Published:Updated:

ராசிபலன்கள்

ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை

பணம் புழங்கும்... பயணம் சிறக்கும்!

ராசிபலன்கள்
##~##

மேஷம்: அதர்மத்துக்கு தலை வணங்காதவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் கை ஓங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் சென்று மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், தோழிகளை இப்போது சந்தித்து மன நிறைவு அடைவீர்கள். மே 7, 8 ஆகிய தேதிகளில் பொறுமையுடன் செயல்படுங்கள். சூரியனும், குருவும் ராசிக்குள் நிற்பதால்... உடல் உபாதை, காரிய தாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் கால நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும்.

 தோற்றப் பொலிவு ஜோர்!

ராசிபலன்கள்

ரிஷபம்: தொடங்கியதை முடிக்கும் வரை துவளாதவர்களே! 5-ல் நிற்கும் சனி அவ்வப்போது மன இறுக்கத்தை தந்தாலும், ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால், நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும். வீடு மாறுவது, விற்பது சாதகமாக அமையும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். புதன் வலுவிழந் திருப்பதால்... செலவுகள், வேலைச் சுமை அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்யோகத் தில் கவனக்குறைவை தவிருங்கள்.

குழப்பம் நீங்கி, குதூகலம்!

ராசிபலன்கள்

மிதுனம்: நெருக்கடி நேரத்திலும் பொறுமை இழக்காதவர்களே! குருவும், சூரியனும் வலுவாக இருப்பதால், கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். குழப்பம் நீங்கி, குதூகலம் ஏற்படும். கணவர் உங்களைப் பாராட்டுவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனை விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். 4-ல் சனி நிற்பதால் வேலைச்சுமை, தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.        

பிள்ளைகளால் மகிழ்ச்சி... உறவினர்களால் ஆதாயம்! 

ராசிபலன்கள்

கடகம்: பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் திறன்மிக்கவர்களே! சூரியன் வலுவாக 10-ல் நிற்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். புது பொறுப்பும், வேலையும் தேடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. குரு 10-ல் நீடிப்பதால், அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சக ஊழியர்கள் உதவுவார்கள்.

கை கொடுப்பார் கணவர்!

ராசிபலன்கள்

சிம்மம்: மற்றவர்களை மதிப்பீடு செய்வதில் வல்லவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டு மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். கணவர் உங்கள் புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். பாதச் சனி தொடர்வதால்... வீண் வாக்குவாதம், செலவுகள், உடல் உபாதை வந்து போகும். சகோதர வகையில் கவலைகள் வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சிலர் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

 நிம்மதி தரும் பணியிடம்!        

ராசிபலன்கள்

கன்னி: கால நேரம் பார்க்காமல் உழைப்பவர்களே! புதன், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் முன்னேறத் துடிப்பார்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். ஏழரைச் சனியால் உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். திடீர் பயணங் கள், செலவுகளால் திணறுவீர்கள். வியா பாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில், அலுவலக  சூழ்நிலை அமைதி தரும்.

இல்லக் கனவு... இனிதே நிறைவேறும்!

ராசிபலன்கள்

துலாம்: எதிலும் புதுமையை விரும்புபவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை, இப்போது நிறை வேறும். ஏப்ரல் 29-ம் தேதி முதல் புதன் 7-ல் அமர்வதால்... உறவினர், தோழிகளுடன் இருந்த மோதல்கள் நீங்கும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால்... டென்ஷன் வந்து விலகும். வியாபாரத்தில் வி.ஐ.பி-க்கள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.               

 எதிரிகள்.... இனி, நண்பர்கள்!

ராசிபலன்கள்

விருச்சிகம்: நியாயத்தை பேசுபவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஏப்ரல் 29-ம் தேதி முதல் புதன் 6-ல் நுழைவதால்... உடல் உபாதை, உறவினர் மற்றும் தோழிகளுடன் நெருடல்கள் வந்து நீங்கும். ஏப்ரல் 25-ம் தேதி இரவு 9 மணி முதல் 27-ம் தேதி வரை அலைச்சல் அதிகரிக்கும். வியாபா ரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.  

விட்டதை பிடிக்கும் வேளை!

ராசிபலன்கள்

தனுசு: உதவும் குணம் உள்ளவர்களே! குரு வலுவாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. மே 2-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் வீட்டுக்கு வருவதால், கணவருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சூரியன் 5-ல் நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். ஏப்ரல் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி மதியம் 1.30 மணி வரை அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.

  இரவல் தந்தால் இம்சை!

ராசிபலன்கள்

மகரம்: பாரம்பரிய பழக்கங்களை விட்டுக் கொடுக்காதவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பூர்விக சொத்தில் உங்கள் பங்கை கேட்டு வாங்குவீர்கள். மே 2-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனம் செலவு வைக்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். ஏப்ரல் 30-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் மே 2-ம் தேதி மாலை 6 மணி வரை நாவடக்கத்துடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

அயல்நாட்டில் இருந்து ஆதாயம்!

ராசிபலன்கள்

கும்பம்: கூடிவாழ ஆசைப்படுபவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொத்து சிக்கல்கள் சுமுகமாக முடியும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. மே 2-ம் தேதி மாலை 6 மணி முதல்  4-ம் தேதி இரவு 9 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அஷ்டமத்துச்சனி தொடர்வதால், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய தொடர் பால் ஆதாயம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

 செல்வ மழை பொழியும்!

ராசிபலன்கள்

மீனம்: அனுபவ அறிவால் பிரமிக்க வைப்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், பூர்விக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகள் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். சனி 7-ல் நிற்பதால்... கணவருக்கு வேலைச் சுமை அதிரிக்கும். மே 4-ம் தேதி இரவு 9 மணி முதல் 6-ம் தேதி வரை நிதானித்து செயல்படப் பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.