Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு கன்னி ராசிபலன்கள்!

கன்னி
பிரீமியம் ஸ்டோரி
News
கன்னி

2022 ஆங்கிலப் புத்தாண்டு கன்னி ராசிபலன்கள்

நேர்மறையாக செயல்படுவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது 2022 புத்தாண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பண வரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும்.

கன்னி
கன்னி

ங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை இனி கைக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ராசிக்கு 5-ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

13.4.2022 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்ப தால் வீண் பழி, ஏமாற்றம், அலைச்சல், டென்ஷன், வேலைச் சுமை, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் வழக்கு வேண்டாமே. எதிரிகளில் சிலர் நண்பர்கள் ஆவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர் கள். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். எனினும் கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள்.

14.4.2022 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பாதியிலேயே நின்றுபோன வேலைகள் முழுமையடையும். சுப நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். வீட்டில் ஈகோ பிரச்னைகள் நீங்கும். மகனுக்கு நல்ல குடும்பத்தில் பெண் அமையும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னை தீரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

வருடம் பிறக்கும்போது 3-ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். பூர்வீகச் சொத்தைச் சீரமைப்பீர்கள். பிதுர்வழிச் சொத்தை அடைவதில் தடைகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும்.

9-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். 21.3.2022 முதல் 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

ஆண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் தொடர்வதால், பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் பேசுவார்கள். அவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய முயலுங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டியது வரும்.

வியாபாரிகளே! பழைய கடையைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரம் அறிந்து புதிய சரக்குகள் கொள்முதல் செய்யுங்கள். வியாபார நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் தேடி வரும். கண்ணாடி, துணி, ரியல் எஸ்டேட், பெட்ரோல், டீசல் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகஸ்தர்களே! உங்களின் திறமை களை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். இழுபறியாக இருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும்; சம்பளம் கூடும். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்டு மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாகவும் அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கி, அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: கோபிசெட்டிபாளையத்தில் கோயில் கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பனை வழிபட்டு வாருங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்; வாழ்வில் பிரச்னைகள் நீங்கும்.