Published:Updated:

ஸ்ரீப்ருஹஸ்பதி ஸ்தோத்திரம்

ஸ்ரீப்ருஹஸ்பதி ஸ்தோத்திரம்

ஸ்ரீப்ருஹஸ்பதி ஸ்தோத்திரம்

ஸ்ரீப்ருஹஸ்பதி ஸ்தோத்திரம்

Published:Updated:
ஸ்ரீப்ருஹஸ்பதி ஸ்தோத்திரம்

ஸ்ரீபகவானுவாச

ப்ருஹஸ்பதிஸ் ஸுராசார்ய தயாவான் ஸுபலக்ஷண:
ஸோகத்ரய குரு ஸ்ரீமான் ஸர்வக்ஞஸ்ஸர்வகோவித:
ஸர்வேஸஸ்ஸர்வதாஸ் பீஷ்டஸ் ஸர்வஜித் ஸர்வபூஜிதI
அக்ரோதனோ முனிஸ்ரேஷ்ட: நீதிகர்த்தா குரு: பிதாII
விஸ்வாத்மா விஸ்வகர்தா ச விஸ்வயோநிரயோநிஜ:
பூர்புவஸ்வ: ப்ரபுஸ்சைவ பர்தாசைவ மஹாபல:II
சதுர்விம்ஸதி நாமானி புண்யானி நியதாத்மனாI
நந்தகோப க்ருஹாஸீன விஷ்ணுனா கீர்த்திதானி வை
ய: படேத்ப்ராதருத்தாய ப்ரயதஸ்ஸுஸமாஹித:I
விபரீதோஸ்பி பகவான் ப்ரீதஸ்யாத்து ப்ருஹஸ்பதி:II
யஸ்ஸ்ருணோதி குருஸ்தோத்ரம் சிரம் ஜீவேன்ன ஸம்ஸய:I
ஸஹஸ்ரகோதானபலம் விஷ்ணோர்வசனதோ பவேத்
ப்ருஹஸ்பதி க்ருதாபீடா நகதாசித்பவிஷ்யதிII
இதி விஷ்ணுதர்மோத்தரே ப்ருஹஸ்பதி ஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொருள்: பகவான் கூறுகிறார்...

##~##
பிரஹஸ்பதியானவர் தேவர்களுக்கு ஆசாரியர், தயை உள்ளவர், சுபமான லட்சணங்கள் பெற்றவர்,  மூவுலகுக்கும் குருவானவர், சோபையுள்ளவர், சர்வத்தையும் அறிந்தவர், எல்லாவற்றிலும் கரை தேர்ந்தவர், சகலத்துக்கும் ஈஸ்வரர், எப்போதுமே மிகுந்த இஷ்டமாக இருப்பவர், எல்லாவற்றையும் ஜயித்தவர், எல்லோராலும் பூஜிக்கப்பட்டவர், கோபமற்றவர், சிறந்த முனிவர், நீதியைச் செய்தவர், குரு, தந்தை, உலகின் ஸ்வரூபமாக இருப்பவர், உலகைச் செய்தவர், தெய்வீகப் பிறப்பு வாய்ந்தவர், பூ: - புவ: - ஸுவ:  எனும் மூவுலகத்துக்கும் பிரபுவாக இருப்பவர், உடன்பிறந்தவராக இருப்பவர், மிக்க பலமுள்ளவர்... புண்ணியம் வாய்ந்த இந்தப் (பிரகஸ்பதியின்) பெயர்கள் நந்தகோபனின் வீட்டில் வசித்த ஸ்ரீகிருஷ்ணரால் ஒருமைப்பட்ட மனதுடன் கூறப்பட்டவை.

மிக்க முனைப்புடனும் ஒருமுகப்பட்ட மனதுடனும் எவரொருவர் அதிகாலையில் எழுந்து இதைப் படிக்கிறாரோ... அவருக்கு  சாதகமான பலனை அருளும் நிலையில் திருப்தியுள்ளவராவார் பிரகஸ்பதி.

இந்த குரு ஸ்தோத்திரத்தைக் கேட்பவர் சிரஞ்ஜீவியாக வாழ்வார் என்பதில் ஐயம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்ரீவிஷ்ணுவின் வாக்குப்படி ஆயிரம் கோ தானம் செய்த பலனும் கிடைக்கும். குரு கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபோதும் ஏற்படாது.

ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்

ஸ்ரீப்ருஹஸ்பதி ஸ்தோத்திரம்

ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்ட ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும்.

யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ
மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி:!
ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா:மன்தே ச
வேதாந்தமஹாரஹஸ்யம்!!

பொருள்: எவன் பால சந்திரனை சிரஸ்ஸில் தரித்த தங்களின் பிரஸன்ன மூர்த்தியை தியானம் செய்கிறானோ, அவன் ஆயுள் ஐஸ்வர்யம் வித்யை ஆகியவற்றை அடைகிறான். முடிவில் வேதாந்தத்தின் பரம ரஹஸ்யமான தங்களையும் அடைவான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism