Published:Updated:

குரு பார்வையால் துன்பங்களிலிருந்து விடுபடும் மிதுன ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப்புத்தாண்டு பலன்கள்!

`அஷ்டமச்சனி ஆரம்பிக்கிறதே' என்ற கவலை மிதுன ராசிக்காரர்கள் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்துவது இயல்புதான். ஆனால், குருவின் ஏழாம் பார்வை மிதுன ராசிக்காரர்களுக்கு இருப்பதால் அவர்கள், அந்த மன சஞ்சலத்தை அடையத் தேவையில்லை.

Gemini
Gemini

2020- ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1- ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் மிதுன ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியிடம் கேட்டோம்...

2020-ம் ஆண்டு கும்ப ராசியில் பிறக்கிறது. இது மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கின்றார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால் சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.

Gemini
Gemini

மிதுன ராசிக்காரர்களுக்கு மாற்றங்களையும் புதிய அனுபவங்களையும் தரக்கூடிய ஆண்டாக 2020 அமையப்போகிறது. இதுவரை இருந்த நிலையிலிருந்து ஓர் ஏற்றமான சூழ்நிலை இப்போது உருவாகும். அதேவேளையில் உங்களுக்கு அஷ்டமச்சனி ஆரம்பிக்கக்கூடிய ஒரு சூழலும் நிலவி வருகிறது.

`அஷ்டமச்சனி ஆரம்பிக்கிறதே' என்ற கவலை மிதுன ராசிக்காரர்கள் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்துவது இயல்புதான். ஆனால், குருவின் ஏழாம் பார்வை மிதுன ராசிக்காரர்களுக்கு இருப்பதால் அவர்கள், அந்த மனச்சஞ்சலத்தை அடையத் தேவையில்லை.

பொதுவாக, எட்டாமிடத்தில் சனி இருக்கும்போது சனி பகவான் இருக்கும் ராசிக்குப் பன்னிரண்டாம் ராசியில் ஏதேனும் கிரகம் இருந்தால், சனியின் தாக்கம் இருக்காது என்பது ஒரு ஜோதிட விதி. இதை `கோட்சார வேதை' என்று சொல்லுவார்கள். வேதை என்றால் தடை, துன்பம் என்று பொருள். கோட்சார ரீதியாக நடக்கக்கூடிய ஒரு தடை என்று நாம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சனி
சனி
எடுத்த காரியத்தில் வெற்றிபெறப்போகும் மேஷ ராசி அன்பர்களே... 2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! #Video

இந்த ஆண்டு முழுவதும் குருவின் பார்வை இருப்பதால், இவர்களுக்குத் தடைகள், துன்பங்கள் பெரும்பாலும் இருக்காது. அதே வேளையில் வீடு, தொழில் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கும். ஒரு சிலருக்கு அலுவலக ரீதியாக இடமாற்றங்கள் இருப்பது உறுதி. இந்த மாற்றம் தலைகீழான மாற்றமாக இருக்கும். அதாவது இதுவரை அவர்கள் பார்த்து வந்த வேலையிலிருந்து வித்தியாசமான வேலையைச் செய்வார்கள். இதுவரை சுமாரான வீட்டில் இருந்தவர்கள் மிகவும் ஆடம்பரமான வீட்டில் வசிக்கக்கூடிய வாய்ப்பைப் பெறுவார்கள்.

இந்த மாற்றம் இயல்பான கால மாற்றமாக இருந்தால் அனுமதியுங்கள். ஆனால், இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதை பிடிக்கிறேன் என்று வேலை மாற்றத்தை இந்த ஆண்டு நீங்களாகச் செய்யவேண்டாம். இப்போது இருக்கும் வேலையிலேயே கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு, உங்களின் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். இப்போதைய நிலைமைக்கு அதுதான் மிகவும் சிறந்தது.

குரு
குரு

அஷ்டமச் சனி மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தி பேராசை பெருநஷ்டம் என்னும் விதமாக இங்கிருந்து அங்கு போகலாமா என்று ஒரு மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். அதன் மூலமாக நஷ்டத்தை ஏற்படுத்துவார்.

`அரசனை நம்பி புருஷனைக் கைவிட வேண்டாம்' என்னும் பழமொழியின் அர்த்தம் என்னவென்றால், இதுவும் போய் அதுவும் போய் எதுவும் இல்லாத நிலை உருவாகி விடும், என்பதால்தான் இந்தப் பழமொழியை அனுபவரீதியாக நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எனவே, மிதுன ராசிக்காரர்கள் வீட்டிலுள்ள பெரியவர்களைக் கலந்து ஆலோசித்துக்கொண்டு எந்த ஒரு செயலையும் செய்வது மிகவும் நல்லது.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பைப் பரிமாறிக்கொள்ளுங்கள்.

பூர்வீகச் சொத்து குறித்த சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அவற்றை மிகவும் கவனமாகக் கையாள்வது அவசியம். அதனால் வார்த்தைகளை வித்தியாசமாகப் பேசிவிட்டு, அவற்றில் சிக்கிக் கொள்ளக்கூடாது

அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு அலுவலகத்திலும் பணியாற்றிவிட்டு, வீட்டிலும் அதிகமான வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இதுபோன்ற வேளைகளில் நீங்கள் தியானம் மற்றும் யோகாசன பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது மிகவும் நல்லது.

Signs
Signs

அஷ்டமச்சனியின் தாக்கம் சில வேளைகளில் எட்டிப்பார்க்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட வேளைகளில் அறிவுபூர்வமாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். இறைவழிபாடு மிகவும் துணை நிற்கக்கூடியதாக இருக்கும்.

சிலருக்குச் சொந்த ஊரைவிட்டு வெளிநாடுகளுக்கு வெளியூர்களுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகள் ஏற்படும். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற கீழ்த்திசை நாடுகளுக்குச் செல்லுகிற வாய்ப்பு கிடைக்கும்.

இந்த இரண்டரை ஆண்டுகளில் பங்குச்சந்தை, ஸ்பெகுலேஷன் துறை போன்ற இணையதள வர்த்தகங்களில் மிதுன ராசிக்காரர்கள், கவனமாகக் கால்வைப்பது நல்லது. புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம்.

எந்தச் செயல் செய்யும் போதும் ஒருமுறைக்கு இருமுறை கூடுதலாக முயற்சி செய்து வெற்றிபெற வேண்டியிருக்கும். உதாரணமாகத் திருமணத்தடை உள்ளவர்களுக்கு அலைச்சல் திரிச்சலுக்குப் பிறகே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கோட்சார வேதை காரணமாகவும் குருவின் பார்வை இருப்பதாலும் அஷ்டமச் சனியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்களை மிதுன ராசிக்காரர்கள் பெறுவார்கள் இவர்களுக்கு சின்னச் சின்ன தடைகள் ஏற்பட்டாலும் கடும்முயற்சிதான் இறுதி வெற்றியைத் தரும்.