Published:Updated:

அடுத்த 30 ஆண்டுகளுக்கு அஸ்திவாரம் 2020-ல்தான்... சிம்ம ராசிக்காரர்களுக்குரிய புத்தாண்டு பலன்கள்! #Video

சிம்ம ராசி
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த பொற்காலத்தின் கதவுகள் திறக்கும் காலகட்டமாக இந்த 2020-ம் ஆண்டு அமையவிருக்கிறது.

2020 ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில், சிம்ம ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியிடம் கேட்டோம்...

``2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறக்கிறது. இது, மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.

சிம்மம்
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த பொற்காலத்தின் கதவுகள் திறக்கின்ற காலகட்டமாக இந்த 2020-ம் ஆண்டு அமையவிருக்கிறது.

சிம்ம ராசிக்காரர்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் ஆண்டாக 2020-ம் ஆண்டு அமைந்திருக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் வீட்டின் வாசலுக்கே வந்து உங்களின் தேவைகள் அனைத்தையும் செய்து தரப்போகிறார்.

வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு, குரு, சனி ஆகிய மூன்று கிரகங்களும் மிகச் சிறந்த பலன்களைத் தரக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

குறிப்பாக, இந்த வருடம் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், குரு பகவான் தனுசு ராசிக்கு வந்து ஒன்பதாம் பார்வையாக உங்களின் ராசியைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

ராசியை எப்போதெல்லாம் குரு பார்க்கிறாரோ அப்போதெல்லாம் நம்முடைய மனம் தெளிவான நிலையிலும் உற்சாகத்துடனும் இருக்கும். இதனால் நம்மிடையே பிறக்கும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் புதியதாகவும் நேர்மறையானதாகவும் இருக்கும். இந்த எண்ணங்கள், உங்களின் செயல்பாடுகளில் வெற்றியைக் குவிக்கும் என்பது நிச்சயம்.

Signs
Signs

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்கிற தமிழ் பழமொழி சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மலர்ந்த முகத்துடன் அவர்கள் சமூகத்தில் வலம் வருவார்கள்.

எப்போதும் கலகலப்பாக இருந்துகொண்டு எதிர்காலத்தை தெளிவாகத் திட்டமிட்டு, வெற்றிக்கனி பறிக்கும் ஆண்டாகச் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 2020-ம் ஆண்டு அமையும். எதிரிகளை வெல்லக்கூடிய, நோயற்ற வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு 3, 6 ஆகிய இடங்களில் சனி பகவான் இருக்கும்போது ஏற்படும். அந்த அமைப்பைக் கொடுப்பார். சிம்ம ராசிக்காரர்களின் 6-மிடத்துக்கு, சனி பகவான் ஆண்டின் தொடக்கத்தில் செல்வதால், எதிரிகளை வென்று பகை முடிப்பார்கள்.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியைக் கடந்து செல்கிறார். அப்படிப்பட்ட சனிபகவான், இந்த 30 ஆண்டுகளில் ஏழரை ஆண்டுகள் மட்டுமே நற்பலன்களைச் செய்யக் கூடியவராக இருப்பார். ஆண்டின் தொடக்கம் முதலே உங்களுக்கு நற்பலன்கள் நடக்கத் தொடங்கும்.

Leo
Leo

குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்களின் ராசியைப் பார்ப்பதால், மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும். 2020-ம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும்.

சிம்ம ராசிக்காரர்கள், எதை எதை நினைத்தார்களோ, எதை அடைய ஆசைப்பட்டார்களோ அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய ஆண்டாக அமையும். நீண்டகால திட்டங்களுக்கான தொடக்கப் புள்ளியாக இந்த ஆண்டு அமைந்திருக்கும்.

Signs
Signs

அரசுத் தேர்வு எழுதும் சிம்ம ராசிக்காரர்கள், இந்த ஆண்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு சிம்ம ராசிக்காரர்கள் எப்படி இருக்கப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய ஆண்டாக 2020-ம் ஆண்டு அமையும்.

பிறந்த காலத்தில் நல்ல பலன்கள் அமையாத சிம்ம ராசிக்காரர்களுக்குக்கூட கோட்சார ரீதியான காலகட்டங்கள் வரும்போது சிறந்த பலன்களை அடைவார்கள். அப்படிப்பட்ட ஒரு காலகட்டம், இப்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு வந்திருக்கிறது.

காடு அதிர, சிம்மம் கர்ஜனை செய்யப்போகிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் அமையும்.

இந்த உலகை வெல்வதற்குரிய சகல வலிமையையும் வழங்கக்கூடிய ஆண்டாக சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அமையும். 12 ராசிக்காரர்களில் 2020-ம் ஆண்டு மிகுதியான பலன்களைப் பெறக்கூடிய ராசி என்றால், சிம்ம ராசிதான்.

எதிலும் முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது கைகூட இருக்கிறது. அறிவுசார்ந்த பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவோர், சினிமா, மீடியா போன்றவற்றில் பணியாற்றுவோர் சிறந்த பலன்களைப் பெறுவார்கள்.

சிம்ம ராசி விவசாயிகள், சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள், தொழிலாளிகளென மிகவும் சிரமப்பட்டு வந்தவர்களுக்கெல்லாம் கைதூக்கிவிடும் ஆண்டாக இந்த 2020 -ம் ஆண்டு அமைவது உறுதி.

ஜாதக ரீதியாக தசாபுத்திகள் சிறப்பாக உள்ளவர்கள், தங்கள் வாழ்வில் புகழின் உச்சிக்குச் செல்வார்கள்.

சிம்மத்தில் பிறந்த அனைவரும் ஒரு நல்ல அமைப்பில் இந்த ஆண்டு இருப்பார்கள். ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர் என்ற பாரபட்சமின்றி அனைத்து சிம்ம ராசிக்காரர்களுக்கும் முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

சிம்ம ராசிக்காரர்கள் விரும்பிய வாழ்க்கை உச்சநிலையை இந்த ஆண்டு பெறுவார்கள். கோட்சார ரீதியாக வலிமையான நான்கு கிரகங்களும் இவர்களுக்குச் சாதகமாக இருப்பதே இதற்குக் காரணம்.

12 ராசிக்காரர்களுக்கும் நற்பலன்களை அள்ளித்தரும்  2020... ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்! #Video
எடுத்த காரியத்தில் வெற்றிபெறப்போகும் மேஷ ராசி அன்பர்களே... 2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! #Video
அவமானங்கள் மாறி வெகுமானங்கள் பெருக்கும் 2020... ரிஷப ராசிக்குரிய ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்! #Video
பிறர் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கும் கடக ராசி அன்பர்களுக்கான 2020 புத்தாண்டு பலன்கள்! #Video
அடுத்த கட்டுரைக்கு