Published:Updated:

பூர்வ புண்ணிய யோகத்தைப் பெறும் கும்ப ராசிக்காரர்களின் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

புத்தாண்டு
புத்தாண்டு

கும்ப ராசிக்காரர்கள், தாராளமாகச் செலவு செய்யக்கூடியவர்கள். 'பணத்தை அங்கு கொடுத்தேன், இங்கு கொடுத்தேன்' என்று செலவுசெய்து முடித்துவிட்டு, கடைசி நேரத்தில் என்ன செய்யலாம்... என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

2020 ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில், கும்ப ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்...

2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறந்திருப்பது மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.

Aquarius
Aquarius

கும்ப ராசிக்காரர்களுக்கு, 2020-ம் ஆண்டு மிகச் சிறந்த நன்மைகளைத் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. அதற்குக் காரணம் தங்கம், பணம் ஆகியவற்றுக்கு உரிய கிரகமான குரு பகவான், கும்ப ராசிக்கு லாபஸ்தானமான 11-ம் இடத்தில் இருக்கிறார். ஆகவே, இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்கள் பணமழையில் நனையப்போவது நிச்சயம்.

குரு பகவான் பணத்துக்கு உரிய கிரகம் என்பதுடன், ஒரு மாதத்துக்கு முன்பே உங்களின் ராசிக்கு 11-ம் இடமான தனுசுக்கு வந்துவிட்டார். அவர் இன்னும் 13 மாதங்கள் அங்குதான் இருக்கப் போகிறார். எனவே, இந்தக் காலகட்டம் அவர்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும்.

ஜனவரி மாதம் 24 -ம் தேதி, திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் உங்களின் ராசிக்கு 12-ம் இடமான விரயஸ்தானத்தில் வந்து அமர்கிறார். வரும்போதே, பணத்துக்கு வழி வகுத்து செலவும் செய்யவைப்பார். குரு, பணத்தைக் கொடுப்பார். சனி பணத்தைச் செலவுசெய்யவைப்பார். இந்த ஆண்டு நீங்கள் செய்யக்கூடிய செலவுகளை மிகவும் கவனமாக, நல்ல முதலீட்டில் செய்தீர்களென்றால், உங்களின் எதிர்காலம் மிகவும் சுபிட்சமாக இருக்கும். எந்த அளவுக்கு பணம் வருகிறதோ அந்த அளவு செலவுகளும் இருக்கும். அவற்றை சுபச் செலவுகளாக மாற்றுவது உங்களின் கையில்தான் இருக்கிறது.

New Year Rasipalan 2020
New Year Rasipalan 2020

கும்ப ராசிக்காரர்கள் தாராளமாக செலவுசெய்யக்கூடியவர்கள். 'பணத்தை அங்கு கொடுத்தேன், இங்கு கொடுத்தேன்' என்று செலவுசெய்து முடித்துவிட்டு, கடைசி நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு, கடந்த மூன்று வருடங்களாகத் தொழில் ரீதியாகப் பெரிதாக வருமானம் இல்லை.

11-ம் இடத்தில் சனி இருந்தாலும், இந்த மூன்று ஆண்டுகளாகப் பெரிதாக எந்த வருமானமும் இல்லை. கும்ப ராசிக்காரர்கள் மிகவும் நிதானமாக, எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வார்கள்.

பொருளாதாரரீதியாக இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது. பணம் இருந்தால், இந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் தீர்த்துவிடலாம். உங்களுக்குப் பணம் பல வழிகளில் வந்து சேரும்.

வயது கடந்தும் திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு, இந்த வருடம் திருமணம் நிச்சயமாகும். நீண்டகாலமாக புத்திர பாக்கியம் இல்லாமல் கவலைப்பட்டு வந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

Aqurius
Aqurius

அதிலும் குறிப்பாக, அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். ஐந்தாம் இடத்தை புத்திரகாரகனான குரு பகவான் பார்க்கும்போது ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஜோதிட விதி.

ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு, மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்கும். 5 -ம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம் என்பதால், 5-ம் இடத்தை குரு பகவான் பார்க்கும்போது, பூர்வபுண்ணிய யோகம் கிடைக்கும். இதனால் கேட்கும் இடத்தில் உதவிகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டத்தை தேடித்தேடி துரத்திக் களைத்துப் போனவர்களுக்கு, இந்த ஆண்டு அதிர்ஷ்டம் சிறப்பான முறையில் வேலை செய்யும். சொத்து வழக்குகளில் கோர்ட், கேஸ் எனப் போய் வந்தவர்கள், இப்போது கோர்ட்டுக்கு வெளியிலேயே சமரசமாகப் போகும் மனநிலையிலும் மாற்றங்கள் நிகழும்.

Saturn
Saturn

வழக்கில் வெற்றி, கடன் தொல்லைகள் நீங்குதல், எதிரிகள் உங்களின் பக்கம் வந்து சமரசம் பேசுதல் என நிறையவே நல்ல பலன்கள் காத்திருக்கின்றன. சிலர், பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்குவார்கள். சொந்த வீடு வாங்கிக் குடியேறுவார்கள்.

வெளிமாநிலம், வெளிநாடுகளில் பணியாற்றியவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துசெட்டிலாகக் கூடிய நிலை இப்போது ஏற்படும். கும்பம், ஸ்திர ராசி என்பதால், மனைவி குழந்தைகளுடன் சுபிட்சமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

ஏழரைச் சனி நடக்கப்போகிறது என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. சொந்த ராசியான கும்பத்துக்கு சனி பகவான் எப்போதும் கெடுதல் செய்ய மாட்டார். கடுமையான கெடுபலன்களை நிச்சயம் செய்ய மாட்டார். வாழ்க்கையின் சில தத்துவங்களைப் புரியவைப்பார்.

50 வயதிலிருப்பவர்கள், தொழில் ரீதியாக முன்னேற்றத்தை அடைவார்கள். 60 வயதைத் தாண்டியவர்களுக்கு உடல் உபாதைகளெல்லாம் சரியாகி, ஆரோக்கியத்தைப் பெறுவார்கள். 30 முதல் 40 வயதிலிருப்பவர்கள், வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள்.

20 வயதிலிருப்பவர்களுக்கு வாழ்க்கையின் தொடக்கத்திலேயே ஏழரைச் சனி நடப்பதால், அவர்களுக்கு சில படிப்பினைகளைக் கொடுப்பார். வாழ்க்கை தொடங்கும் என்கிற நிலை வரும்போது, தடைகளை எளிதாகத் தாண்டும் வலிமையைத் தருவார்.

2020, எதிர்காலத்தில் நன்றாக இருக்கக்கூடிய அஸ்திவார அமைப்பை இளைஞர்களுக்கு ஏற்படுத்தும். இருப்பினும் நற்பலன்களே மிகுதியாக நிகழும் ஆண்டாக 2020 இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு