Published:Updated:

ராசிபலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மே 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை

இனி இல்லை ஏமாற்றம்!

ராசிபலன்கள்
##~##

மேஷம்: விட்டுக் கொடுத்து வெல் பவர்களே! சனி 6-ம் வீட்டில் நிற்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். தினந் தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பூர்விகச் சொத்தை சீரமைப்பீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால், தடைபட்ட அரசு காரியங்கள் முடியும். ஆனால், பேச்சால் பிரச்னைகள் வரக் கூடும். 17-ம் தேதி முதல் குரு பகவான் ராசியை விட்டு விலகி 2-ல் நுழைவதால், கணவர் கனிவாக நடந்து கொள்வார். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.

உற்சாக ஊற்று பொங்கும் நேரம் !

ராசிபலன்கள்

ரிஷபம்: கடந்து வந்த பாதையை மறவாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். தாமதமான விஷயங்கள் உடனே முடியும். உறவினர், தோழிகளின் வருகையால் வீட்டில் எப்போதும் உற்சாகம் பொங்கும். 14-ம் தேதி முதல் சூரியனும், 17-ம் தேதி முதல் குருவும் ராசிக்குள் நுழைவதால்... வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து போகும். 9, 10 ஆகிய தேதிகளில் எதிலும் அவசரப்பட வேண்டாம். வியா பாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும்.

 வெற்றி முரசு கொட்டும் வேளை!

ராசிபலன்கள்

மிதுனம்: மனசாட்சிக்கு பயந்தவர்களே! 6-ல் நிற்கும் ராகு, உங்களை பரபரப் பாக செயல்பட வைத்து பல விஷயங் களை விரைந்து முடிக்க வைப்பார். ராசிக்குள் சுக்கிரன் தொடர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை அமையும். 17-ம் தேதி முதல் குரு 12-ல் நுழைவதால் சுபச் செலவுகள், இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். 11-ம் தேதி முதல் 13-ம் தேதி காலை 11 மணி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பாராட் டால் உற்சாகமடைவீர்கள்.

 முக்கிய கிரகங்கள் சாதிக்க வைக்கும் !

ராசிபலன்கள்

கடகம்: கடமை தவறாதவர்களே! 14-ம் தேதி முதல் லாப வீட்டை நோக்கி முக்கிய கிரகங்கள் நகர்வதால், எதிலும் சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். 17-ம் தேதி முதல் குரு லாப வீட்டில் நுழை வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். 13-ம் தேதி காலை 11 மணி முதல் 15-ம்  தேதி இரவு 7.30 மணி வரை சிக்கனமாக இருக்கப் பாருங்கள். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.

 உள்ளம் நிறைக்கும் உல்லாச பயணம் !

ராசிபலன்கள்

சிம்மம்: காலநேரம் தவறாதவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவடைந் திருப்பதால், எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். அழகு, இளமை கூடும். உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். 17-ம் தேதி முதல் குரு 10-ல் நுழைவதால், அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் ஏற்படும். 15-ம் தேதி இரவு 7.30 மணி முதல் 17-ம் தேதி வரை அலைச்சல் அதிகரிக் கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் தவறுகளை அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

 அலைச்சல்... டென்ஷன் தணியும் !

ராசிபலன்கள்

கன்னி: மகிழ்வித்து மகிழ்பவர்களே! 15-ம் தேதி முதல் ராசிநாதன் புதன் 9-ல் அமர்வதால்... அலைச்சல், டென்ஷன் குறையும். பூர்விக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். 17-ம் தேதி முதல் குரு 9-ம் வீட்டில் நுழை வதால்... வருமானம், அந்தஸ்து உயரும். உறவினர், தோழிகள் உங்கள் வீடு தேடி வருவார்கள். 18-ம் தேதி முதல் 20-ம் தேதி மாலை 5.30 மணி வரை மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதி காரி இடம் மாறுவார்.

 நிம்மதி நிலவும் !

ராசிபலன்கள்

துலாம்: நியாயத்தின் பக்கம் நிற்பவர் களே! பாதகாதிபதி சூரியன் 14-ம் தேதி முதல் 8-ல் மறைவதால், குடும்பத்தில் நிம்மதி நிலவும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். ஃப்ரிட்ஜ், ஏ.சி போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். சனியால் சங்கடங்கள் வரும். 17-ம் தேதி முதல் குரு 8-ல் மறைவதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். 20-ம் தேதி மாலை 5.30 மணி முதல் 22-ம் தேதி வரை அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத் தில் சக ஊழியர்களின் வேலைகளை யும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.      

 சந்திரன் சாதகம்... பணவரவு ஓஹோ !

ராசிபலன்கள்

விருச்சிகம்: எதார்த்தமாக பேசி சாதிப்ப வர்களே! சந்திரன் சாதகமான வீடு களில் செல்வதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். பணவரவு அதிகரிக் கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். 17-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் குரு அமர்வதால், தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால்... வீண் டென்ஷன், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத் தில் பிரச்னை தந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.

 ஜெயம் உண்டு... பயம் இல்லை !  

ராசிபலன்கள்

தனுசு: வாழ்க்கை பாடத்தைக் கற்றவர் களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்க்கும் கல்வி நிறுவனத்தில் சேர்க்க முயற்சி செய்வீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் சாதகமாவதால், அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். திடீர் பணவரவு உண்டு. 17-ம் தேதி முதல் குரு 6-ல் மறைவதால் வேலைச்சுமை, தடுமாற்றம் வந்து செல்லும். வியா பாரத்தில் ஏற்றுமதி, இறக்குமதியால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில், அதிகாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள்.

 நாலாபக்கமும் நண்பர்கள் கூட்டம் !

ராசிபலன்கள்

மகரம்: வெளிப்படையாக பேசுபவர் களே! சுக்கிரனும், செவ்வாயும் தவிர மற்ற கிரகங்கள் சாதகமாக இருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நட்பு வட்டம் விரியும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. 17-ம் தேதி முதல் குரு 5-ல் நுழைவதால், உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவர் பாசமழை பொழிவார். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். வியாபாரத்தில், கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்று வீர்கள். உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப் பீர்கள்.

முன்னேற்றப் பாதையில் பிள்ளைகள்!

ராசிபலன்கள்

 கும்பம்: மற்றவர் மனம் புண்படும்படி பேசத் தெரியாதவர்களே! புதனும், சூரியனும் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர் கள். பிள்ளைகளின் திறமைகளை வளர்க்க பயிற்சி வகுப்புகளில் சேர்ப் பீர்கள். 17-ம் தேதி முதல் குருபகவான் 4-ம் வீட்டில் நுழைவதால், வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். ராசி நாதன் சனி பலவீனமாக இருப்பதால்... வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் அந்தரங்க விஷயங் களை விவாதிக்க வேண்டாம்.

 பயணத்தில் புதுமை!

ராசிபலன்கள்

மீனம்: சுற்றத்தாரை அரவணைத்து செல்பவர்களே! 14-ம் தேதி முதல் சூரியன் 3-ல் அமர்வதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அந்யோன்யம் அதிகரிக் கும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 17-ம் தேதி முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால், சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில், அயல்நாடு தொடர் புடைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதி காரிகள் குறை கூறினாலும், சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.