நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!
ராசிபலன்!
ராசிபலன்!
##~##
ன உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவர் நீங்கள். 10-ல் சூரியனும் செவ்வாயும் சாதகமாக இருப்பதால், புது முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணம், உயர்கல்வி முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். சகோதரிக்கு திருமணம் முடியும். ராகுவுடன் நின்ற புதன், 26-ஆம் தேதி முதல், 10-ல் நுழைவதால் உறவினர்கள், பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வராது என்றிருந்த பணம் வந்துசேரும். புதிதாக வீடு- மனை, வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஜனவரி 28, 29 மற்றும் 30-ஆம் தேதி காலை 10:30 மணி வரை சந்திராஷ்டமம்; கவனம் தேவை. குரு 12-ல் மறைந்திருப்பதால் செலவுகள் வந்து போகும். கன்னிப் பெண்களுக்கு, பெற்றோரின்

ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள், மேலிடம் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு புகழ், கௌரவம் உயரும்.

சாதித்துக் காட்டும் தருணம் இது.

ராசிபலன்!

ன்னலம் கருதாதவர் நீங்கள். 8-ல் மறைந்திருந்த உங்கள் யோகாதிபதி புதன், 26-ஆம் தேதி முதல் 9-ல் அமர்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பண வரவு திருப்தி தரும். தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்துப் போவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். உறவினர்களுடனான கசப்பு உணர்வு நீங்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 29-ஆம் தேதி வரை 7-ல் நிற்பதால், பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் ராகுவுடன் சேர்வதால் கை- கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும்.

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். குரு பகவான் 11-ஆம் வீட்டில் நிற்பதால், கைமாற்று கடனை அடைப்பீர்கள். 5-ல் சனி இருப்பதால் மன உளைச்சல், பிள்ளைகளால் டென்ஷன் வந்து போகும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்க்கவும். கன்னிப் பெண்கள், பெற்றோருடன் ஆலோசித்து, எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 30-ஆம் தேதி காலை 10:30  முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம்; அலைச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், தனிஆவர்த்தனம் செய்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில், தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

திட்டமிட்ட காரியங்களில் ஒருசில வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்!

சுற்றியிருப்பவர்களும் சுகமாக வாழப் பாடுபடுவீர்கள். உங்கள் யோகாதிபதி சுக்கிரன் 30-ஆம் தேதி முதல் 7-ல் அமர்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். திடீர் நன்மை உண்டாகும். புது வேலை அமையும். ராசிநாதன் புதன், ஜனவரி 26-ஆம் தேதி முதல், ராகுவை விட்டு விலகி சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், ஓரளவு உடல் நிலை சீராகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். ஒரு சொத்தை காப்பாற்ற, மற்றொரு சொத்தை விற்கவேண்டி வரும். 8-ல் சூரியனும், செவ்வாயும் நிற்பதால் எதிர்மறை சிந்தனைகள், டென்ஷன், தந்தையுடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். சொத்து வழக்குகளில் நிதானம் தேவை. சொத்துகள் வாங்கும்போது, தாய் பத்திரத்தை சரி பார்க்கவும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

கன்னிப் பெண்களின் புதிய முயற்சிகள், சற்று தடைப்பட்டு நிறைவேறும். பிப்ரவரி 1-ஆம் தேதி மாலை 6 மணி முதல், 3-ஆம் தேதி வரை, சந்திராஷ்டமம்; பயணங்களின்போது கவனம் தேவை. அரசியல்வாதிகள், மேலிடம் குறித்த விமரிசனத்தைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். குரு 10-ல் தொடர்வதால், உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். கலைத்துறையினர், சம்பளப் பாக்கிகளை போராடிப் பெறுவீர்கள்.

இங்கிதமான பேச்சால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்!

சமூக விழிப்பு உணர்வு கொண்டவர் நீங்கள். குரு வலுவாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். 3-ல் சனி பகவான் தொடர்வதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். 26-ஆம் தேதி முதல் புதன் 7-ல் அமர்வதால், உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். சகோதர வகையில் உதவியுண்டு. 29-ஆம் தேதி வரை சுக்கிரன் 5-ல் நிற்பதால், புது வாகனம் வாங்குவீர்கள். லோன் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறு விபத்து, அலைச்சல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசுக்கான வரிகளை உடனே செலுத்துங்கள். பிப்ரவரி 4 முதல் 6-ஆம் தேதி மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம்; அவசர முடிவுகள் வேண்டாம். அரசியல்வாதிகள், வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். கன்னிப் பெண்கள், விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களைக் கவர, சில சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத் துறையினர், கடுமையாக முயற்சித்து படைப்புகளை வெளியிடுவீர்கள்.

விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் வேளை இது.  

ராசிபலன்!

வெளிப்படையாகப் பேசுபவர் நீங்கள். ராசிநாதன் சூரியன் 6-ஆம் வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தம்பதிக்கு இடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். செவ்வாய் வலுவாக இருப்பதால் நேர்மறை சிந்தனைகள் தோன்றும். புது நிலம், வீடு வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும்.

குலதெய்வக் கோயிலுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள். புதன் 26-ஆம் தேதி முதல் 6-ல் மறைவதால், நண்பர்களுடன் பகை வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பாதச் சனி தொடர்வதால் உடல் வலி, வீண் டென்ஷன் வந்து போகும். 8-ல் குரு நிற்பதால் அலைச்சல், திடீர் செலவுகள் அதிகரிக்கும். சாதுக்கள் உதவுவர். 6-ஆம் தேதி மாலை 3 மணி முதல், 7-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம்; கவனம் தேவை! அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடம் ஏற்கும். வியாபாரத்தில், புதிய ஒப்பந்தங்களால் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில், அலுவலகத்தின் ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம்

பகிர்ந்துகொள்வார். கலைத் துறையினரின் படைப்புகளை அனைவரும் பாராட்டுவர்.

வாழ்வில் புதிய அத்தியாயம் துவங்கும் நேரம் இது.

ராசிபலன்!

தவிக்காக ஆசைப்படாதவர் நீங்கள். உங்களின் தனாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், துடிப்புடன் செயல்படுவீர்கள். ஓரளவு பண வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. வீடுகட்ட, வங்கிக் கடன் கிடைக்கும். குரு பகவான் வலுவாக இருப்பதால், தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கூடிவரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதன் 26-ஆம் தேதி முதல் 5-ஆம் வீட்டில் நுழைவதால் புதுத் தெம்பு பிறக்கும். உறவினர்கள், நண்பர்களுடனான உரசல் போக்கு மாறும். புதியவர்கள் அறிமுகமாவர்.

5-ல் செவ்வாயும், சூரியனும் நிற்பதால், பிள்ளைகளின் உடல் நலம் பாதிக்கும். கர்ப்பிணிகள் நீண்டதூர பயணங்களைத் தவிர்க்கவும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். ஜென்மச் சனி தொடர்வ

தால், சளித் தொந்தரவு வந்து நீங்கும். சந்திரன் சாதகமாக இருப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட கல்யாணம் கூடிவரும். அரசியல்வாதிகள், விமர்சனத்தைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் பற்றி ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத் துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

அந்தஸ்து உயரும் தருணம் இது.

ராசிபலன்!

தாராளமாகப் தர்மம் செய்பவர் நீங்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். எதிர்காலத்துக்காக முக்கிய திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தார் உங்களது ஆலோசனையை ஏற்பர். வழக்கில் வெற்றி கிட்டும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். சகோதரருக்கு வேலை கிடைக்கும். பாக்கியாதிபதி புதன் சாதகமாக இருப்பதால், விலகிச் சென்றவர்களும் விரும்பி வந்து நட்புறவாடுவர். மதிப்பு கூடும். சூரியன் 4-ல் நிற்பதால் வேலைச்சுமை, முன்கோபம் வந்து நீங்கும். சுக்கிரன் 29-ஆம் தேதி வரை 2-ல் இருப்பதால் குழப்பங்கள் நீங்கும்; வரவேண்டிய பணம் கைக்கு வரும். ஆனால், ஜனவரி 30-ஆம் தேதி முதல் ராகுவுடன் சேர்வதால் சிறு விபத்துகள், ஏமாற்றங்கள் வந்து செல்லும்.

குரு 6-ல் மறைந்திருப்பதால் இனந்தெரியாத கவலை, விமர்சனங்கள் வரும். சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோசிதமாகச் செயல்பட்டு சாதிப்பீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் கடனை நினைத்து வருந்துவீர்கள். அரசியல்வாதிகள், தன்னிச்சையாகச் செயல்பட வேண்டாம். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

சகிப்புத் தன்மையால் முன்னேறும் வேளை இது.

ராசிபலன்!

வெள்ளந்தியானவர் நீங்கள். சூரியன், செவ்வாய், புதன் சாதகமாக இருப்பதால் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பணபலம் உயரும். கௌரவப் பதவி தேடி வரும்.

குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். உடன்பிறந்தவர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் அடகிலிருந்த நகையை மீட்டு, புது ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலர், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

குரு வலுவாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புது வேலை அமையும். புது சொத்து வாங்குவீர்கள். சனி பகவான் வலுவாக இருப்பதால், வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். ராகு- கேது சரியில்லாததால், அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு வந்து விலகும். கன்னிப் பெண்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள்; லாபம் பெருகும்; புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். கலைத் துறையினருக்கு, வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

திடீர் யோகம் தரும் தருணம் இது.

ராசிபலன்!

லாசாரத்தை விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற சொத்து வாங்குவீர்கள். மகனின் கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும்.  பழைய வீட்டை புதுமைப்படுத்துவீர்கள். அயல்நாட்டு நண்பர்களால் ஆதாயம் உண்டு. செவ்வாய் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிகப் அக்கறை காட்டுவார்கள். வழக்கு சாதகமாகும்.

ராகு- கேது சரியில்லாததால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். 4-ல் குரு தொடர்வதால் மன இறுக்கம், தூக்கமின்மை, தாயாருடன் கருத்துமோதல்கள் வந்து செல்லும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனி வலுவாக இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகள், மேலிடத்தை பகைக்கவேண்டாம். கன்னிப் பெண்கள், தடைப்பட்ட கல்வியைத் தொடர்வார்கள்.வியாபாரத்தில், போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழல் அமைதி தரும். கலைத் துறையினருக்கு சம்பளம் உயரும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் நேரம் இது.

ராசிபலன்!

மத்துவத்துக்காகப் போராடுபவர் நீங்கள். குரு பகவான், உங்கள் ராசிநாதனின் சாரத்தில் செல்வதால் நினைத்தது நிறைவேறும். ஒரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் திருமணம் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சுக்கிரன் சாதகமாக இருப்பதால், ஆபரணங்கள் சேரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சிலர், வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சூரியனும், செவ்வாயும் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், வாகன விபத்து, மன உளைச்சல் வந்து செல்லும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

உடன்பிறந்தவர்களை அனுசரியுங்கள். அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில்

சொல்லவேண்டாம். 6-ல் கேது வலுவாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகள், எதிர்கட்சிக்காரர்களை ஆதாரமின்றி விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில், உங்களது உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைக்கும். சக ஊழியர்களும் மரியாதையுடன் நடந்துகொள்வார்கள். கலைத் துறையினருக்கு, திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்

கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்!

காலத்துக்கு ஏற்றபடி காய் நகர்த்துவதில் வல்லவர் நீங்கள். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி தொடரும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். குரு பகவான் 2-ல் நிற்பதால் கல்யாணம், காதுகுத்து என்று வீடு களை கட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். அஷ்டமத்துச்சனி நடைபெறுவதால், மற்றவர் பிரச்னையில் தலையிடாதீர்கள். சூரியனும், செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால் எதிலும் ஒருவிதப் பயம், டென்ஷன் வந்து போகும். அரசு காரியங்கள் தாமதமாகும். வீண் செலவுகளைத் தவிருங்கள். 25-ஆம் தேதி சந்திராஷ்டமம்; நிதானம் தேவை. அரசியல்வாதிகள், மேலிடத்தை அனுசரித்துப் போங்கள். கன்னிப் பெண்கள், பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். முக்கிய வேலைகளை, நீங்களே முன்னின்று முடிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது, அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத் துறையினர், வீண் வதந்திகளை எதிர்கொள்ள நேரிடும்!

உண்மையால் உயரும் தருணம் இது.

ராசிபலன்!

னசாட்சிக்குக் கட்டுப்பட்டவர் நீங்கள். லாப வீட்டில் சூரியனும், செவ்வாயும் நிற்பதால் திடீர் யோகம் உண்டாகும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். முடியாத காரியங்களையும் முடித்துக்காட்டுவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். செல்வாக்கு கூடும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டு. சுக்கிரன் சாதகமாக இருப்பதால், இனிமையான பேச்சால் எல்லோ ரையும் கவர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்திகள் வரும்.

புதன் சாதகமாக இருப்பதால், பால்ய நண்பர்கள் தேடி வருவர். ஜென்ம குருவால் வேலைச்சுமை அதிகரிக்கும். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். 7-ல் சனி தொடர்வதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள், சிறு விபத்துகள், அலைச்சல் வந்து போகும். ஜனவரி 26, 27 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்; நிதானம் தேவை. அரசியல்வாதிகளே, சகாக்கள் உங்களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பர். கன்னிப் பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில், புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில், மதிப்பு கூடும். கலைத் துறையினருக்கு, உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

திடீர் திருப்பங்கள் நிகழும் வேளை இது.

ராசிபலன்!