Published:Updated:

2022 குருப்பெயர்ச்சி ரிஷப ராசி பலன்கள்

ரிஷபம்
பிரீமியம் ஸ்டோரி
ரிஷபம்

14.4.22 முதல் 22.4.23 வரை

2022 குருப்பெயர்ச்சி ரிஷப ராசி பலன்கள்

14.4.22 முதல் 22.4.23 வரை

Published:Updated:
ரிஷபம்
பிரீமியம் ஸ்டோரி
ரிஷபம்

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்டவர் நீங்கள். குரு 14.4.22 முதல் 22.4.23 வரை, லாப வீட்டில் வந்து அமர்கிறார். திட்டமிட்ட வேலைகள் தடையில்லாமல் முடியும். பணப் பற்றாக்குறை நீங்கும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

2022 குருப்பெயர்ச்சி 
ரிஷப ராசி பலன்கள்

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பயணங் களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிட்டும்.

சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். மூத்த சகோதர வகையில் மனக்கசப்பு நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே... நல்ல பதில் வரும். தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் சலசலப்புகள் நீங்கும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதமாக முடியும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்

உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், இளைய சகோதரர் உங்களின் பாசத்தை உணர்வார். தங்கைக்கு நல்ல வரன் அமையும். சொந்த ஊரில் மதிப்பு உயரும். குரு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை இல்லாத தம்பதிக் குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனின் திருமணத்தைக் கோலா கலமாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தாய்வழிச் சொந்தங்களால் ஆதாயம் உண்டு.

குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மன உளைச்சல், விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வர். அடிமனதில் பய உணர்வு நீங்கும். அரசியவாதிகள், தலைமைக்கு நெருக்கம் ஆவார்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்

14.4.22 முதல் 29.4.22 வரை உங்களுக்கு அஷ்டம லாபாதிபதியான குரு, பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால், திடீர்ப் பயணங்கள், செலவுகள், சகோதரருடன் மனத்தாங்கல், சிறு சிறு விபத்துகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. குடும்பத் தில் அதிருப்தி நிலவும். பண இழப்பு வரும்.

30.4.22 முதல் 24.2.23 வரை சனி பகவானின் உத்திரட்டாதியில் குரு செல்வதால், வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு வெற்றி அடையும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால், செலவுகள் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்கள் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வ தால் திடீர் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. பிள்ளைகளின் கல்வி, திருமணம், உத்தியோகம் திருப்திகரமாக அமையும்.

வியாபாரத்தில்

புதிய மாற்றங்களுடன் புது முதலீடுகள் செய்வீர்கள். இரும்பு, எலெக்ட் ரானிக்ஸ், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புது சலுகைகளை அறிவிப்பீர்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரர்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில்

உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். பதவி - சம்பள உயர்வு எல்லாம் உண்டு. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சம்பளத்துடன் கூடிய புது வாய்ப்பு வரும்; ஏற்றுக் கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்பாராத முன்னேற்றத்தையும் அதிரடி வளர்ச் சியையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: பூசம் நட்சத்திர நாளில் காஞ்சி அருகிலுள்ள தக்கோலத்துக்குச் சென்று, அங்குள்ள ஈசனையும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். முதியோருக்கு உதவுங்கள்; உங்கள் வாழ்வில் நல்லது நடக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism