Published:Updated:

மீனம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

மீனம்

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

Published:Updated:
மீனம்

கொள்கைப் பிடிப்புள்ளவர் நீங்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை 3-வது வீட்டுக்குள் சென்று மறைகிறார். எனினும், உங்களின் பூர்வபுண்யாதிபதியும், யோகாதிபதியுமான சந்திரனின் சாரத்தில் ஏறக்குறைய 10 மாதங்கள் வரை குரு செல்வதாலும், தன-பாக்கியாதிபதியான செவ்வாயின் சாரத்தில் ஒரு மாதம் செல்வதாலும் உங்களின் வளர்ச்சி குறைவுபடாது.

எனினும் உங்கள் ராசிநாதனான குரு 3-ல் மறைவதால், புதிய முயற்சிகளுக்கு சிற்சில தடைகள் ஏற்படும். எதிலும் திட்டமிடல் அவசியம். முக்கிய அலுவல்களை நீங்களே முடிக்கவும். வாய்வு கோளாறால் நெஞ்சு வலிக்கும்; அச்சப்பட வேண்டாம். கொழுப்புச் சத்துள்ள பதார்த்தங்களைத் தவிர்க்கவும். எவருக்கும் கியாரண்டி கையெழுத்துப் போட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன் யோசித்துச் செயல்படவும். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். லாகிரி வஸ்துகளை, தவறான நட்புகளைத் தவிர்க்கவும். தம்பதிக்கு இடையே சிறு சச்சரவுகள் வந்து நீங்கும். கடன் வாங்குவது வேண்டாம். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. உங்களின் 7-வது வீட்டை குரு பார்ப்பதால், உங்கள் உள்மனது சொல்வதைக் கேட்டு நடப்பீர்கள். குரு 9-வது வீட்டைப் பார்ப்பதால் பண வரவு உண்டு. பழைய கடன் பைசலாகும். தந்தையுடன் மனக்கசப்புகள் நீங்கும். மகனின் உயர் கல்விக்காக அதிகம் செலவு செய்ய நேரிடும். மகளுக்கு நல்ல கணவன் வாய்ப்பான். குரு 11-வது வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவானின் சஞ்சாரம்:

##~##
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் செலவு, பயணங்கள் அதிகரிக்கும். வீண் விவாதம், கோபத்தைத் தவிர்க்கவும், நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

30.6.12 முதல் 9.10.12 வரை மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வேலை கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப் புழக்கம் அதிகரிக்கும்.

10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால், சில வேலைகளைப் போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். படிப்பு, வேலைக்காக பிள்ளைகள் உங்களைப் பிரிவர்.

மீனம்

28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் தன-பாக்கியாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், தந்தை வழியில் நிம்மதியுண்டு. ஓரளவு பணம் வரும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு நீங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு.

வியாபாரத்தில், வருங்காலச் சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. கூட்டுத்தொழிலில் சில பிரச்னைகள் எழலாம். ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், கல்வி, கன்சல்டன்ஸி, விடுதிகள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் எழும். எனினும் முக்கியப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பர். சிலருக்கு இடமாற்றம் உண்டு. சிலர், அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல நேரிடும். கணினித் துறையினருக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். கன்னிப் பெண்களின் புது முயற்சிகள் வெற்றி பெறும். திருமணத் தடை நீங்கும். மாணவர்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்துவது மிக அவசியம். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவது சிறப்பு.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி தெய்வ பலத்தாலும், கடின உழைப்பாலும் உங்களின் இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism