மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள் !

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மே 23-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை

 அவசர முடிவுகள் வேண்டாமே!

ராசி பலன்கள் !

மேஷம்: எதிரிக்கும் உதவும் பரந்த மனம் கொண்டவர்களே! குருபகவான் 2-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், சாதிக்கும் எண்ணம் வரும். வீட்டை புதுப்பிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ராகுவும், கேதுவும் சரியில்லாததால்... எதிலும் ஆர்வ மின்மை, உள்மனதில் அச்சம் வந்து போகும். ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி காலை 10 மணி வரை அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

 உதவும் உள்ளங்கள் உங்கள் பக்கம்!

ராசி பலன்கள் !

ரிஷபம்: உழைப்பால் உயர்பவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளை களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். சூரியனும், குருவும் ராசிக்குள் நிற்பதால்... காரிய தாமதம், உடல் உபாதை ஏற்படலாம். வழக்குகளில் கவனம் தேவை. ஜூன் 5-ம் தேதி காலை 10 மணி முதல் எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். அலு வலகத்தில் அதிக பேச்சு வேண்டாம்.

   வெற்றி மாலை சூடும் நேரம்!

ராசி பலன்கள் !

மிதுனம்: பாசத்துக்கு கட்டுப்பட்டவர்களே! 3-ல் செவ்வாய் வலுவாக நிற்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். முக்கிய கிரகங்கள் 12-ல் மறைந்திருப்பதால்... மன இறுக்கம், அலைச்சல், செலவுகள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியா பாரத்தில் யார் மூலம் ரகசியங்கள் கசி கிறது என்பதை அறிந்து சரியான முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங் களைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

 செல்லும் இடமெல்லாம் சிறப்பு!

ராசி பலன்கள் !

கடகம்: சமத்துவத்துக்காக போராடு பவர்களே! முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் நிற்பதால், எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உல்லாசப் பயணங்கள் செல்வீர்கள். செவ்வாய் 2-ல் நிற்பதால்... பேச்சில் தடுமாற்றம், சகோதர வகையில் கவலை, வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத் தில் உங்களின் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.

 பணப்புழக்கம்... பலே பலே!

ராசி பலன்கள் !

சிம்மம்: அண்டமே சிதறினாலும் அஞ்சாதவர்களே! ராசிநாதன் சூரியன் 10-ல் கேந்திரபலம் பெற்று நிற்பதால், உங்களின் நிர்வாகத் திறன் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றி அடையும். கணவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குரு, சனியின் போக்கு சரியில்லாததால்... மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்லாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

 'குவா குவா’ சத்தம் ஒலிக்கும்!

ராசி பலன்கள் !

கன்னி: நல்லது, கெட்டதை சமமாக பாவிப்பவர்களே! குருபகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு எதிர்பார்த்த வேலை யும் அமையும். பிள்ளை இல்லாத வர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக் கும். பூர்விகச் சொத்தைச் சீர் செய் வீர்கள். 12-ல் செவ்வாயும், ராசிக்குள் சனியும் நிற்பதால்... முன்கோபம், தூக்கமின்மை, வந்து நீங்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

 கம்பீரப் பேச்சு... காரிய வெற்றி!

ராசி பலன்கள் !

துலாம்: நாடி வருவோருக்கு நல்லதைச் செய்பவர்களே! செவ்வாய் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், கம்பீரமாக பேசி காரியங்களை முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். குருவின் போக்கும்... ராகு, கேதுவின் சஞ்சாரமும் சரியில்லாத தால், யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசு காரியம் உடனே முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகை களை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டா லும், சக ஊழியர்களால் சந்தோஷம் உண்டு.

 இனி எல்லாம் சுபமே!

ராசி பலன்கள் !

விருச்சிகம்: மிதமாக யோசித்து, வேக மாக செயல்படுபவர்களே! குரு 7-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் இல்லம் களைகட்டும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். கணவர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப் பார். மே 23-ம் தேதி முதல் 25-ம் தேதி மதியம் 2 மணி வரை சிக்கனமாக இருக்கப் பாருங்கள். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், தர்ம சங்கட மான சூழல் ஏற்படலாம். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டு வீர்கள். உத்யோகத்தில், மூத்த அதிகாரி யின் நம்பிக்கைக்கு உரியவராவீர்கள்.

 பயணத்தால் பரவசம்!

ராசி பலன்கள் !

தனுசு: 'தன் கையே தனக்குதவி’ என்று வாழ்பவர்களே! சூரியன் 6-ல் நிற்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். மே 25-ம் தேதி மதியம் 2 மணி முதல் 27-ம் தேதி வரை எதிர்பார்த்தவை தாமதமாகும். ராசிநாதன் குருபகவான் 6-ல் மறைந் திருப்பதால், ஏமாற்றம், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள் வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

 நினைத்தது கைகூடும் நேரம்!

ராசி பலன்கள் !

மகரம்: வசதி வந்த போதும், பழைய வாழ்க்கையை மறக்காதவர்களே! குரு வலுவாக 5-ல் அமர்ந்திருப்பதால், நினைத்தது நிறைவேறும். வீடு கட்டும் பணி விரைந்து முடியும். பூர்விக சொத்தால் வருமானம் வரும். சுக்கிரன், செவ்வாயின் போக்கு சரியில்லாததால்... உடல் உபாதை, கணவருக்கு அலைச்சல் வந்து போகும். மே 28, 29 ஆகிய தேதிகளில் வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது ஒப்பந் தங்களால் லாபம் பெருகும். உத்யோகத் தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும்.      

 இலவம் பஞ்சு மனசு!

ராசி பலன்கள் !

கும்பம்: உதவும் குணத்தால் உயர்ந்த வர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். கனத்த மனசு, பஞ்சு போல லேசாகும். உங்கள் ரசனைக்கேற்ற சொத்து வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழிகளை சந்திப்பீர்கள். சூரியன் கேதுவுடன் 4-ல் நிற்பதால், முன்கோபம் வரும். கணவ ருக்கு சிறு அலைச்சல் இருக்கும்.அரசு காரியங்கள் தாமதமாக முடியும். மே 30, 31 ஆகிய தேதிகளில் வாக்குவாதங் களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத் தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.    

 செல்வம் வரும்... செலவுகள் துரத்தும்!

ராசி பலன்கள் !

மீனம்: ஒளிவு மறைவில்லாமல் பேசு பவர்களே! சூரியனும், கேதுவும் 3-ல் நிற்பதால், துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்து கொள்வீர்கள். கணவர் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். பணவரவு உண்டு என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத் தும். 7-ல் சனி நிற்பதால் மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். ஜூன் 1, 2 ஆகிய தேதி களில் பொறுமையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதி காரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.