நிறுவனங்கள், வாகன உதிரிப் பாகங்களால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வந்து சேரும். உத்தியோகத்தில், மேலதிகாரிக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்பார்த்த பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவர்.

கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் கோலாகலமாக முடியும். சிலர், உயர்கல்வியை விரும்பிய அயல்நாட்டில் சென்று முடிப்பீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். தேர்வில் அதிக மதிப்பெண் கிட்டும். கலைஞர்களுக்கு, நல்ல நிறுவனத்தில் வாய்ப்பு வரும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புகழின் உச்சிக்கு உங்களைக் கொண்டு செல்வதுடன், நிம்மதியும் வெற்றியும் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism