Published:Updated:

கும்பம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

கும்பம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
கும்பம்

ப்போதும் நீங்கள் நியாயத்தின் பக்கம்தான்! குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை 4-வது வீட்டில் அமர்வதால், கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டும். சேமிப்புகள் கரையும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் எழலாம். உணர்ச்சிவசப் படாமல், அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். இரவு நேர  தூர பயணங்களைத் தவிர்க்கவும். காலில் அடிபட வாய்ப்பு உண்டு. நீர், நெருப்பு மற்றும் மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு- மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரிபார்க்கவும். பிரச்னைகளை பேசித் தீர்க்கப் பாருங்கள்.

குரு 8-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். பயணங்கள் சாதகமாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். சொத்து வழக்குகள் சாதகமாகும். மகள் கல்யாணம் திடீரென ஏற்பாடாகும். உயர் கல்வி - வேலையின் நிமித்தம் பிள்ளைகள் உங்களைப் பிரியலாம். குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால், மதிப்பு உயரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பெரிய பதவிகள் வாய்க்கும். குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. பால்ய நண்பர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்:

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் சப்தமாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால், மனைவியின் உடல்நிலை பாதிக்கும். அவர் வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் பகை வந்து நீங்கும்.  

30.6.12 முதல் 9.10.12 வரை மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்கள் சஷ்டமாதிபதியான சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் செலவுகள் கூடும். சிறு விபத்துகளும் நிகழலாம். பயணங்கள், வேலைச்சுமை அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் எழும். மெடிக்ளைம் எடுத்துக்கொள்ளுங்கள்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால் ஓரளவு பண வரவு உண்டு. குடும்பத்திலும் அமைதி திரும்பும் தடைப்பட்ட வேலைகள் முடியும். சிலர் வீடு மாறுவர். கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும்.

கும்பம்

28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் தைரிய ஜீவனாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், இளைய சகோதர வகையில் உதவி உண்டு. சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். கடையை வேறு இடத்துக்கும் மாற்றவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கையில் ஆர்டர்கள் இருந்தும் அதை முடித்துக்கொடுக்க பணம் இல்லாத நிலை உருவாகும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில சலுகைகளை அறிவிப்பீர்கள். கமிஷன், எண்ணெய் வகைகள், உணவு, கட்டிட உதிரிப் பாகங்கள், கெமிக்கல், பர்னிச்சர், பழைய இரும்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயமுண்டு. பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மேலதிகாரியிடம் மனஸ்தாபம் வெடிக்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். கணினித் துறையினருக்கு வேலையில் திருப்தியில்லாமல் போகும்.

கன்னிப் பெண்கள் பெற்றோர் ஆலோசனையின்றி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவர்கள் கணிதம் - அறிவியல் பாடங்களில் கவனம் செலுத்துங்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தடைப்பட்டு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சகிப்புத்தன்மையாலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism