Published:Updated:

தனுசு

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

தனுசு

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
தனுசு

பொறுமையால் புகழ் பெறுபவர் நீங்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை 6-வது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். சகட குருவாச்சே... சங்கடங்கள் நேருமே என்று கலங்க வேண்டாம். குரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், பேச்சில் கம்பீரமும், பண வரவும் உண்டு. வழக்கு வெற்றி பெறும். குடும்பத்தார் உங்களது ஆலோசனையை ஏற்று நடப்பர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீண் ஆடம்பரம் வேண்டாம். கணவன்-மனைவிக்கு இடையே ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே வந்துபோகும். தாம்பத்தியம் இனிக்கும்.

குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வேலை கிடைக்கும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். தடைப்பட்டிருந்த கட்டடப் பணிகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை வி.ஐ.பி-கள் முன்னிலையில் நடத்துவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். சிலர், வேறு கட்சிக்கு மாறுவார்கள். உங்கள் ராசி நாதனான குரு 6-ஆம் வீட்டில் அமர்வதால் அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போல தோன்றும். செலவுகள் அதிகமாகும். உறவினரை பகைக்க வேண்டாம். அதேபோல், நெருங்கிய நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கலாம்! காசோலை கொடுக்கும்போது கவனம் தேவை. வீட்டை இடித்து மாற்றுவீர்கள். எவருக்கும் ஜாமீன் போடவேண்டாம். அம்மாவின் உடல்நிலை பாதிக்கும்; கருத்துமோதல் வரும். கூடா பழக்கவழக்கங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்:

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் பாக்யாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பண வரவு அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். வேலை கிடைக்கும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும்.

30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் அஷ்டமாதிபதி யான சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் அலைச்சல்,  செலவுகள் அதிகமாகும். சிறு விபத்து வந்து போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால் எதிர்பார்த்த பணம் வரும். புது முயற்சிகளில் வெற்றியுண்டு. பிரபலங்களால் ஆதாயம் அடைவீர்கள். இடவசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வேலை கிடைக்கும்.

தனுசு

28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் பூர்வ புண்ணிய விரயாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், குழந்தை பாக்கியம் கிடைக் கும். மகளுக்கு திருமணம் முடியும். வீடு மனை வாங்குவீர்கள். கௌரவம் கூடும்.

வியாபாரத்தில், வருடத்தின் பிற்பகுதியில் புதிய முதலீடுகள் செய்யலாம். போட்டி களும் இருக்கும். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களை அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில், அதிகச் சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வு உண்டு. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவர். வேலைப்பளுவும் உண்டு. கன்னிப் பெண்களுக்கு, மனதுக்கு இனிய மணமகன் அமைவார். தாயாருடன் கருத்துவேறுபாடு விலகும். மாதவிடாய்க் கோளாறு, தலைவலி, கண் எரிச்சல் நீங்கும். மாணவர்களே! நினைவுத்திறனை அதிகப்படுத்த கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அடுத்த முயற்சிகளால் பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism