மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசிபலன்

ஜூன் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை

 திடீர் யோகம்!

ராசிபலன்

மேஷம்: எதிலும் மாற்றத்தை விரும்புபவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால்... வீண் விரயம், மன இறுக்கம் வந்து செல்லும். 15-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் நுழைவதால், திடீர் யோகம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசு வார்கள்.

 நேர்மைக்கு மரியாதை!

ராசிபலன்

ரிஷபம்: தராதரம் அறிந்து பழகு பவர்களே! ராசிநாதன் சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். ஓரளவு பணவரவு உண்டு. ராசிக்குள் குருவும், கேதுவும் தொடர்வதால்... சில நேரங்களில் வெறுப்படைவீர்கள். 6-ம் தேதி முதல் 7-ம் தேதி மதியம் 2 மணி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்   துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். ஆனால், உங்கள் நேர்மைக்கு பாராட்டு கிடைக்கும்.

சாதிக்கும் சமயம்!

ராசிபலன்

மிதுனம்: சமயோஜித புத்தியால் சாதிப்பவர்களே! ராகு வலுவாக 6-ம் வீட்டில் தொடர்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.    கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால்... அலைச்சல் உடல் உபாதை வந்து போகும். 7-ம் தேதி மதியம் 2 மணி முதல் 9-ம் தேதி இரவு 7 மணி வரை காரிய தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம்  செலுத்துவது நல்லது.  

 பணபலம் உயரும்!

ராசிபலன்

கடகம்: மனதில் பட்டதை மறைக்காத வர்களே! குருவும், கேதுவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பணபலம் உயரும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிள்ளை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். 9-ம் தேதி இரவு 7 மணி முதல் 11-ம் தேதி வரை பொறுமை யுடன் செயல்படுங்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால்,  திடீர் பயணங்கள், வீண் செலவுகள்  ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ஃபாரின் செல்லும் பிராப்தம்!

ராசிபலன்

சிம்மம்: தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடர கடன் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 2-ல் சனியும், 10-ல் குருவும் தொடர் வதால்... மறைமுக எதிர்ப்பு, உடல் நலக் கோளாறு வந்து போகும்.12-ம் தேதி முதல் 14-ம் தேதி மதியம் 1 மணி வரை நாவடக்கம் தேவை. வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்கு களை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத் தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

            புகழ் மாலை சூடும் நேரம்!

ராசிபலன்

கன்னி: பாகுபாடு இல்லாமல் பழகுபவர்களே! ராகு வலுவாக 3-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் புகழ், கௌரவம் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஜென்மச் சனி தொடர்வதால், யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 15-ம் தேதி முதல் சூரியன், ராசிக்கு 10-ல் நுழைவதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். 14-ம் தேதி மதியம் 1 மணி முதல் 16-ம் தேதி வரை வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்  யோகத்தில் பதவி உயர்வுடன் இட   மாற்றமும் உண்டு.          

ஆறு மனமே ஆறு!

ராசிபலன்

துலாம்: மூடநம்பிக்கை இல்லாதவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய சிந்தனைகள் பிறக்கும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால், மன ஆறுதல் கிடைக்கும். வெள்ளியி லான பொருட்கள் வாங்குவீர்கள். 8-ல் குருவும், கேதுவும் இருப்பதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தினாலும் அதிலிருந்து மீண்டு வெளியே வருவீர்கள். 17-ம் தேதி முதல் 19-ம் தேதி நண்பகல் வரை யாரிடமும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.  

 ஆளுமைத்திறன்... உச்சத்தில்!

ராசிபலன்

விருச்சிகம்: ஆணவத்துக்கு அடி பணியாதவர்களே! ராசிநாதன் செவ்வாய் 10-ல் வலுவாக நிற்பதால், உங்களின் ஆளுமைத்திறன் மிகவும் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. பிள்ளை  களின் உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். சூரியனின் போக்கு சரியில்லாததால், வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து நீங்கும். 19-ம் தேதி நண்பகல் முதல் நிதானித்து செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்.

பிரச்னைகள் தீரும்...வீடு மெருகேறும்!

ராசிபலன்

தனுசு: எதையும் நேருக்கு நேராக பேசுபவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். 14-ம் தேதி வரை சூரியன் 6-ல் நிற்பதால், அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். 15-ம் தேதி முதல் 7-ல் நுழைவதால், காரிய தாமதம் ஏற்படலாம். 9-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால்... வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக் கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியா மல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.    

        போட்ட திட்டம் பூரணமாகும்!

ராசிபலன்

மகரம்: அலட்டிக் கொள்ளாமல், நினைத்ததை நடத்தி முடிப்பவர்களே! 9-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ல் நுழைவதால், திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். கடனாக கொடுத்த பணம் திரும்பி வரும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால்... வீண் செலவுகள் வந்து போகும். 15-ம் தேதி முதல் சூரியன் 6-ல் நுழைவதால், எதிர்ப்புகள் அடங்கும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள்.                     

முன்யோசனை... முக்கியம்!

ராசிபலன்

கும்பம்: உதவும் குணம் கொண்டவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சவால்களை சமாளிப்பீர்கள். கணவர் உங்களிடம் நல்லபடியாக நடந்து கொள்வார். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அஷ்டமத்துச்சனி தொடர்வதால், முன்யோசனை மிகவும் அவசியம். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

 ஆடை... ஆபரணம்...அழகிய இல்லம்!

ராசிபலன்

மீனம்: லட்சியக் கனவுடன் வாழ்ப வர்களே! செவ்வாய் வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால், திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். 7-ல் சனியும், 3-ல் குருவும் நீடிப்பதால்... எதிலும் பிடிப்பற்ற போக்கு, ஏமாற்றம், வீண் விரயம் வந்து செல்லும். உறவினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரம் சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.