Published:Updated:

மகரம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

மகரம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
மகரம்

னசாட்சியை மதிப்பவர் நீங்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை 5-ஆம் வீட்டில் நுழைந்து அள்ளிக் கொடுக்கப் போகிறார். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை இல்லாமல் தவித்த தம்பதிக்கு, அழகான பிள்ளை பிறக்கும். அம்மாவின் உடல்நிலை மேம்படும். சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசித்த நிலை மாறும். ஆரோக்கியம் மேம்படும். குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் முகமும் அகமும் மலரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வீர்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

குரு உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் அப்பாவுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வராமலிருந்த சொத்து கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். 11-வது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். வழக்கு சாதகமாகும். மனைவிக்கு விலையுயர்ந்த ஆடை-ஆபரணம் வாங்கித் தருவீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் மீண்டும் பதவி கிடைக்கப் பெறுவர்; கோஷ்டி பூசலில் தலையிடாமல் இருப்பது நல்லது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்:

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர் வீட்டு விஷேசங்களை எடுத்து நடத்துவீர்கள். எனினும் சிறு சிறு விபத்துகள் வந்து போகும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

30.6.12 முதல் 9.10.12 வரை மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் செல்வாக்கு கூடும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு உடல்நிலை சீராகும். மனைவி வழி உறவினருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வாகனம் அமையும். வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவ தால், மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக ஈடுபடுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் தோன்றுவர்.

மகரம்

28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் சுக லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். வாகனம், சொத்து அமையும். வி.ஐ.பி-கள் ஆதரவால் பெரிய பதவியில் அமர்வீர்கள்.

வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். கடனை பைசல் செய்யும் அளவுக்கு லாபம் அதிகரிக்கும். கடையை நவீனமயமாக்குவீர்கள். கணினி, உணவு, லாட்ஜ், ரியல் எஸ்டேட், கன்ஷக்சன், கமிஷன் வகைகளால் லாபம் உண்டு. வி.ஐ.பி-கள் பங்குதாரர்களாவார்கள். சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.  உத்தியோகம்- உயரதிகாரிகள் மீதான வெறுப்பு நீங்கும். இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் ஒன்றுசேர்வீர்கள். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட கல்யாணம் கூடிவரும். நல்ல வேலையும் கிடைக்கும். மாணவர்கள் கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெறுவார்கள். கலைஞர்களின் படைப்புகள் தடையின்றி வெளியாகும். நாடாளுபவர்களின் கரங்களால் பரிசு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன் எல்லாவற்றிலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism