Published:Updated:

12 ராசிக்காரர்களுக்கும் நற்பலன்களை அள்ளித்தரும் 2020... ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்! #Video

புத்தாண்டு
புத்தாண்டு

கும்ப ராசிநாதனான சனிபகவான் இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கின்றார். குரு சுபத்துவமான கிரகமென்பதால் சுபத்துவ பலன்களே மிகுதியாக இருக்கும்.

2020 - ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்

2020 - ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டின் பொதுப்பலன்கள் பற்றி ஜோதிடக் கலை அரசு ஆதித்யகுருஜியிடம் கேட்டோம்...

2020-ம் ஆண்டு கும்பராசியில் பிறக்கிறது. இது மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்பராசிநாதனான சனி இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கின்றார். குரு சுபத்துவமான கிரகமென்பதால் சுபத்துவ பலன்களே மிகுதியாக இருக்கும்.

 சனிபகவான்
சனிபகவான்

ராசிச் சக்கரத்தில், மகரமும் கும்பமும் சனியின் ஆதிக்கத்தைப் பெற்றவை. ஜோதிட ரீதியாக உலக நாடுகளில் மகரமும் கும்பமும் இந்தியா, சீனா ஆகியவை மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளாகும். இந்த இரு நாடுகளுக்கும் மிகவும் நன்மை பயக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மக்கள்தொகைக்குக் காரகத்துவம் பெற்றவர் சனி பகவான்.

2020-ம் ஆண்டு பிறக்கும் கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் ஜனவரி 24-ம் தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அதாவது, ராசிக்கு 12-ம் இடத்துக்கு சனி பகவான் வருகிறார். இப்படிப்பட்ட அமைப்பிலிருக்கும்போது எப்போதுமே மிகச்சிறந்த நற்பலன்களை மக்களுக்கு வழங்குவார்.

Planets
Planets

கும்ப ராசியில் ஆண்டு பிறப்பதால் ஆட்சியாளர்கள், மக்கள் அனைவருக்குமே ஒரு சுபிட்சமான நிலை நிலவும். குறிப்பாக, சனி பகவான் கீழ்த்தட்டு மக்கள், தொண்டர்கள் ஆகியோருக்குக் காரகத்துவம் பெறுகிறார். எனவே, சமுதாயத்தில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் மிகவும் நல்ல நிலைமைக்கு வரக்கூடிய ஓர் அமைப்பாக இந்த 2020-ம் ஆண்டு அமையும்.

விவசாயிகளைப் பொறுத்தவரை சீராக மழை பெய்து விவசாயிகளுக்கு ஒரு நல்ல சுபிட்சமான வாழ்வை அமைத்துத் தரும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். இயற்கை விவசாயம் சிறப்பான முறையில் தழைத்தோங்கும். விவசாயம் சார்ந்த உபத்தொழில்களான கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு போன்றவையும் சிறப்பான முறையில் வளர்ச்சியடையும்.

Rasi
Rasi
நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 6 முதல் 12 வரை #VikatanPhotoCards

ஆட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டடத் தொழிலாளர்கள், தினசரி கூலிகளாக இருப்பவர்களுக்கெல்லாம் மிகச் சிறப்பான நன்மைகள் நடைபெறும்.

குருவுடன் புதனும் சேர்ந்து இருப்பதால் கணிப்பொறித் துறையினர், பத்திரிகைத்துறையினர், மீடியா துறையினர் திரைப்படத் துறையினர் வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்குச் செல்வார்கள்.

பெண்களுக்கு... குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு இந்த ஆண்டு சிறப்பு மிக்க ஆண்டாக அமைந்திடும். சுக்கிரன் மிகவும் வலுவான இடத்தில் அமர்ந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம். பெண்கள் புதிதாக ஆடை ஆபரணங்கள், நகைகள் போன்றவற்றை வாங்குவார்கள். பிள்ளைகள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும்விதமாக நடந்துகொள்வார்கள்.

New Year 2020
New Year 2020
ஆதீன குருபரம்பரைக்குப் புகழ் சேர்த்த குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்... வாழ்வும் பணிகளும்!

இளைஞர்கள், பெற்றோர்களிடம் தங்களின் விருப்பங்களை தொழில், திருமணம் எதுவாக இருந்தாலும் நல்லவிதமாக எடுத்துக்கூறி, அவர்களின் விருப்பத்துடன் அவற்றைச் செயல்படுத்தக்கூடிய ஆண்டாக இந்த 2020-ம் ஆண்டு அமையும்.

12 ராசிகளில் குருவின் பார்வையைப் பெறுகின்ற மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் மிகச் சிறப்பான நிலையை இந்த ஆண்டு எய்துவார்கள். இயற்கை சுபரான குரு பகவான் எப்போதெல்லாம் ராசியைப் பார்க்கிறாரோ அவரின் பார்வை பெறும் ராசிகளுக்கு நற்பலன்களும் பலமும் கிடைக்கும்.

குருவின் பார்வை இருப்பதால் சிந்தனையில் தெளிவும் எதையும் செய்து முடிக்கும் ஆர்வமும் மனதில் எழும். இதனால், அவர்கள் ஈடுபடுகிற காரியங்களில் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் குருவின் பார்வை இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

எதையும் சாதித்து வெற்றிபெறக்கூடிய அமைப்பில் இருப்பார்கள். குறிப்பாக, எதிர்மறையான சிந்தனைகள் மனதிலிருந்து விலகி நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும்.

இவர்களுக்கு அடுத்தபடியாக சிறப்பாக இருக்கப்போகும் ராசிகள் தனுசு, ரிஷபம். தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியும் ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனியும் நடந்து வருவதால், அவர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஏராளமான துன்பங்களையும் அவமானங்களையும் அடைந்து வந்தார்கள். அந்த நிலையெல்லாம் இப்போது மாறி ஒரு சுபிட்சமான ஒரு எதிர்காலத்தை நோக்கி அவர்கள் பயணிப்பார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஏராளமான சிரமங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வந்தனர். அந்த நிலையெல்லாம் மாறி, இனி புதிய விடியலை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டமாக 2020-ம் ஆண்டு அமையும். இவர்கள், குடும்ப வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் பல்வேறுபட்ட சிரமங்களையும் தடைகளையும் சந்தித்து வந்தனர், அந்த நிலை இனி மாறும்.

கடக ராசிக்காரர்களுக்கு மத்திமமான பலன்கள் நடக்கும். நன்மையும் இல்லாமல் தீமையும் இல்லாமல் சராசரியாக வாழ்க்கையின் போக்கு இருக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் மேன்மையான பலன்கள் நிகழும். துலாம் ராசிக்காரர்களில் திருமணத்தடை இருந்தவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தைபாக்கியம் கிடைக்கப் பெறாமல் இருந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

Rasipalan
Rasipalan

மகரம், கும்பம், மீனம் ஆகிய மூன்று ராசிகளுக்கும் நல்ல நல்ல பலன்கள் சிறப்பாக அரங்கேறும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் வழக்கத்தைவிட கூடுதலான முயற்சியையும் உழைப்பையும் தங்கள் தொழிலில் போட வேண்டியிருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு